பத்தாங் ஆய் தேசியப் பூங்கா
பத்தாங் ஆய் தேசியப் பூங்கா Batang Ai National Park Taman Negara Batang Ai | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | சரவாக் மலேசியா |
அருகாமை நகரம் | சிமாங்காங் |
ஆள்கூறுகள் | 1°8′N 111°53′E / 1.133°N 111.883°E |
பரப்பளவு | 24 km2 (9.3 sq mi) |
நிறுவப்பட்டது | 1991 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் |
பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Batang Ai; ஆங்கிலம்: Batang Ai National Park) என்பது மலேசியா, சரவாக், செரி அமான் பிரிவு லுபோக் அந்து பகுதியில், கூச்சிங் மாநகரில் இருந்து கிழக்கே 250 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.[1]
இந்தப் பூங்கா 24 கி.மீ. (9.3 சதுர மைல்) பரப்பளவில் பரந்த வெப்பமண்டல மழைக்காடுகளை உள்ளடக்கியது. இங்கு அரிய பாதுகாக்கப்பட்ட விலங்குகள்; மற்றும் பத்தாங் ஆய் நீர்மின் தேக்கத்தால் உருவாக்கப்பட்ட 24 சதுர கி.மீ. செயற்கை ஏரியும் உள்ளன.
பொது
[தொகு]இந்தப் பூங்கா 1991-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது; மேலும் போதுமான வசதிகள் இல்லாத போதிலும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரிய அளவில் பிரபலமாகிவிட்டது.[2]
லோங்போட் (Longboat) எனப்படும் பாரம்பரிய நீண்ட படகுகளை வாடகைக்கு எடுப்பதன் மூலம் இங்கு செல்ல முடியும். இப்பகுதியில் ஆறுகளின் பயன்பாடே முக்கியப் போக்குவரத்து முறையாகும். படகுகளின் மூலமாகப் பத்தாங் ஆய் தேசியப் பூங்காவின் தலைமையகத்திற்குச் செல்ல ஏறக்குறைய 40 நிமிடங்கள் பிடிக்கும்.
இபான் மக்கள்
[தொகு]பத்தாங் ஆய் தேசியப் பூங்காவின் மழைக் காடுகள் ஓராங் ஊத்தான், கிப்பன்கள் மற்றும் இருவாய்ச்சி பறவைகள் ஆகியவற்றின் தாயகமாகும். உள்ளூர்வாசிகள் பெரும்பாலோர் இபான் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
உள்ளூர் மக்களும்; இபான் இனத்தைச் சேர்ந்தவர்களும் 'பத்தாங் ஆய் பல்நோக்கு கழகம்' எனும் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி பூங்காவைப் பாதுகாக்க உதவுகின்றார்கள்.
காட்சியகம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- போர்னியோவின் இதயம் - (Heart of Borneo)
- நியா தேசிய பூங்கா
- முலு மலை தேசியப் பூங்கா
- செரி அமான் பிரிவு
- மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Batang Ai National Park - Sarawak Forestry Corporation". sarawakforestry.com. 15 November 2020. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
- ↑ "Batang Ai National Park is part of the region's largest trans-national protected area for tropical rainforest conservation". sarawaktourism.com. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.