உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சியாங்கான் (P182)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Pensiangan (P182)
Federal Constituency in Sabah
பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி
(P182 Pensiangan)
மாவட்டம்நாபாவான் மாவட்டம்
உட்பகுதி பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை55,672 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபென்சியாங்கான் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்நாபாவான்; தூலிட், பன்டேவான்
பரப்பளவு8,897 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்ஆர்தர் ஜோசப் குரூப்
(Arthur Joseph Kurup)
மக்கள் தொகை82,499 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pensiangan; ஆங்கிலம்: Pensiangan Federal Constituency; சீனம்: 联邦选区除草) என்பது மலேசியா, சபா, உட்பகுதி பிரிவு; நாபாவான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P182) ஆகும்.[5]

பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

நாபாவான் மாவட்டம்

[தொகு]

நாபாவான் மாவட்டம் என்பது சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் நாபாவான் நகரம். பென்சியாங்கான் மாவட்டம் (Pensiangan District) என முன்பு அறியப்பட்ட இந்த மாவட்டம் 2004-ஆம் ஆண்டில் நாபாவான் மாவட்டம் என்று மறுபெயரிடப்பட்டது.[7]

நாபாவான் மாவட்ட நிர்வாகத்தின் வரலாறு 1957-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில்தான் நாபாவானில் இருந்து தெற்கே 114 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்சியாங்கானில், நாபாவான் மாவட்டத்திற்குச் சொந்தமான மாவட்ட அலுவலகம் கிடைத்தது.

பென்சியாங்கான் மாவட்டம்

[தொகு]

அந்தக் காலக் கட்டத்தில், பென்சியாங்கான் பகுதியில் சாலைகள் இல்லாததால், படகு அல்லது குதிரை மூலம் மட்டுமே போக்குவரத்துகள் இருந்தன. எனவே பென்சியாங்கான் மாவட்ட அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ய குதிரைகளில் சென்றனர்.

1957-ஆம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் முதல் மாவட்ட அதிகாரியாக ஐ.சி. பெக் (I.C. Peck) என்பவர் நியமிக்கப்பட்டார். 1974-ஆம் ஆண்டில், நாபாவான் மாவட்ட அலுவலகத்தின் நிர்வாகம், புதிதாக நிறுவப்பட்ட அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.

பென்சியாங்கான் மக்களவைத் தொகுதி

[தொகு]




பென்சியாங்கான் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  மலாயர் (12.8%)
  சீனர் (11.9%)
  இதர இனத்தவர் (2.9%)





பென்சியாங்கான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.95%)
  பெண் (50.05%)

பென்சியாங்கான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.64%)
  21-29 (22.33%)
  30-39 (23.74%)
  40-49 (16.85%)
  50-59 (13.88%)
  60-69 (9.22%)
  70-79 (3.36%)
  80-89 (1.68%)
  + 90 (1.31%)
பென்சியாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1995 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பென்சியாங்கான் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P150 1986-1990 தைமின் லுமாயிங்
(Taimin Lumaing)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய சபா கட்சி) (PBS)
8-ஆவது மக்களவை 1990-1995 காகாசான் ராக்யாட் (GR)
(ஐக்கிய சபா கட்சி) (PBS)
தொகுதி நீக்கப்பட்டு, கெனிங்காவ் தொகுதியுடன் இணைக்கப்பட்டது
கெனிங்காவ் தொகுதியில் இருந்து மீண்டும் உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P182 2004-2008 பெர்னர்ட் இசுடீபன் மாராட்
(Bernard Stephen Maraat @ Ben)
பாரிசான் நேசனல்
(சபா ஐக்கிய மக்கள் கட்சி) (PBRS)}}
12-ஆவது மக்களவை 2008-2013 ஜோசப் குரூப்
(Joseph Kurup)
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018 ஆர்தர் ஜோசப் குரூப்
(Arthur Joseph Kurup)
2018-2020 சபா ஐக்கிய மக்கள் கட்சி (PBRS)
2020–2022 பாரிசான் நேசனல்
(சபா ஐக்கிய மக்கள் கட்சி) (PBRS)}}
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஆர்தர் ஜோசப் குரூப்
(Arthur Joseph Kurup)
பாரிசான் நேசனல் (BN)19,62352.884.53 Increase
சங்கார் ராசம்
(Sangkar Rasam)
பாக்காத்தான் (PH)14,21138.290.57
ஜெக்கரிசன் கிலான்
(Jekerison Kilan)
மக்களாட்சி கட்சி (KDM)1,6424.424.40 Increase
சித்தி நூரம்சாவதி ஒசுமான்
(Siti Noorhasmahwatty Osman)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)1,5124.074.07 Increase
சமானி தெரிமான்
(Jamani Derimin @ Gampalid)
தாயக இயக்கம் (GTA)1240.330.33 Increase
மொத்தம்37,112100.00
செல்லுபடியான வாக்குகள்37,11298.74
செல்லாத/வெற்று வாக்குகள்4741.26
மொத்த வாக்குகள்37,586100.00
பதிவான வாக்குகள்55,67266.6612.87
Majority5,41214.595.09 Increase
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "The existence of Nabawan District as one of the districts in the Interior began under the status of a Small District Office in 1920". www.sabah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  8. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]