உள்ளடக்கத்துக்குச் செல்

லுபோக் அந்து மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுபோக் அந்து (P203)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Lubok Antu (P203)
Federal Constituency in Sarawak
லுபோக் அந்து மக்களவைத் தொகுதி
(P203 Lubok Antu)
மாவட்டம்லுபோக் அந்து மாவட்டம் செரி அமான் மாவட்டம் பெத்தோங் மாவட்டம்
வட்டாரம்செரி அமான் பிரிவு பெத்தோங் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை26,780 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிலுபோக் அந்து மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்பெத்தோங்; அசா செயா சிமாங்காங்
பரப்பளவு3,294 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1968
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்ரோய் அங்காவ் கிங்கோய்
(Roy Angau Gingkoi)
மக்கள் தொகை26,780 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

லுபோக் அந்து மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lubok Antu; ஆங்கிலம்: Lubok Antu Federal Constituency; சீனம்: 卢布安图联邦选区) என்பது மலேசியா, சரவாக், சமரகான் பிரிவில்; அசா ஜெயா மாவட்டம்; சிமுஞ்சான் மாவட்டம்; கெடோங் மாவட்டம்; செபுயாவ் மாவட்டம்; ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P203) ஆகும்.[5]

லுபோக் அந்து மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து லுபோக் அந்து மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பெத்தோங் மாவட்டம்

[தொகு]

பெத்தோங் மாவட்டம் (Betong District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[7] இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பெத்தோங் நகரம். பெத்தோங் மாவட்டம் பாரம்பரியமாக இபான், மலாய் மக்கள் மற்றும் சீனர் மக்களின் தாயகமாக உள்ளது. பெரும்பாலான இபான் மக்கள் பெத்தோங் மற்றும் சரதோக் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர்.

முன்பு இந்த மாவட்டம், சரிபாசு (Saribas) என்ற பெயரில் செரி அமான் பிரிவின் (Sri Aman Division) நிர்வாகத்தின் கீழ் இருந்தது. இன்றும் சரவாக் மக்களிடையே சரிபாசு எனும் சொல் புழக்கத்தில் உள்ளது.

சரிபாசு

[தொகு]

சரிபாசு அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாசு பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.

இங்குள்ள இபான் மக்கள், சரவாக் மாநிலத்தின் பூர்வீகப் பழங்குடியினர். இவர்கள் கடல் டயாக் (Sea Dayaks) மக்கள் என்று அழைக்கப் படுவதும் உண்டு.[8][9]

லுபோக் அந்து மக்களவைத் தொகுதி

[தொகு]




லுபோக் அந்து தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[10]

  இதர இனத்தவர் (0.4%)





லுபோக் அந்து தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.37%)
  பெண் (50.63%)

லுபோக் அந்து தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.67%)
  21-29 (19.73%)
  30-39 (20.49%)
  40-49 (16.47%)
  50-59 (16.68%)
  60-69 (11.8%)
  70-79 (6.01%)
  80-89 (1.62%)
  + 90 (0.53%)
லுபோக் அந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லுபோக் அந்து தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[11]
3-ஆவது மக்களவை P129 1971-1974 ஜொனாதன் நர்வின் ஜிங்காங்
(Jonathan Narwin Jinggong)
சரவாக் தேசிய கட்சி (SNAP)
4-ஆவது மக்களவை P139 1974-1978
5-ஆவது மக்களவை 1978-1982 பாரிசான் நேசனல்
(சரவாக் தேசிய கட்சி) (SNAP)
6-ஆவது மக்களவை 1982-1986 ஆண்ட்ரூ ஜாங்கி முயாங்
(Andrew Janggi Muyang)
7-ஆவது மக்களவை P162 1986-1987 பாரிசான் நேசனல்
(சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS)
1987-1990 ஜாவா கெராங்
(Jawah Gerang)
8-ஆவது மக்களவை P164 1990-1995
9-ஆவது மக்களவை P176 1995-1999
10-ஆவது மக்களவை P177 1999-2004 பாரிசான் நேசனல்
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)
11-ஆவது மக்களவை P203 2004-2008
12-ஆவது மக்களவை 2008-2013 வில்லியம் நியாலாவ் பாடாக்
(William Nyalau Badak)
13-ஆவது மக்களவை 2013-2018
2018 சுயேச்சை
14-ஆவது மக்களவை 2018 ஜுகா முயாங்
(Jugah Muyang)
2018-2020 பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி) (PKR)
2020-2022 சுயேச்சை
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் ரோய் அங்காவ் கிங்கோய்
(Roy Angau Gingkoi)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ரோய் அங்காவ் கிங்கோய்
(Roy Angau Gingkoi)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)6,64434.4434.44 Increase
ஜானிகல் ராயோங் நிங்கிபா
(Johnical Rayong Ngipa)
சரவாக் ஐக்கிய கட்சி (PSB)6,54433.9233.92 Increase
ஜுகா முயாங்
(Jugah Muyang)
பெரிக்காத்தான் நேசனல் (PN)5,36027.7827.78 Increase
லங்கா லியாஸ்
(Langga Lias)
பாக்காத்தான் (PH)7463.8723.22
மொத்தம்19,294100.00
செல்லுபடியான வாக்குகள்19,29498.76
செல்லாத/வெற்று வாக்குகள்2431.24
மொத்த வாக்குகள்19,537100.00
பதிவான வாக்குகள்28,99566.544.54
Majority1000.56.76
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  8. "Iban of Brunei". People Groups.
  9. Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  10. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  11. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  12. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]