உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்லிஸ் மாநில ஆட்சிக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்லிஸ் மாநில ஆட்சிக்குழு
Perlis State Executive Council
Majlis Mesyuarat Kerajaan Negeri Perlis
2023–தற்போது
உருவான நாள்22 நவம்பர் 2022
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்முகமட் சுக்ரி ரம்லி
பெரிக்காத்தான் (PN) பாஸ் (PAS)
நாட்டுத் தலைவர்பெர்லிஸ் இராஜா சிராஜுதீன்
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
14 / 15
எதிர் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்கான் ஆய் லிங்
பாக்காத்தான் அரப்பான் (PH)பிகேஆர் (PKR)
வரலாறு
Legislature term(s)15-ஆவது பெர்லிஸ் மாநிலச் சட்டமன்றத் தொடர்

பெர்லிஸ் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Perlis State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Perlis (MMKN) என்பது மலேசியா பெர்லிஸ் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். பெர்லிஸ் இராஜா அவர்களால் நியமிக்கப்பட்ட பெர்லிஸ் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் பெர்லிஸ் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

பெர்லிஸ் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.

பெர்லிஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பெர்லிஸ் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெர்லிஸ் இராஜாவால் நியமிக்கப் படுகிறார்கள். பெர்லிஸ் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை; மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்[தொகு]

அரசாங்கப் பதவி பெயர்
மாநிலச் செயலாளர் அசுனோல் சாம் சாம் (Hasnol Zam Zam Ahmad)
மாநிலச் சட்ட ஆலோசகர் வான் செப்ரி காசிம் (Wan Jeffry Kasim)
மாநில நிதி அதிகாரி முகமது இசுமாயில் (Muhammad Ismail)

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல்[தொகு]

முகமட் சுக்ரி ஆட்சிக்குழு (2022)[தொகு]

     பெரிக்காத்தான் நேசனல் (PN) (8)

16 நவம்பர் 2023 முதல் பெர்லிஸ் ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள்:[1][2]

பெயர் துறை கட்சி சட்டமன்றத் தொகுதி பதவி தொடக்கம் பதவி முடிவு
முகமட் சுக்ரி ரம்லி
(Mohd Shukri Ramli)
(மந்திரி பெசார்)
  • நிர்வாகம் மற்றும் நிதி
  • முதலீடு மற்றும் பன்னாட்டு வர்த்தகம்
  • பொருளாதார திட்டமிடல் மற்றும் தொழில் வளர்ச்சி
  • நிலம் மற்றும் இயற்கை வளங்கள்
  • பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு
  • புதிய வளர்ச்சி மையத்தின் மேம்பாடு
பெரிக்காத்தான்
(பாஸ்)
சாங்லாங் சட்டமன்றத் தொகுதி 22 நவம்பர் 2022 16 நவம்பர் 2023
  • நிர்வாகம் மற்றும் நிதி
  • முதலீடு மற்றும் பன்னாட்டு வர்த்தகம்
  • பொருளாதார திட்டமிடல் மற்றும் தொழில் வளர்ச்சி
  • நிலம் மற்றும் இயற்கை வளங்கள்
  • பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு
16 நவம்பர் 2023 பொறுப்பில் உள்ளார்
ரசாலி சாத்
(Razali Saad)
  • விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்
  • கிராமப்புற வளர்ச்சி
  • வறுமை ஒழிப்பு
  • பெருந்தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள்
சிம்பாங் எம்பாட் சட்டமன்றத் தொகுதி 25 நவம்பர் 2022 16 நவம்பர் 2023
  • விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்
  • கிராமப்புற வளர்ச்சி
  • பெருந்தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள்
  • உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோரியல்
16 நவம்பர் 2023 பொறுப்பில் உள்ளார்
பக்ருல் அன்வர் இசுமாயில்
(Fakhrul Anwar Ismail)
  • வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி
  • வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள்
  • உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர்
  • தொழில்முனைவோர் மேம்பாடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்
பிந்தோங் சட்டமன்றத் தொகுதி 25 நவம்பர் 2023 16 நவம்பர் 2023
அசுருல் இம்ரான் அப்துல் சலீல்
(Asrul Aimran Abd Jalil)
  • வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி
  • மனித வள மேம்பாடு
  • வறுமை ஒழிப்பு
காயாங் சட்டமன்றத் தொகுதி 16 நவம்பர் 2023 பொறுப்பில் உள்ளார்
வான் பதரியா வான் சாத்
(Wan Badariah Wan Saad)
  • பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு
  • சுற்றுலா
  • நலன் மற்றும் பேரிடர் நிவாரணம்
  • கலாசாரம், கலை மற்றும் பாரம்பரியம்
மாத்தா ஆயர் சட்டமன்றத் தொகுதி 25 நவம்பர் 2022 16 நவம்பர் 2023
  • பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு
  • சுற்றுலா
  • நலன்
  • கலாசாரம், கலை மற்றும் பாரம்பரியம்
16 நவம்பர் 2023 பொறுப்பில் உள்ளார்
முகமது அசுமிர் அசிசான்
(Mohammad Azmir Azizan)
  • இசுலாமிய மதம்
  • கல்வி
  • இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
  • மனித வள மேம்பாடு
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு
சந்தான் சட்டமன்றத் தொகுதி 25 நவம்பர் 2022 16 நவம்பர் 2023
  • இசுலாமிய மதம்
  • கல்வி
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு
  • அலால் தொழில்
16 நவம்பர் 2023 Incumbent
இசிசாம் இப்ராகீம்
(Izizam Ibrahim)
  • உள்கட்டமைப்பு வசதிகள்
  • போக்குவரத்து
  • எல்லை உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு
  • ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பு மற்றும் பொது புகார்
பெரிக்காத்தான்
(பெர்சத்து)
தித்தி திங்கி சட்டமன்றத் தொகுதி 25 நவம்பர் 2022
மெகாட் அசிரத் அசன்
(Megat Hashirat Hassan)
  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு
  • சுற்றுச்சூழல்
  • உயிரியத்தொழில் மற்றும் பச்சை தொழில்நுட்பம்
  • சமூக ஒற்றுமை
  • ஆரோக்கியம்
பாவு சட்டமன்றத் தொகுதி 16 நவம்பர் 2023
  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்
  • சுற்றுச்சூழல்
  • உயிரியத்தொழில் மற்றும் பச்சை தொழில்நுட்பம்
  • சமூக ஒற்றுமை
  • ஆரோக்கியம்
  • பேரிடர் நிவாரணம்
16 நவம்பர் 2023 பொறுப்பில் உள்ளார்
வான் சிக்ரி அப்தார் இசாக்
(Wan Zikri Afthar Ishak)
  • இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
  • வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள்
  • தொழில்முனைவோர் மேம்பாடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்
  • புதிய வளர்ச்சி மையத்தின் வளர்ச்சி
  • ஆக்கப்பூர்வமான பொருளாதாரம்
தம்புன் தூலாங் சட்டமன்றத் தொகுதி

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dua ADUN dilantik, seorang digugurkan barisan Exco baharu Perlis". Sinar Harian. 2023-11-16. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  2. https://www.bharian.com.my/berita/nasional/2022/11/1031515/6-adun-pn-angkat-sumpah-exco-perlis

வெளி இணைப்புகள்[தொகு]