உள்ளடக்கத்துக்குச் செல்

சபா தாயக ஒற்றுமை கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபா தாயக ஒற்றுமை கட்சி
Homeland Solidarity Party Sabah
Parti Solidariti Tanah Airku
ڤرتي سوليدريتي تانه ا
沙巴立新黨
சுருக்கக்குறிSTAR
நிறுவனர்ஜெப்ரி கித்திங்கான்
தலைவர்ஜெப்ரி கித்திங்கான்
குறிக்கோளுரைநாம் இல்லையென்றால் வேறு யார்? இப்போது இல்லையென்றால், எப்போது?
(Kalau bukan kita, siapa lagi? Kalau bukan sekarang, bila lagi?)
(If not us, who else? If not now, when?)
தொடக்கம்1 சூலை 2016
பிரிவுசபா மக்கள் சீர்திருத்தக் கட்சி[1][2]
சபா மக்கள் நீதிக் கட்சி
முன்னர்சரவாக் மக்கள் சீர்திருத்தக் கட்சி
தலைமையகம்கோத்தா கினபாலு, சபா
கொள்கைசபா பிராந்தியவாதம்
தேசியக் கூட்டணிபெரிக்காத்தான் நேசனல் (2020–2022)
நிறங்கள்     வெளிர் நீலம், சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு
பண்Bintang Borneo
மலேசிய மேலவை:
0 / 70
மலேசிய மக்களவை:
1 / 26
சபா மாநில சட்டமன்றம்:
6 / 79
சபா முதலமைச்சர்கள்
0 / 13
தேர்தல் சின்னம்
இணையதளம்
www.starsabah.org

சபா தாயக ஒற்றுமை கட்சி (ஆங்கிலம்: Homeland Solidarity Party Sabah; மலாய்: Parti Solidariti Tanah Airku) (STAR) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். ஜோசப் பைரின் கித்திங்கானின் சகோதரர் ஜெப்ரி கித்திங்கான் என்பவரால் 1 சூலை 2016 அன்று இந்தக் கட்சி நிறுவப்பட்டது.[3]

2016-இல், சபா மாநிலத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய சபா கூட்டணியின் (United Sabah Alliance) (USA) நான்கு உறுப்புக் கட்சிகளில் சபா தாயக ஒற்றுமை கட்சியும் ஒன்றாகும்.

பொது

[தொகு]

அந்தக் காலக் கட்டத்தில் (2016), சபா மாநிலத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய சபா கூட்டணி (United Sabah Alliance) அமைப்பின் இதர கட்சிகள்:

வரலாறு

[தொகு]

2018 சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, சபா தாயக ஒற்றுமை கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்து சபா மாநில அரசாங்கத்தை அமைத்தது.[4] இருப்பினும், பாரிசான் நேசனல் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி, சபா பாரம்பரிய கட்சிக்கு (Parti Warisan Sabah) தங்கள் ஆதரவை வழங்கியதால், மாநில அரசாங்கம் அதிகாரத்தை இழந்தது.

பின்னர் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஆதரவுடன் பாரிசான் நேசனல் அரசாங்கம் மாற்றப்பட்டது. சபா தாயக ஒற்றுமை கட்சி, பின்னர் சபா மக்கள் கூட்டணியின் (GRS) ஒரு பகுதியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

சேவை

[தொகு]

ஐக்கிய நாடுகள் அவை, யுனெஸ்கோ மூலமாகவும்; மற்றும் அனைத்து வரலாற்று ஆவணங்கள் மூலமாகவும் சபா மக்களின் உரிமைகளை இந்தக் கட்சி தீவிரமாக ஆய்வுகள் செய்து பாதுகாத்து வருகிறது.[5]

நிலைப்பாடு

[தொகு]

2022-ஆம் ஆண்டு, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் தலைமையிலான மத்திய கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தை சபா மக்கள் கூட்டணி ஆதரிக்க முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, பெரிக்காத்தான் நேசனல் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து டிசம்பர் 5, 2022 அன்று சபா தாயக ஒற்றுமை கட்சி வெளியேறியது. அடுத்தக் கட்டமாக சபா முற்போக்கு கட்சியும் (Sabah Progressive Party - SAPP) கட்சியும் பெரிக்காத்தான் நேசனல் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.[6]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மாநிலம் # தொகுதி உறுப்பினர் கட்சி
சபா P180 கெனிங்காவ் ஜெப்ரி கித்திங்கான் STAR
மொத்தம் சபா (1)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "STAR Fully Committed To USA And Sabah's Full Autonomy – Jeffrey Kitingan". SabahKini. 11 October 2015. Archived from the original on 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 22 April 2018.
  2. Jenne Lajiun (15 July 2016). "Reformed, rebranded STAR now Sabah-based party". The Borneo Post. http://www.theborneopost.com/2016/07/15/reformed-rebranded-star-now-sabah-based-party-2/. 
  3. Julia Chan (14 July 2016). "Jeffrey Kitingan announces new party name, disavows partnership in Saksama". The Malay Mail. http://www.themalaymailonline.com/malaysia/article/jeffrey-kitingan-announces-new-party-name-disavows-partnership-in-saksama. 
  4. Chok Simyee (10 May 2018). "31 elected BN may unite under PBS". The Borneo Post. http://www.theborneopost.com/2018/05/10/31-elected-bn-may-unite-under-pbs/. 
  5. Olivia Miwil (24 July 2021). "Kitingan proposes int'l justice system for Borneo's Dayak community". New Straits Times - Nation. https://www.nst.com.my/news/nation/2021/07/711178/kitingan-proposes-intl-justice-system-borneos-dayak-community. 
  6. "Sabah STAR quits Perikatan". The Star. 5 December 2022. பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_தாயக_ஒற்றுமை_கட்சி&oldid=4069658" இலிருந்து மீள்விக்கப்பட்டது