கலிமந்தான்
கலிமந்தான் Kalimantan | |
---|---|
பிராந்தியம் | |
போர்னியோ தீவில் இந்தோனேசியா கலிமந்தான் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°S 114°E / 1°S 114°E | |
நாடு | இந்தோனேசியா |
பிராந்தியம் | மேற்கு கலிமந்தான் மத்திய கலிமந்தான் தெற்கு கலிமந்தான் கிழக்கு கலிமந்தான் வடக்கு கலிமந்தான் |
பெரிய நகரங்கள் | பாலிக் பாப்பான் பஞ்சார்மாசின் பலாங்கராயா பொந்தியானாக் சமாரிண்டா தாரகான் தஞ்சோங் செலோர் |
மக்கள்தொகை (2020 புள்ளிவிவரங்கள்)[1] | |
• மொத்தம் | 1,66,25,796 |
வாகன குறியீட்டு எண் | DA; KB; KH; KT; KU |
HDI | 0.708 (High) |
ஐ.எஸ்.ஓ 3166 | ID-KA |
கலிமந்தான் (ஆங்கிலம்: Kalimantan; மலாய்: Kalimantan; இந்தோனேசியம்: Kalimantan (wilayah Indonesia); சீனம்: 加里曼丹) என்பது போர்னியோ தீவில் இந்தோனேசியாவின் பகுதியாகும். போர்னியோ தீவின் 73% நிலப்பரப்பினை இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதி கொண்டுள்ளது. கலிமந்தான் நிலப்பரப்பு 544150 ச.கி.மீ. ஆகும். 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 16625796 ஆகும்.[2]
கலிமந்தானின் வடக்கிலும், வடமேற்கிலும் மலேசியாவின் கிழக்கு மலேசியா பிரதேசத்தின் சபா, சரவாக் மாநிலங்களும் மற்றும் புருணை நாடும் உள்ளன.[2]
2019-இல், இந்தோனேசியாவின் அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), இந்தோனேசியாவின் தலைநகர் கலிமந்தானுக்கு மாற்றப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். சனவரி 2022-இல் இந்தோனேசிய நாடாளுமன்றம் அந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் தலைநகர் மாற்றம் 10 ஆண்டுகள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[3][4]
பெயர்க் காராணம்
[தொகு]சமசுகிருத மொழியில் காலமந்தனா (Kalamanthana) என்பதற்கு மிகவும் சூடானது (Burning Weather Island) என்று பொருள். உள்ளூர் மக்கள் இப்பகுதியை கலிமந்தான் என அழைக்கிறார்கள்.[5]
போர்னியோவின் கிழக்குப் பகுதியின் பழங்குடியின மக்கள், 16-ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய ஆய்வாளர் ஜார்ஜ் டி மெனெஸ் (Jorge de Menezes) என்பவரை முதன்முதலாகத் தொடர்பு கொண்டபோது, அவர்களின் தீவை புலு கிலேமந்தன் (Pulu K'lemantan) அல்லது கலிமந்தான் (Kalimantan) என்று குறிப்பிட்டனர்.[6][7]
கலிமந்தானில் இந்தோனேசியாவின் மாநிலங்கள்
[தொகு]இந்தோனேசியாவில் உள்ள 33 மாநிலங்களில், ஐந்து மாநிலங்கள் கலிமந்தான் பகுதியில் உள்ளன. 1945-ஆம் ஆண்டில் இருந்து 1956-ஆம் ஆண்டு வரையில் கலிமந்தான் ஒரே ஒரு மாநிலமாக நிர்வகிக்கப்பட்டது. அதன் பின்னர் 1956-ஆம் ஆண்டில், கிழக்கு கலிமந்தான், தெற்கு கலிமந்தான் மற்றும் மேற்கு கலிமந்தான் என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
பின்னர் 1957-ஆம் ஆண்டில், மத்திய கலிமந்தான் மாநிலம் தற்போதுள்ள தெற்கு கலிமந்தான் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 25 அக்டோபர் 2012 வரை, வடக்கு கலிமந்தான் மாநிலம், கிழக்கு கலிமந்தான் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்படும் வரை நான்கு மாநிலங்கள் மட்டுமே இருந்தன.[8]
கலிமந்தான் மாநிலங்கள்
[தொகு]மாநிலம் | பரப்பளவு (km2) | மக்கள் தொகை (2020)[9] |
அடர்த்தி கி.மீ2 (2020) |
மாநில தலைநகரம் |
பெரிய நகரம் |
---|---|---|---|---|---|
மேற்கு கலிமந்தான் West Kalimantan Kalimantan Barat |
