உள்ளடக்கத்துக்குச் செல்

கேரளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேரள மாநிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கேரளம்
அடைபெயர்(கள்): கடவுளின் சொந்த நாடு , இந்தியாவின் மசாலாத் தோட்டம், தேங்காய் நிலம், மரங்களின் நிலம், தென்னிந்தியாவின் நகை [1]
கேரளத்தின் வரைபடம்
கேரளத்தின் வரைபடம்
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
உருவாக்கம்1 நவம்பர் 1956; 68 ஆண்டுகள் முன்னர் (1956-11-01)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
திருவனந்தபுரம்
மாவட்டங்கள்
அரசு
 • நிர்வாகம்கேரள அரசு
 • ஆளுநர்ஆரிப் முகமது கான்
 • முதலமைச்சர்பிணறாயி விஜயன் (இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்))
 • சட்டப் பேரவைகேரள சட்டமன்றம்
ஓரவை (141 உறுப்பினர்கள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 • உயர் நீதிமன்றம்கேரள உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்38,863 km2 (15,005 sq mi)
 • பரப்பளவு தரவரிசை21வது
உயர் புள்ளி2,695 m (8,842 ft)
தாழ் புள்ளி−2.2 m (−7.2 ft)
மக்கள்தொகை
 (2018)[2]
 • மொத்தம்3,46,30,192
 • தரவரிசை13வது
 • அடர்த்தி890/km2 (2,300/sq mi)
GSDP (2020-2021)
 • மொத்தம்₹9.78இலட்சம் கோடி
 • தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி2,81,872 (US$3,500)
மொழி
 • அலுவல்மொழிமலையாளம்[4]
 • Additional officialஆங்கிலம்[5][6]
நேர வலயம்ஒசநே+05:30 (இசீநே)
தொலைபேசி+91
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2019)Increase 0.782[7] (High) · 1வது
படிப்பறிவு (2018)96.2%[8]
பாலின விகிதம் (2011)1084 /1000 [9]
இணையதளம்kerala.gov.in
சின்னங்கள்
சின்னம்கேரள அரசு சின்னம்
மொழி
மலையாளம்[4]
விலங்கு
இந்திய யானை[10]
பறவை
மலை இருவாட்சி[10]
மீன்
முத்துப்புள்ளி மீன்
மலர்
கொன்றை[10]
பழம்
பலாப்பழம்[11]
மரம்
தென்னை [10]
பூச்சி
Papilio buddha[12]

கேரளம் (English: /ˈkɛrələ/ (கேட்க)/ KERR-ə-lə; வார்ப்புரு:IPA-ml) இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும்.[13] 1 நவம்பர் 1956 அன்று இது உருவாக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவிதாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது.[14][15] இதன் பரப்பளவு 38,863 சதுர கிலோமீட்டர் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் 21வது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு மற்றும் வடகிழக்கே கருநாடகமும், கிழக்கு மற்றும் தெற்கே தமிழ்நாடும், மேற்கே இலட்சத்தீவுக் கடலும்[16] எல்லைகளாக உள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தில் 3.3 கோடி மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையின் அடிப்படையில் 13வது மிகப் பெரிய இந்திய மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது. இது 14 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் திருவனந்தபுரம் ஆகும். கேரளத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாக மலையாளம் உள்ளது. இம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியும் கூட இது தான்.[17]

கேரளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த முதல் முக்கியமான இராச்சியம் சேரர் ஆவர். தூரத் தெற்கிலிருந்த ஆய் நாடு மற்றும் வடக்கே இருந்த எழிமலா இராச்சியம் ஆகியவை பொ. ஊ.யின் தொடக்க ஆண்டுகளில் பிற இராச்சியங்களைக் கொண்டிருந்தன. பொ. ஊ. மு. 3,000ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியானது ஒரு முக்கியமான நறுமணப்பொடி ஏற்றுமதியாளராக இருந்துள்ளது.[18] பொ. ஊ. 100 வாக்கில் பிளினி மற்றும் பெரிப்ளசு கையேட்டு நூல்களில் வணிகத்தில் இப்பகுதியின் முக்கியத்துவமானது குறிப்பிடப்பட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டில் நறுமணப்பொடி வணிகமானது போர்த்துகீசியர்களைக் கேரளத்திற்கு ஈர்த்தது. இந்தியாவின் ஐரோப்பியக் காலனிமயமாக்கத்திற்கு வழி ஏற்படுத்தியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய விடுதலை இயக்கத்தின் காலத்தில் இரு முக்கியமான மன்னர் அரசுகள் கேரளத்தில் இருந்தன. அவை திருவிதாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவையாகும். 1949இல் அவை ஒன்றிணைக்கப்பட்டு திருவாங்கூர் கொச்சி அரசை அமைத்தன. கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மலபார் பகுதியானது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் சென்னை மாநிலத்தின் பகுதியாக இது ஆனது. 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகு சென்னை மாநிலத்தின் மலபார் மாவட்டம் (நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வட்டம், இலட்சத்தீவுகள், ஆனைமலை இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா, அனைக்கட்டிக்குக் கிழக்கில் உள்ள அட்டப்பாடி காடு தவிர்த்து), தென் கன்னட மாவட்டத்தில் உள்ள காசர்கோடு வட்டம் (தற்போது காசர்கோடு மாவட்டம்), மற்றும் அப்போதிருந்த அரசான திரு-கொச்சி (கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்கு தெற்கு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வட்டங்களைத் தவிர்த்து) ஆகியவை இணைக்கப்பட்டு நவீன கால கேரளம் மாநிலமானது உருவாக்கப்பட்டது.[15]

3.44%துடன் இந்தியாவிலேயே மிகக் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி வீதம்; 2018இல் 0.784 (2015இல் 0.712) என்ற மிக அதிகமான மனித மேம்பாட்டுச் சுட்டெண்; 2018இல் இந்தியாவின் தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கல்வி அறிவு ஆய்வில் 96.2%துடன் மிக அதிக எழுத்தறிவு வீதம்;[8] 77.3 ஆண்டுகளுடன் மிக அதிக சராசரி ஆயுட்காலம்; 1,000 ஆண்களுக்கு 1,084 பெண்கள் என்ற மிக அதிக பாலின விகிதம் ஆகியவற்றைக் கேரளம் கொண்டுள்ளது. நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் தகவல் முகப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தியப் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களின் கையேடு ஆகியவற்றின் படி இந்தியாவிலேயே வறுமை குறைந்த மாநிலம் கேரளமாகும்.[19][20] 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 47.7% நகர்ப்புற மக்கள் தொகையுடன் நாட்டிலேயே இரண்டாவது மிக அதிக நகரமயமாக்கப்பட்ட முக்கிய மாநிலமாகக் கேரளம் உள்ளது.[21] 2019இல் பதிப்பிக்கப்பட்டது நிதி ஆயோக்கின் வருடாந்திர அறிக்கையின் படி வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை எட் டிய மாநிலங்களில் நாட்டிலேயே கேரளம் முதலிடம் பிடித்தது.[22] இந்தியாவிலேயே மிக அதிக ஊடக வெளிப்பாடு உள்ள மாநிலமாகக் கேரளம் உள்ளது. ஒன்பது மொழிகளில் இங்கு பத்திரிக்கைகள் முதன்மையாக மலையாளத்திலும், சில நேரத்தில் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்படுகின்றன. இம்மாநிலத்தின் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து இசுலாம் மற்றும் கிறித்தவம் ஆகியவை மிகப் பெரிய சமயங்களாக உள்ளன.

