உள்ளடக்கத்துக்குச் செல்

மா மெரி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா மெரி மக்கள்
Mah Meri People
Orang Mah Meri
Maq Betiseq / Besisi
மலேசியா சிலாங்கூர் கோலா லங்காட் மா மெரி மக்களின் கிராமத் தலைவர் (1906)
மொத்த மக்கள்தொகை
2,120 (2010)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா (கேரி தீவு, சிலாங்கூர்)
மொழி(கள்)
மா மெரி மொழி, மலாய் மொழி
சமயங்கள்
காடு & இயற்கை ஆன்மீகம், இசுலாம், கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
செமாக் பெரி மக்கள், செமலாய் மக்கள், தெமோக் மக்கள்

மா மெரி அல்லது மா மெரி மக்கள் (ஆங்கிலம்: Mah Meri People; மலாய்: Orang Mah Meri ; Maq Betiseq; Besisi ) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் ஒராங் அஸ்லி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்; சிலாங்கூர் மாநிலத்தின் கேரி தீவை மையமாகக் கொண்டவர்கள். இருப்பினும் மா மெரி மக்களில் சிலர் தஞ்சோங் சிப்பாட், சுங்கை பீலேக், பாகான் லாலாங் போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.[2]

மா மெரி மொழியில் மா (Mah) என்றால் மக்கள்; மெரி (Meri) என்றால் வனம் என்று பொருள்படும். மலாய் மொழியில் மா மெரி என்றால் செதில்கள் (Bersisik) அல்லது கரையோர மக்கள் (Pesisir). இந்த மா மெரி மக்களின் கைவினை வேலைப்பாடுகள் உலக அளவில் கலைத்துவம் வாய்ந்ததாக அறியபடுகிறது.[2][3][4]

பொது

[தொகு]
மா மெரி மக்கள்: ஜொகூர், 1906.
மா மெரி மக்கள்: ஜொகூர், 1906.

மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[5]

மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[6][7] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் செனோய் பிரிவின் கீழ் மா மெரி மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.

வன மனிதர்கள்

[தொகு]

மா மெரி என்றால் வன மனிதன் என்று பொருள்படும். தொடக்கக் காலத்தில் இவர்கள் பெசிசி மக்கள் (Orang Besisi) என அழைக்கப்பட்டனர். இன்றைய காலத்தில், மா பெத்திசெக் மக்கள் (Ma Betisek) என்று அழைக்கப் படுகின்றனர். மா பெத்திசெக் என்றால் செதில்கள் கொண்ட மனிதர்கள் என்று பொருள்படும்.[8]

மா மெரி மக்கள் கறுப்பு நிறம்; சுருள் கூந்தல்; கறுப்பு நிறக் கண்கள், 156 செ.மீ முதல் 168 செ.மீ உயரம்; மற்றும் 50 கிலோ முதல் 65 கிலோ உடல் எடை கொண்டவர்கள். இவர்கள் மங்கோலிய இனம் (Mongoloid) சார்ந்த மக்களின் சந்ததியினராக இருக்கலாம் எனும் கருத்தும் உள்ளது. உடல் தோற்ற ஒற்றுமைகள் இரு இனக் குழுக்களுக்கும் உள்ளன.[8]

வரலாறு

[தொகு]

மா மெரி மக்கள் தொடக்கக் காலங்களில் ஜொகூர் மாநிலத்தில்கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தனர். 1920-ஆம் ஆண்டுகளில், ஜொகூரில் கடல் கொள்ளையர்களின் தொடர் தாக்குதல்கள் நடைபெற்றன. அவற்றில் இருந்து தப்பிக்க எண்ணிய மா மெரி மக்கள், சிப்பாங் பகுதிக்கு வந்தனர். அப்படி வந்தவர்கள், சுங்கை பீலேக், பாகான் லாலாங் பகுதியில் உலு சுச்சோ (Hulu Chuchoh) எனும் புறநகர்ப் பகுதியில் ஒரு புது குடியிருப்பை உருவாக்கினர்.[9]

1940-களில் மலாயாவில் சப்பானிய ஆட்சியின் போது, மா மெரி மக்கள் சிலாங்கூர், தஞ்சோங் சிப்பாட், புக்கிட் பாங்கோங் கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்கு இட மாற்றம் செய்யப்பட்ட மா மெரி மக்கள் இன்றும் அங்கு வசித்து வருகின்றனர்.

தற்போது மா மெரி மக்கள் சிலாங்கூர் கடலோர மேற்குப் பகுதியில் சுங்கை பீலேக் நகரில் இருந்து கேரி தீவு வரை காணப் படுகின்றனர். கேரி தீவில், கம்போங் சுங்கை பும்பூன் (Kampung Sungai Bumbun), கம்போங் சுங்கை ஜுடா (Kampung Sungai Judah), கம்போங் சுங்கை குராவ் (Kampung Sungai Kurau), கம்போங் கெபாவ் லாவுட் (Kampung Kepau Laut), கம்போங் ரம்பாய் (Kampung Rambai) எனும் ஐந்து கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.[10]

மா மெரி மக்கள் வழிபாடு

[தொகு]
கேரி தீவில் மா மெரி பெண்மணி, சூன் 2009.
ஜொகூர் மா மெரி குடும்பம், 1906.