147,307.00 | 5,414,390 | 36.8 | பொந்தியானாக் | பொந்தியானாக் |
மத்திய கலிமந்தான் Central Kalimantan Kalimantan Tengah |
153,564.50 | 2,669,969 | 17.4 | பாலங்காராயா | பாலங்காராயா |
தெற்கு கலிமந்தான் South Kalimantan Kalimantan Selatan |
38,744.23 | 4,073,584 | 105.1 | பஞ்சார் பாரு | பஞ்சார் மைசின் |
கிழக்கு கலிமந்தான் East Kalimantan Kalimantan Timur |
127,346.92 | 3,766,039 | 29.6 | சாமரின்டா | பாலிக் பாப்பான் |
வடக்கு கலிமந்தான் North Kalimantan Kalimantan Utara |
72,275.12 | 701,814 | 9.7 | தஞ்சோங் செலோர் | தாராக்கான் |
மொத்தம் | 539,237.77 | 16,625,796 | 30.8 | - | பஞ்சார் மைசின் |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1971 | 51,54,774 | — |
1980 | 67,23,086 | +30.4% |
1990 | 90,99,874 | +35.4% |
1995 | 1,04,70,843 | +15.1% |
2000 | 1,13,31,558 | +8.2% |
2005 | 1,25,41,554 | +10.7% |
2010 | 1,42,97,069 | +14.0% |
2015 | 1,53,20,017 | +7.2% |
2020 | 1,66,25,796 | +8.5% |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ 2.0 2.1 "Kalimantan". Britannica. பார்க்கப்பட்ட நாள் 2008-02-26.
- ↑ "Indonesia president proposes to move capital to Borneo | Reuters". web.archive.org. 2021-07-16. Archived from the original on 2021-07-16. பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Nusantara will replace Jarkarta as the new capital of Indonesia". 18 January 2022.
- ↑ "Central Kalimantan Province". archipelago fastfact. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
- ↑ "Notice historique du royaume Banjarmasin (Bornéo) par M. le Baron T. Van Capellen, lieutenant d'artillerie , aide-de-camp de S. Exc. le gouverneur-général des indes néerlandaises" [Historical record of the Banjarmasin Kingdom (Borneo) by Baron T. Van Capellen, lieutenant of artillery, aide-de-camp of His Excellency, the Governor General of the Dutch Indies]. Le Moniteur des Indes-Orientales et Occidentales [The Monitor of the East and West Indies] (in பிரெஞ்சு). The Hague, Netherlands: Belinfant Brothers. 1847. pp. 164.
- ↑ "A Discourse Delivered at a Meeting of the Society of Arts and Sciences in Batavia, on the Twenty-fourth day of April 1813, being the Anniversary of the Institution, by the Honorable Thomas Stamford Raffles, President.". Verhandelingen van het Bataviaasch Genootschap, der Kunsten en Wetenschappen [Treatises of the Society of Arts and Sciences in Batavia]. Vol. 7. Batavia, Dutch East Indies: A. H. Hubbard. 1814. p. 21.
- ↑ Central Kalimantan
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
மேலும் படிக்க
[தொகு]- Vltchek, Andre (June 3, 2017). Indonesian Borneo is Finished: They Also Sell Orangutans into Sex Slavery.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kalimantan
- போர்னியோ தீவில் கொல்லப்பட்ட ஓர் இலட்சம் ஒராங் ஊத்தான் குரங்குகள்
- MacKinnon, Kathy; Hatta, Gusti; Mangalik, Arthur; Halim, Hakimah (1996). The Ecology of Kalimantan. Periplus Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780945971733.