உள்ளடக்கத்துக்குச் செல்

கெனிங்காவ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெனிங்காவ் (P180)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Keningau (P180)
Federal Constituency in Sabah
கெனிங்காவ் மக்களவைத் தொகுதி
(P180 Keningau)
மாவட்டம்கெனிங்காவ் மாவட்டம்
தம்புனான் மாவட்டம்
உட்பகுதி பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை87,588 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகெனிங்காவ் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கெனிங்காவ்; தம்புனான்; பிங்கோர், லியாவான்
பரப்பளவு2,231 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      சபா மக்கள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்ஜெப்ரி கித்திங்கான்
(Jeffrey Kitingan)
மக்கள் தொகை129,882 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

கெனிங்காவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Keningau; ஆங்கிலம்: Keningau Federal Constituency; சீனம்: 根地咬联邦选区) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு; கெனிங்காவ் மாவட்டம், தம்புனான் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P180) ஆகும்.[5]

கெனிங்காவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து கெனிங்காவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கெனிங்காவ் மாவட்டம்

[தொகு]

கெனிங்காவ் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெனிங்காவ் நகரம். கெனிங்காவு மாவட்டம் 3,533 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதன் மேற்கில் குரோக்கர் தேசியப் பூங்கா; மற்றும் தென் கிழக்கில் துருஸ்மாடி மலையும் (Mount Trus Madi) எல்லைகளாக உள்ளன.

சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவு, மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது. சபா மாநிலத்தின் பரப்பளவில் 24.9%; அதாவது 18,298 சதுர கி.மீ.; சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 14.7% கொண்டு உள்ளது. உட்பகுதி பிரிவில் உள்ள மிகப் பெரிய நகரம் கெனிங்காவ்.[7]

கெனிங்காவ் நகரம்

[தொகு]

கெனிங்காவ் நகரம் என்பது சபா மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரம் ஆகும். மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தாலும்; தம்புனான், தெனோம் ஆகிய இரு பெரும் நகரங்களுக்கும் இடையில் இந்த நகரம் அமைந்து உள்ளது.

கெனிங்காவ் நகரத்தில் முக்கியமாக கடசான், மூருட், சீனர்கள், பஜாவ் மக்கள் வசிக்கின்றனர். செம்பனைத் தோட்டங்களில் கணிசமான அளவிற்கு இந்தோனேசிய மக்கள் பணிபுரிகின்றனர். ஒரு காலத்தில் இலவங்கப்பட்டை மற்றும் வெப்பமண்டல மரங்களுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்கியது.[8]

கெனிங்காவ் மக்களவைத் தொகுதி

[தொகு]




கெனிங்காவ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9]

  மலாயர் (12.6%)
  சீனர் (11.9%)
  இதர இனத்தவர் (2.6%)





கெனிங்காவ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.39%)
  பெண் (49.61%)

கெனிங்காவ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.87%)
  21-29 (26.5%)
  30-39 (24.82%)
  40-49 (15.81%)
  50-59 (12.44%)
  60-69 (8%)
  70-79 (2.83%)
  80-89 (1.13%)
  + 90 (0.6%)
கெனிங்காவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கெனிங்காவ் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P127 1974-1977 இசுடீபன் ராபர்ட் எவன்ஸ்
(Stephen Robert Evans)
பாரிசான் நேசனல்
அசுனோ
1977-1978 அரிஸ் சாலே
(Harris Salleh)
பாரிசான் நேசனல்
(சபா மக்கள் முன்னணி) (BERJAYA)
5-ஆவது மக்களவை 1978-1982 இசுடீபன் ராபர்ட் எவன்ஸ்
(Stephen Robert Evans)
பாரிசான் நேசனல்
அசுனோ
6-ஆவது மக்களவை 1982-1986 அகமத் சா உசைன் தம்பக்காவ்
(Ahmad Shah Hussein Tambakau)
பாரிசான் நேசனல்
(சபா மக்கள் முன்னணி) (BERJAYA)
7-ஆவது மக்களவை P142 1986-1990 ஜோசப் பைரின் கித்திங்கான்
(Joseph Pairin Kitingan)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய சபா கட்சி) (PBS)
8-ஆவது மக்களவை 1990-1995 காகாசான் ராக்யாட்
(ஐக்கிய சபா கட்சி) (PBS)
9-ஆவது மக்களவை P157 1995-1999
10-ஆவது மக்களவை 1999-2004 ஐக்கிய சபா கட்சி (PBS)
11-ஆவது மக்களவை P180 2004-2008 பாரிசான் நேசனல்
(ஐக்கிய சபா கட்சி) (PBS)
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018-2020 ஜெப்ரி கித்திங்கான்
(Jeffrey Kitingan)
சரவாக் சீர்திருத்தக் கட்சி (STAR)
2020–2022 சபா மக்கள் கூட்டணி (GRS)
(சரவாக் சீர்திருத்தக் கட்சி) (STAR)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஜெப்ரி கித்திங்கான்
(Geoffrey Kitingan)
சபா மக்கள் கூட்டணி
(GRS)
23,15542.2042.20 Increase
கிரேலியா கில்லோட்
(Grelydia Gillod)
பாக்காத்தான்
(PH)
15,09927.5227.52 Increase
ரசினின் கூடிஸ்
(Jake Nointin)
மக்களாட்சி கட்சி
(KDM)
9,59817.4917.49 Increase
மார்க்கோஸ் சித்தோன்
(Rasinin Koutis)
சபா பாரம்பரிய கட்சி
(Heritage)
7,02012.7918.95
மொத்தம்54,872100.00
செல்லுபடியான வாக்குகள்54,87298.79
செல்லாத/வெற்று வாக்குகள்6701.21
மொத்த வாக்குகள்55,542100.00
பதிவான வாக்குகள்87,58862.6516.37
Majority8,05614.6814.57 Increase
      சபா மக்கள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "Keningau is the most prominent district in the interior part of Malaysian state of Sabah. Just like most other districts in Sabah, it is a multi-racial place with Dusun & Murut being the major ethnics". www.borneotrails.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  8. "Keningau was named after koningau (cinnamon), a popular spice used by natives for their rituals and also cooking. Cinnamon from Keningau was much sought after in markets overseas". keningautheguide.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
  9. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]