2019-20இல் மொத்த மாநில உள் உற்பத்தியில் 8.55 டிரில்லியன் (US$110 பில்லியன்) ரூபாய்களுடன் இந்தியாவிலேயே 8வது மிகப் பெரியதாக கேரளத்தின் பொருளாதாரம் திகழ்ந்தது. நிகர மாநில உள் உற்பத்தி தனி நபர் வருமானமானது 2,22,000 (US$2,800) ஆக இருந்தது.[3] 2019-20இல் மொத்த பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் மதிப்புக்கு மூன்றாம் படி நிலைத் துறையானது சுமார் 65%ஐப் பங்களித்தது. அதே நேரத்தில் முதன்மையான துறையான மூலப் பொருட்கள் சார்ந்த துறையானது 8%ஐ மட்டுமே பங்களித்தது.[23] 1970கள் மற்றும் 1980களின் தொடக்கத்தில் வளைகுடா பெருக்க வள காலத்தின் போது வளைகுடா நாடுகளுக்கு இம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பணியாளர்கள் இடம் பெயர்ந்தனர். அயல்நாட்டில் வாழும் ஒரு பெரும் மலையாளிகளின் சமூகத்திடமிருந்து அனுப்பப்படும் பணங்களைச் சார்ந்து இதன் பொருளாதாரமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளது. மிளகு மற்றும் இயற்கை மீள்மத்தின் உற்பத்தியானது மொத்த தேசிய உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்களிக்கிறது. வேளாண் துறையில் தென்னை, தேநீர், காப்பி, முந்திரி மற்றும் நறுமணப் பொருட்கள் முக்கியமானவையாக உள்ளன. இம்மாநிலமானது மேற்கே அரபிக் கடல் மற்றும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. மாநிலத்தின் கடற்கரையானது 595 கிலோ மீட்டருக்கு நீண்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 11 இலட்சம் மக்கள் மீன்பிடித் துறையைச் சார்ந்துள்ளனர். இது மாநிலத்தின் வருவாய்க்கு 3% பங்கை அளிக்கிறது. தேசியப் புவியியல் பயணி[24] எனும் பத்திரிகையின் படி உலகின் 10 சொர்க்கங்களில் ஒன்று என்று கேரளம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பயணிகள் வருகை புரியும் மிக முக்கியமான இடங்களில் கேரளமும் ஒன்றாகும். தென்னை மரங்களையுடைய மணல் கடற்கரைகள், உப்பங்கழிகள், மலை வாழிடங்கள், ஆயுர்வேத சுற்றுலா மற்றும் வெப்ப வலய பச்சைத் தாவரங்கள் ஆகியவை இதன் முக்கியமான ஈர்ப்புகளாக உள்ளன.

பெயர்க் காரணம்

[தொகு]

கேரளம் என்ற சொல்லானது மௌரியப் பேரரசர் அசோகர் (274–237 பொ. ஊ. மு.) விட்டுச் சென்றிருந்த, நலத் திட்டம் குறித்த கல்வெட்டுகளில் ஒன்றான பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டுப் பாறைக் கல்வெட்டில் முதன் முதலில் கேரளபுத்தோ (கேரளபுத்திரர், 'சேரர்[களின்] மகன்') என்று பதிவிடப்பட்டுள்ளது.[25] அந்நேரத்தில் செந்தமிழில் இப்பகுதியில் இருந்த மூன்று அரசுகளில் ஒன்று சேரலம் என்று அழைக்கப்பட்டது. சேர மற்றும் கேர ஆகியவை ஒரே சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் ஆகும்.[26] கேரள மன்னர்களின் மிகப் பழமையான அறியப்பட்ட அரசமரபைக் குறிக்க சேரல் என்ற சொல் பயன்படுகிறது. 'ஏரி'க்கான பழமையான தமிழ் மொழிச் சொல்லிலிருந்து இது தருவிக்கப்பட்டுள்ளது.[27] கேரளம் என்ற சொல்லானது செந்தமிழ் சொல்லான செரிவே-ஆலம் 'மலைச்சரிவு'[28] அல்லது சேர ஆலம் 'சேரர்களின் நிலம்' என்பதிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு நாட்டுப்புறச் சொற்பிறப்பியலானது கேரளத்தை மலையாளச் சொல்லான கேர 'தென்னை மரம்' மற்றும் ஆலம் 'நிலம்' ஆகியவற்றில் இருந்து தருவிக்கிறது. இவ்வாறாக 'தென்னை மரங்களின் நிலம்'[29] என்று பொருள் படுகிறது. ஏராளமான தென்னை மரங்கள் இருப்பதன் காரணமாக உள்ளூர் மக்களால் இம்மாநிலத்திற்கு வழங்கப்படும் செல்லப் பெயராக இது உள்ளது.[30]

