உள்ளடக்கத்துக்குச் செல்

செரி அமான் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரி அமான் (P202)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Sri Aman (P202)
Federal Constituency in Sarawak
செரி அமான் மக்களவைத் தொகுதி
(P202 Sri Aman)
மாவட்டம்செரியான் மாவட்டம் செபுயாவ் மாவட்டம் செரி அமான் மாவட்டம் லிங்கா மாவட்டம் பாந்து மாவட்டம்
வட்டாரம்செரியான் பிரிவு சமரகான் பிரிவு செரி அமான் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை50,164 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசெரி அமான் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்செரியான்; அசா செயா கோத்தா சமரகான்
பரப்பளவு2,678 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1987
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்டோரிஸ் சோபியா பிராடி
(Doris Sophia Brodi)
மக்கள் தொகை62,863 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1990
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

செரி அமான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sri Aman; ஆங்கிலம்: Sri Aman Federal Constituency; சீனம்: 斯里阿曼国会议席) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவு; செரியான் பிரிவு; செரி அமான் பிரிவு ஆகிய 3 பிரிவுகளில்; செரியான் மாவட்டம்; செபுயாவ் மாவட்டம்; செரி அமான் மாவட்டம்; லிங்கா மாவட்டம்; பாந்து மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P202) ஆகும்.[5]

செரி அமான் மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1990-ஆம் ஆண்டில் இருந்து செரி அமான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

செரி அமான் பிரிவு

[தொகு]

செரி அமான் பிரிவு (Sri Aman Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். முன்பு செரி அமான் பிரிவு; சரவாக்கின் இரண்டாம் பிரிவின் (Second Division) ஒரு பகுதியாக இருந்தது. இது முன்பு சிமாங்காங் மாவட்டம் (Simanggang District) என்று அழைக்கப்பட்டது.[7]

1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட மலேசியாவின் மாநிலப் பிரிவுகள் முறை (Division) இன்றும் நீடிக்கிறது. முன்பு சரவாக்கில் ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.

மாலுடாம் தேசியப் பூங்கா

[தொகு]

செரி அமான் பிரிவின் மொத்த பரப்பளவு 5,466.7 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபு பிரிவின் மக்கள் தொகை 111,400. இன ரீதியாக, மக்கள்தொகை பெரும்பாலும் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் மக்களாகும். இவர்களில் சீனர் மக்கள் தான் பெரும்பான்மையில் உள்ளனர்.

செரி அமான் பிரிவில் பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (Batang Ai National Park) உள்ளது; மாலுடாம் தேசியப் பூங்கா (Maludam National Park) ஆகிய புகழ் வாய்ந்த தேசியப் பூங்காக்கள் சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.

செரி அமான் மக்களவைத் தொகுதி

[தொகு]




செரி அமான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  மலாயர் (12.4%)
  சீனர் (16.9%)
  இதர இனத்தவர் (0.8%)





செரி அமான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.28%)
  பெண் (49.72%)

செரி அமான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.29%)
  21-29 (20.53%)
  30-39 (19.05%)
  40-49 (16.28%)
  50-59 (16.05%)
  60-69 (12.49%)
  70-79 (6.78%)
  80-89 (2.03%)
  + 90 (0.5%)
செரி அமான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செரி அமான் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
8-ஆவது மக்களவை P163 1990-1995 டேனியல் தாஜம் மிரி
(Daniel Tajem)
பாரிசான் நேசனல்
(சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS)
9-ஆவது மக்களவை P175 1995-1999 ஜிம்மி லிம்
(Jimmy Lim @ Jimmy Donald)
10-ஆவது மக்களவை P176 1999-2004 பாரிசான் நேசனல்
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)
11-ஆவது மக்களவை P202 2004-2008
12-ஆவது மக்களவை 2008-2013 மாசிர் குஜாட்
(Masir Kujat )
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018
2018-2019 சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)
2019-2022 சரவாக் ஐக்கிய கட்சி (PSB)
2022 சுயேச்சை
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் டோரிஸ் சோபியா பிராடி
(Doris Sophia Brodi)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
டோரிஸ் சோபியா பிராடி
(Doris Sophia Brodi)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)14,13144.2744.27 Increase
வில்சன் எந்தபாங்
(Wilson Entabang)
சரவாக் ஐக்கிய கட்சி (PSB)10,09231.6231.62 Increase
மாசிர் குஜாட்
(Masir Kujat)
சுயேச்சை (Independent)5,67317.7717.77 Increase
தாய் வெய் வெய்
(Tay Wei Wei)
பாக்காத்தான் (PH)2,0216.3329.85
மொத்தம்31,917100.00
செல்லுபடியான வாக்குகள்31,91798.36
செல்லாத/வெற்று வாக்குகள்5321.64
மொத்த வாக்குகள்32,449100.00
பதிவான வாக்குகள்50,16463.637.18
Majority4,03912.6512.65
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "Sri Aman Division, formerly known as Simanggang or Second Division, was established on 1 June 1873". web.archive.org. 19 October 2006. Archived from the original on 19 October 2006. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]