மா மெரி மக்கள் ஆன்மவாதத்தை (Animism) பின்பற்றுபவர்கள். மனிதன் வாழும் இந்த உலகில் நேர்மாறாக பனிரெண்டு மணி நேர ஆவி உலகம் இருப்பதாக மா மெரி மக்கள் நம்புகின்றனர். மா மெரி மக்கள் சமுதாயச் சடங்குகளை ஆவி உலகக் காலப்படி செய்து முடிக்கின்றனர்.

மனித உலகமும் ஆவி உலகமும் தனித்தனியாக இயங்குவதாக மா மெரி மக்கள் நம்புகின்றனர். ஆவி உலகில் உலாவும் ஓர் ஆவி, மனித உலகத்திற்கு ஒரு குழந்தையின் வழியாகப் பிறந்து, பின்னர் இறப்பின் வழியாக ஆவி உலகிற்கு மீண்டும் செல்வதாக நம்புகின்றனர்.

கைவினைத் திறன்கள்

[தொகு]

மா மெரி மக்கள் மர வேலைப்பாடுகளில் திறன் மிக்கவர்கள். இவர்களின் மரவேலைப்பாடுகள், பெரும்பாலும் சதுப்பு நிலக் காடுகளில் வளரும் சீமைத்தேக்கு (Mahogany) மரங்களால் ஆனவை. இவர்கள், கைவினைப் பொருட்களான கூடைகள், வளையல்கள், கைப்பைகள் போன்றவற்றைப் பின்னி விற்பனை செய்கிறார்கள். கைவினைப் பொருட்களைச் செய்வதில் திறன் மிக்கவர்கள். இவர்களின் கைவினைப் பொருட்கள் உலகளாவிய நிலையில் பிரபலம் அடைந்துள்ளன.[2]

மோயாங் (Moyang) எனும் அவர்களின் சந்ததியினர் முகமூடிகளையும்; அவர்களின் புராணக் கதை உருவகங்களையும் மரச் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். மரச் சிற்பங்களை வன ஆவிகளுக்குப் படையலாகப் படைக்கின்றனர். அத்துடன் அந்த மரச் சிற்பங்களை காடுகள்; மற்றும் ஆற்றங்கரைகளில் வைத்து வழி படுகின்றனர்.[11]

மா மெரி கலைக்கூடம்

[தொகு]

இந்தப் பூர்வக்குடிகள் ஒரு காலத்தில், ஏறக்குறைய 700 வடிவ முகமூடிகளைச் செய்து கொண்டிருந்தனர். ஏறக்குறைய 100 கலைஞர்கள் இந்த முகமூடிகளைச் செய்வதில் வல்லுனர்களாக இருந்துள்ளனர். ஒவ்வொரு முகமூடியும் ஒரு முன்னோரைக் குறிப்பதாக அவர்களின் நம்பிக்கை இருந்தது. தற்போது 100 வடிவங்களில் முகமூடிகள் செய்யப்படுகின்றன. அவற்றைச் செய்ய முப்பதுக்கும் குறைவான தேர்ச்சி பெற்றவர்களே இருக்கிறார்கள் என்றும் அறியப்படுகிறது.[12]

மா மெரி மக்கள் செதுக்கிய மரச் சிற்பங்களும், முக மூடிகளும் கேமரன் மலை தானா ராத்தாவில் ஒரு கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கேரி தீவிலும் இவர்களுக்கான கலைக்கூடம் உண்டு. மா மெரியின் மர வேலைப்பாடுகள் உலகத்தரம் வாய்ந்ததாக யுனெஸ்கோ நிறுவனத்தின் (UNESCO) சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளது.[13]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  2. 2.0 2.1 2.2 "The Mah Meri people are one of the 18 tribes of Orang Asli (indigenous people) living in West Malaysia. Most of them reside in Pulau Carey, Selangor. The Mah Meri are known for their wood carvings and also for the richness of their songs and dances". PUSAKA. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  3. "'We cannot afford to destroy any culture': Mah Meri Indigenous group wants action from concerned agencies". Yahoo News (in ஆங்கிலம்). 2 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  4. Wander, Ramble and. "Malaysia: The Beauty of the Mah Meri". Ramble and Wander (in English). பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "A Systematic Review on the Mah Meri People in Malaysia" (PDF). Human Resource Management Academic Research Society. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  6. "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
  7. Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  8. 8.0 8.1 Project, Joshua. "The Mah Meri (Mah meaning people and Meri meaning forest), originally known as the Besisi, also call themselves Ma Betisek, which means, "people with fish scales". The Mah Meri are one of the nineteen Orang Asli people groups of Peninsular Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  9. "Kampung Hulu Chuchoh, Selangor". pihuluchuchoh.digicbc.com. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  10. "Sungai Bumbun Orang Asli Village is a village of Orang Asli people from the Mahmeri tribe". Sungai Bumbun. 6 January 2018. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  11. "mah-meri-cultural-village – Malaysian Indigenous Culture". Malaysian Indigenous Culture. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  12. தேடல்கள், யோகியின் (17 July 2019). "யோகியின் தேடல்கள்....: 'மா மேரி' பழங்குடியினர் ஒரு நோக்கு-கட்டுரை". யோகியின் தேடல்கள்.... பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  13. "Panggung Rakyat: Learn about the Mah Meri people, their customs and stories - BASKL". 24 November 2021. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.

சான்று நூல்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mah Meri people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா_மெரி_மக்கள்&oldid=4090654" இலிருந்து மீள்விக்கப்பட்டது