அப்பி மலை
அப்பி மலை Mount Api Gunung Api | |
---|---|
அப்பி மலை சுண்ணாம்புக் கோபுரங்கள் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,750 m (5,740 அடி) |
ஆள்கூறு | 04°06′07″N 114°53′35″E / 4.10194°N 114.89306°E |
புவியியல் | |
அமைவிடம் | மிரி பிரிவு, மாருடி மாவட்டம் சரவாக் மலேசியா |
அப்பி மலை (மலாய் மொழி: Gunung Api; ஆங்கிலம்: Mount Api) என்பது மலேசியா, சரவாக், மிரி பிரிவு, மாருடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை முலு மலை தேசியப் பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ளதால், இந்த மலைக்கு ஏடன் தோட்டம் (Garden of Eden) எனவும் பெயரிடப்பட்டது.
அப்பி மலை அதன் தாவரக் குடுவைகளின் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. அப்பி மலையில் ஐந்து வகையான தாவரக் குடுவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]
பல்லுயிர்கள்
[தொகு]அப்பி மலையின் சுண்ணாம்புக் கற்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மலைச் சிகரங்கள் பல தனித்துவமான தாவரங்களைக் கொண்டுள்ளன. அத்துடன் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாகவும் விளங்குகிறது.[1]
அப்பி மலையானது தாழ்நிலக் காட்டுத் தாவரங்களில் (Dipterocarpaceae) இருந்து மலைத்தொடர் தாவரங்கள் (Montane Vegetations) வரையிலான உயிரியல் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
பொது
[தொகு]முலு மலை தேசியப் பூங்காவில் மூன்று மலைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன: முலு மலை (2,376 மீ - 7,795 அடி)]; அப்பி மலை (1,750 மீ - 5,740 அடி) மற்றும் பெனாரத் மலை (1,858 மீ - 6,096 அடி).
முலு மலை ஒரு மணற்கல் மலை; அப்பி மலை மற்றும் பெனாரத் மலை ஆகியவை சுண்ணாம்பு மலைகள். முலு மலையின் உச்சி பாசி காடுகளால் மூடப்பட்டுள்ளது; அதே சமயத்தில் அபி மலையின் உச்சியில் சுண்ணாம்புக் கற்கள் காணப்படுகின்றன.[2]
நிலவியல்
[தொகு]அப்பி மலை பொதுவாகவே, கரடுமுரடான சிகரங்கள், செங்குத்தான முகடுகள், மலைப் பாதைகள், பாறைகள், அகன்ற பள்ளத்தாக்குகள், சுண்ணாம்புக் கரடுகளைக் கொண்ட பாறைக் கோபுரங்கள், குகைகள், வெந்நீர் ஊற்றுகள், வெள்ளப்பெருக்குச் சமவெளிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
குகைகள்
[தொகு]- சரவாக் நிலவறை - உலகின் மிகப்பெரிய நிலத்தடி அறைகளில் ஒன்றாகும்; 600 மீ (2,000 அடி) நீளம், 415 மீ (1,362 அடி) அகலம்; குறைந்த பட்ச உயரம் 80 மீ (260 அடி)
- மான் குகை - உலகின் மிகப்பெரிய குகைப் பாதை; 120 மீ (390 அடி) முதல் 150 மீ (490 அடி) வரையிலான சுற்றளவு[3]
- கிளியர்வாட்டர் குகை - தென்கிழக்கு ஆசியாவின் மிக நீளமான குகை; 227.2 கிமீ வரையிலான நீளத்தைக் கொண்டது[4][5][6]
காட்சியகம்
[தொகு]-
கிளியர்வாட்டர் குகையின் நீரூற்று
-
முலு பூங்கா சுண்ணாம்பு மலை
-
அழகிய முலு பூங்கா
-
கிளியர்வாட்டர் குகையின் உட்பாகம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bourke, G. 2011. The Nepenthes of Mulu National Park. Carniflora Australis 8(1): 20–31.
- ↑ "Gunung Mulu National Park – A UNESCO World Heritage". Sarawak Tourism Board. Archived from the original on 30 June 2017. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
- ↑ "Deer Cave and Lang's Cave". Mulu National Park. Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 27 December 2015.
- ↑ "Clearwater cave and Wind Cave". Gunung Mulu National Park. Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 27 December 2015.
- ↑ "Gunung Mulu National Park". Malaysia Tourism Promotion Board. Archived from the original on 17 October 2015. பார்க்கப்பட்ட நாள் 27 December 2015.
- ↑ "The Clearwater Cave System". The Mulu Caves project. Archived from the original on 29 October 2018. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
மேலும் படிக்க
[தொகு]- National Parks of Sarawak, by Hans P. Hazebroek, Abang Kashim bin Abang Morshidi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-812-032-4.
- The Encyclopedia of Malaysia, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-3018-47-X.
- On the Law Which Has Regulated the Introduction of New Species பரணிடப்பட்டது 2007-04-28 at the வந்தவழி இயந்திரம்.
- AR Wallace travelog to Borneo and the Malay World.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Mount Api தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Satellite image from Google Earth
- Sarawak Tourism page on the mountain
- A song about the two princesses, with translations பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம்