உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா கினபாலு (P172)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Kota Kinabalu (P172)
Federal Constituency in Sabah
கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி
(P172 Kota Kinabalu)
மாவட்டம்கோத்தா கினபாலு மாவட்டம்;
பெனாம்பாங் மாவட்டம்
மேற்கு கரை பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை74,059 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள் கோத்தா கினபாலு
பரப்பளவு26 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1966
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்சான் பூங் கின்
(Chan Foong Hin)
மக்கள் தொகை114,202 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Kinabalu; ஆங்கிலம்: Kota Kinabalu Federal Constituency; சீனம்: 亚庇国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, கோத்தா கினபாலு மாவட்டம்; பெனாம்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P172) ஆகும்.[5]

கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கோத்தா கினபாலு மாவட்டம்

[தொகு]

கோத்தா கினபாலு மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா கினபாலு நகரம்.

சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா கினபாலு மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவை மையமாகக் கொண்டுள்ளது. கோத்தா கினபாலு மாவட்டம் 350 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது

2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்தா கினபாலு மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 5,00,425. கோத்தா கினபாலு மாவட்டத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவின் பழைய பெயர் 'ஜெசல்டன்' (Jesselton). 1890-களில் அது ஒரு மீனவர் கிராமமாக இருந்தது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் புதிய நிர்வாக மையத்திற்கு ஜெசல்டன் என்று பெயர் வைக்கப்பட்டது.[7]

கோத்தா கினபாலு மக்களவைத் தொகுதி

[தொகு]




கோத்தா கினபாலு தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  சீனர் (67%)
  இதர இனத்தவர் (3.4%)





கோத்தா கினபாலு தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.03%)
  பெண் (50.97%)

கோத்தா கினபாலு தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (3.32%)
  21-29 (14.06%)
  30-39 (19.12%)
  40-49 (18.19%)
  50-59 (16.55%)
  60-69 (16.09%)
  70-79 (8.69%)
  80-89 (2.85%)
  + 90 (1.12%)
கோத்தா கினபாலு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கோத்தா கினபாலு தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9]
3-ஆவது மக்களவை P109 1971-1973 பாங் தெட் சுங்
(Pang Tet Tshung)
சபா சீனர் சங்கம்
1973-1974 பாரிசான் நேசனல்
(சபா சீனர் சங்கம்)
தொகுதி நீக்கம்; காயா தொகுதி உருவாக்கம்
காயா; தஞ்சோங் அரு; தொகுதிகளில் இருந்து மறு உருவாக்கம்
11-ஆவது மக்களவை P172 2004-2008 இயீ மோ சாய்
(Yee Moh Chai)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய சபா கட்சி)
12-ஆவது மக்களவை 2008-2013 இயூ கிங் சியூ
(Hiew King Cheu)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை 2013-2018 வோங் சு பின்
(Wong Sze Phin)
14-ஆவது மக்களவை 2018–2022 சான் பூங் கின்
(Chan Foong Hin)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சான் பூங் கின்
(Chan Foong Hin)
பாக்காத்தான் அரப்பான் (PH)31,35971.0871.08 Increase
அமண்டா யோ யான் இன்
(Amanda Yeo Yan Yin)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)7,57617.1717.17 Increase
இயீ சாய் இவ்
(Yee Tsai Yiew)
சபா மக்கள் கூட்டணி (GRS)4,59210.4110.41 Increase
வின்ஸ்டன் லியாவ் கிட்
(Winston Liaw Kit)
மக்களாட்சி கட்சி (KDM)4561.031.03 Increase
மார்செல் ஜூட்
(Marcel Jude)
சுயேச்சை (Independent)1370.310.31 Increase
மொத்தம்44,120100.00
செல்லுபடியான வாக்குகள்44,12098.78
செல்லாத/வெற்று வாக்குகள்5431.22
மொத்த வாக்குகள்44,663100.00
பதிவான வாக்குகள்74,05959.5716.69
Majority23,78353.913.02
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. Sabah the Early Days.
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]