சரவாக் தேசிய கட்சி
சரவாக் தேசிய கட்சி Sarawak National Party Parti Kebangsaan Sarawak ڤرتي كبڠسأن سراوق 砂拉越國民黨 | |
---|---|
சுருக்கக்குறி | SNAP |
தலைவர் | எட்மன்ட் இஸ்டேன்ட்லி ஜுகோல் (Edmund Stanley Jugol) |
தொடக்கம் | 10 ஏப்ரல் 1961 |
சட்ட அனுமதி | 2013 |
கலைப்பு | 17 சனவரி 2013 |
பின்னர் | சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி புதிய சரவாக் தேசிய கட்சி |
தலைமையகம் | கூச்சிங், சரவாக் |
தேசியக் கூட்டணி | மலேசிய கூட்டணி (1963–66) பாரிசான் நேசனல் (1976–2004) பாக்காத்தான் ராக்யாட் (2010–2011) |
நிறங்கள் | நீலம், அரக்கு, மஞ்சள், வெள்ளை, சாம்பல் |
சரவாக் தேசிய கட்சி (ஆங்கிலம்: Sarawak National Party; மலாய்: Parti Kebangsaan Sarawak) (SNAP) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் இருந்த ஓர் அரசியல் கட்சி; தற்போது செயலிழந்த அரசியல் கட்சியாகும்.
1963 முதல் 1966 வரை மலேசிய கூட்டணியின் உறுப்பினர் கட்சியாகவும், 1976 முதல் 2004-இல் அந்தக் கட்சி வெளியேற்றப்படும் வரையில் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் உறுப்பினராகவும் இருந்தது.[1]
ஏப்ரல் 10, 1961-இல் நிறுவப்பட்ட இந்தக் கட்சி, சரவாக் மாநிலத்தில் தயாக்கு பழங்குடி மக்களின் மிகப் பழைமையான அரசியல் கட்சி என அறியப்படுகிறது.[2]
பொது
[தொகு]இந்தக் கட்சியின் முதல் பொதுச்செயலாளர் இஸ்டீபன் காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan) ஆவார். இவர் ஒரு மருத்துவமனை உதவியாளராகப் பணிபுரிந்தவர் ஆவார். பின்னர் அவர் இதே கட்சியின் தலைவராகவும் சரவாக்கின் முதல் முதலமைச்சராகவும் (1963-1966) பொறுப்பு வகித்தார்.
இந்தக் கட்சி 2004 மலேசியப் பொதுத் தேர்தலிலும்; 2006-ஆம் ஆண்டு, 2011-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சியாகப் போட்டியிட்டது.
பதிவு நீக்கம்
[தொகு]ஏப்ரல் 2010 முதல் ஏப்ரல் 2011 வரை, அப்போதைய கூட்டாட்சி எதிர்க்கட்சியான பாக்காத்தான் ராக்யாட் (PR) கூட்டணியில், இந்தச் சரவாக் தேசிய கட்சி இணைந்து இருந்தது.[3]
5 நவம்பர் 2002 அன்று, இந்தக் கட்சியை மலேசியச் சங்கங்களின் பதிவாளர் (Registrar of Societies) பதிவு நீக்கம் செய்தார்.[4] இந்தக் கட்சி தன்னுடைய தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதாக 17 சனவரி 2013 அன்று மலேசிய உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.[5]
மேலும் காண்க
[தொகு]- சரவாக் மக்கள் கட்சி
- சரவாக் மக்கள் சீர்திருத்தக் கட்சி
- சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி
- மலேசியாவின் அரசியல்
- மலேசிய அரசியல் கட்சிகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SNAP Finally Snaps Off From Pakatan". Bernama. 7 May 2011. http://my.news.yahoo.com/snap-finally-snaps-off-pakatan-114929569.html.
- ↑ Sarawak’s 45th Anniversary, by lovebell, 28 July 2008, Kuching Catcity[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Andy Chua (24 April 2010). "DAP: Sarawak Pakatan formed to promote two-party system". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2010/4/24/nation/6125445&sec=nation.
- ↑ "Sarawaks Snap deregistered by ROS". Malaysiakini. 5 November 2002. https://www.malaysiakini.com/news/13569.
- ↑ "Federal Court upholds ROS' decision to de-register Sarawak National Party". The Star (Malaysia). 17 January 2013. https://www.thestar.com.my/news/nation/2013/01/17/federal-court-upholds-ros-decision-to-deregister-sarawak-national-party.