சிறப்புகள்

[தொகு]
  • 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்
  • ஆதி சங்கரர் (பொ.ஊ. 788-820) பிறந்த இடம் காலடி
  • இந்திய செவ்வியல் நடன வடிவம் "கதகளி"யின் பிறப்பிடம்
  • இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
  • இந்தியாவின் நறுமணத் தோட்டம்
  • களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்
  • இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்[31]
  • வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது.

புவியமைப்பு

[தொகு]

38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆறுகள்

[தொகு]

நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.

வரலாறு

[தொகு]

பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.[32]
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது.
மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது.

பொருளாதாரம்

[தொகு]

விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]
கேரள மாவட்டங்கள்

கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:

கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன.

அரசியல்

[தொகு]

இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[33] கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[33]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.[34]

சமயம்

[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது.

மொழி

[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது.

கலைகள்

[தொகு]

கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது.

சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்

[தொகு]

சுற்றுலா தலங்கள்

[தொகு]

தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம், கொச்சி மற்றும் கொல்லம்.[35]

ஆன்மிக தலங்கள்

[தொகு]

சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள், மீன்குளத்தி பகவதி கோயில், குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும்.

வைணவத் திருத்தலங்கள்

[தொகு]

108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவையாவன:

  1. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம்
  2. திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம்
  3. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம்
  4. திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம்
  5. திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம்
  6. திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம்
  7. திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம்
  8. திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம்
  9. திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம்
  10. திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம்
  11. திருநாவாய், மலப்புறம் மாவட்டம்

விழாக்கள்

[தொகு]

ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இறைச்சி

[தொகு]

கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளத்திற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.[36]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pehal News Team (12 November 2020). "Explore Kerala, the jewel of South India, on this virtual tour". Pehal News இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211104233114/https://www.pehalnews.in/explore-kerala-the-jewel-of-south-india-on-this-virtual-tour/263600/. 
  2. Annual Vital Statistics Report – 2018 (PDF). Thiruvananthapuram: Department of Economics and Statistics, Government of Kerala. 2020. p. 55. Archived from the original (PDF) on 2022-05-11. பார்க்கப்பட்ட நாள் 2022-08-14.
  3. 3.0 3.1 "MOSPI State Domestic Product, Ministry of Statistics and Programme Implementation, Government of India". 15 March 2021. பார்க்கப்பட்ட நாள் 23 June 2021. பிழை காட்டு: Invalid <ref> tag; name "MOSPI" defined multiple times with different content
  4. 4.0 4.1 "52nd report of the Commissioner for Linguistic Minorities in India (July 2014 to June 2015)" (PDF). Ministry of Minority Affairs (Government of India). 29 March 2016. p. 132. Archived from the original (PDF) on 25 May 2017.
  5. "Malayalam to be official language" (in en-IN). The Hindu. 28 April 2017. https://www.thehindu.com/news/national/kerala/malayalam-is-officiallanguage-from-may-1/article18259641.ece. 
  6. "Hindi is not an 'official' language in Kerala Assembly" (in en-IN). The Hindu. 12 July 2014. https://www.thehindu.com/news/national/kerala/hindi-is-not-an-official-language-in-kerala-assembly/article6190937.ece. 
  7. "Sub-national HDI – Area Database". Global Data Lab (in ஆங்கிலம்). Institute for Management Research, Radboud University. பார்க்கப்பட்ட நாள் 25 September 2018.
  8. 8.0 8.1 "Literacy Survey, India (2017–18)". Firstpost. 8 September 2020. பார்க்கப்பட்ட நாள் 9 September 2020.
  9. "Census 2011 (Final Data) – Demographic details, Literate Population (Total, Rural & Urban)" (PDF). planningcommission.gov.in. Planning Commission, Government of India. Archived from the original (PDF) on 27 January 2018. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
  10. 10.0 10.1 10.2 10.3 "State Symbols of India". ENVIS Centre on Wildlife & Protected Areas. 1 December 2017. Archived from the original on 15 April 2021. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  11. "Jackfruit to be Kerala's state fruit; declaration on March 21". இந்தியன் எக்சுபிரசு. PTI. 17 March 2018. https://indianexpress.com/article/india/jackfruit-to-be-keralas-state-fruit-declaration-on-march-21-5101170/. 
  12. Jacob, Aneesh. "'Budha Mayoori' to be named Kerala's state butterfly" (in en). Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 30 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190330094056/https://english.mathrubhumi.com/technology/science/budha-mayoori-to-be-named-kerala-s-state-butterfly-1.3305480. 
  13. "Malabar Coast". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 
  14. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Malabar என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  15. 15.0 15.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Kerala என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  16. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 5 October 2018. பார்க்கப்பட்ட நாள் 28 December 2020.
  17. "Kerala – Principal Language". Government of India. Archived from the original on 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2018.
  18. Subramanian, Archana (December 2016). "Route it through the seas". The Hindu இம் மூலத்தில் இருந்து 5 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220305035957/https://www.thehindu.com/children/ROUTE-it-through-the-seas/article16735515.ece. 
  19. "SDG India – Index 2021–22 – Partnerships in the Decade of Action" (PDF). நிதி ஆயோக். 2021. Archived from the original on 13 June 2021. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
  20. "Handbook of Statistics on Indian Economy. Table 154 : Number and Percentage of Population Below Poverty Line. (2011-12)". Reserve Bank of India. Archived from the original on 13 September 2021. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
  21. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ubn என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  22. Gireesh Chandra Prasad (30 December 2019). "Kerala tops sustainable development goals index". Livemint இம் மூலத்தில் இருந்து 7 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211107210208/https://www.livemint.com/news/india/kerala-tops-sustainable-development-goals-index-11577729046641.html. 
  23. Government of Kerala (2021). Economic Review 2020 – Volume I (PDF). Thiruvananthapuram: Kerala State Planning Board. Archived (PDF) from the original on 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.
  24. "Kerala: A vacation in paradise". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 February 2014 இம் மூலத்தில் இருந்து 25 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231125190237/https://timesofindia.indiatimes.com/kerala-a-vacation-in-paradise/articleshow/26251595.cms. 
  25. P. C. Alexander. Buddhism in Kerala. p. 23.
  26. Nicasio Silverio Sainz (1972). Cuba y la Casa de Austria. Ediciones Universal. p. 120. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013.
  27. John R. Marr (1985). The Eight Anthologies: A Study in Early Tamil Literature. Institute of Asian Studies. p. 263.
  28. Rayson K. Alex; S. Susan Deborah; Sachindev P.S. (2014). Culture and Media: Ecocritical Explorations. Cambridge Scholars Publishing. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4438-6190-8.
  29. S. N. Sadasivan (2000). A Social History of India. APH Publishing. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8176481700.
  30. Victor R. Preedy; Ronald Ross Watson; Vinood B. Patel (2011). Nuts and Seeds in Health and Disease Prevention. Academic Press. p. 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-375689-3.
  31. "இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளா தேர்வு". Archived from the original on 2016-03-02. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.
  32. வையவன், பக்கம் 17
  33. 33.0 33.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) – [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  34. http://www.census2011.co.in/census/state/kerala.html
  35. https://www.keralatourism.org/destination/
  36. குமுதம் ஜோதிடம்; 5. அக்டோபர் 2012; "அனைத்து உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகளே..!" கட்டுரை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளம்&oldid=4145945" இலிருந்து மீள்விக்கப்பட்டது