உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்துபோங் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்துபோங் மலை
Mount Santubong
Gunung Santubong
சாந்துபோங் மலைச்சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்810.2 m (2,658 அடி)
புடைப்பு810 m (2,660 அடி)
ஆள்கூறு01°44′N 110°20′E / 1.733°N 110.333°E / 1.733; 110.333
புவியியல்
சாந்துபோங் மலை Mount Santubong Gunung Santubong is located in மலேசியா
சாந்துபோங் மலை Mount Santubong Gunung Santubong
சாந்துபோங் மலையின் அமைவிடம்
அமைவிடம்கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டம்
 சரவாக்
 மலேசியா

சாந்துபோங் மலை (மலாய் மொழி: Gunung Santubong; ஆங்கிலம்: Mount Santubong) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை மாநிலத் தலைநகர் கூச்சிங்கிற்கு வடக்கே சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெரும்பாலான நாட்களில் கூச்சிங்கில் இருந்து அதன் மலை உச்சி நன்றாகத் தெரியும்.[1]

சாந்துபோங் எனும் சொல் தயாக்கு மக்களின் இபான் மொழியிலிருந்து வந்தது. சூரியன் என்று பொருள்படும். மழைக்காட்டுச் சரிவுகள்; சதுப்புநிலக் காடுகள்; ஆறுகள்; நீர் சேற்றுத் தடங்களை மையமாகக் கொண்ட அழகான இயற்கை ஈர்ப்புகள்; இவையே சாந்துபோங் மலையின் தனிதன்மைகள் ஆகும்.[2]

சாந்துபோங் மலையின் அடிப்பாகத்தைச் சுற்றிலும் பல நூறு ஆண்டுகள் பழமையான இந்து இராச்சியங்களின் அடையாளங்கள் கிடைத்து உள்ளன.[2]

வரலாறு

[தொகு]

இந்த மலை மணற்கற்களால் ஆனது. 1855-ஆம் ஆண்டில், சரவாக்கில் இயற்கைத் தொடர்பான மாதிரிகளைச் சேகரிக்கும் போது, பிரித்தானிய இயறகை உயிரியல் அறிஞர் ஆல்பிரடு அரசல் வாலேசு[1] "சரவாக் சட்டம்"[2] பரணிடப்பட்டது 2007-04-28 at the வந்தவழி இயந்திரம் என்று அழைக்கப்படும் ஒரு கட்டுரையை எழுதினார்.

அந்தக் கட்டுரை பரிணாம உயிரியல் தொகுதியில் படிவளர்ச்சிக் கொள்கையைப் பற்றியது. அது உயிரியல் பரிணாமக் கோட்பாட்டின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Santubong National Park - Sarawak Forestry Corporation". sarawakforestry.com. 24 November 2020. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
  2. 2.0 2.1 "Santubong National Park - It has some beautiful natural attractions centred on Mount Santubong's rainforest slopes, its mangrove forests, rivers, near-shore waters and mudflats". sarawaktourism.com. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்துபோங்_மலை&oldid=4107881" இலிருந்து மீள்விக்கப்பட்டது