2018 கேரள வெள்ளம்
நாள் | ஆகத்து 2018 | –
---|---|
அமைவிடம் | கேரளா, இந்தியா |
காரணம் | குறைந்த அழுத்தம் அதிக மழை நிலச்சரிவு |
இறப்புகள் | 373 |
சொத்து சேதம் | 15,000 கோடி[1] |
இணையதளம் | கேரளா மீட்பு |
2018 ஆகஸ்டில் பருவமழைக் காலத்தில் பெய்த அசாதாரணமான மழை காரணமாக கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் கேரளாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் இதுவாகும்.[2] இதில் 373 பேர் இறந்தனர். 314,391[3] பேர் இடம்பெயர்ந்தனர்.[4][5]
மாநிலத்தின் 42 அணைகளில் 35 அணைகள் வரலாற்றில் முதன்முறையாக திறக்கப்பட்டன. செறுதொனி அணையின் ஐந்து வாயில்களும் 26 வருட இடைவெளிக்குப் பிறகு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.[6] அதிக மழை காரணமாக மலைசார்ந்த மாவட்டமான வயநாடு தனிமைப்படுத்தப்பட்டது.[7]
காரணங்கள்
[தொகு]ஆகஸ்ட் 14 அன்று பிற்பகல் வேளையில் கேரளா அதிக பருவ மழையைப் பெற்றது. இதன் விளைவாக அணைகள் கொள்ளளவை எட்டின; முதல் 24 மணி நேர மழையில் மாநிலம் 310 மிமீ மழை பெற்றது.[8] அதிக மழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்ததால் கிட்டத்தட்ட எல்லா அணைகளும் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.[9] மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக, அதன் 42 அணைகளில் 35 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.[10]
மீட்புப்பணிகள்
[தொகு]நிலச்சரிவுகளால் மூடப்பட்ட சாலைகளின் மறுசீரமைப்பு ஆகியவற்றில் இராணுவம் மற்றும் கடற்படையின் பிரிவுகள் முதலான மீட்புப் படையினர் அரசு நிர்வாகத்திற்கு உதவினர். விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை தயார் நிலையில் வைக்கப்பட்டன. அவசர நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன; தேசிய பேரிடர் நிவாரணப் படைகளின் 10 குழுக்கள் தவிர எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவுவதற்காக குண்டூர் மற்றும் அரக்கோணத்தில் இருந்து நான்கு கூடுதல் குழுக்கள் வான்வழியாகக் கொண்டுவரப்பட்டன. ஒன்றிய அரசு கேரள அரசைத் தொடர்பு கொண்டு, நிலைமையைச் சமாளிக்க உதவி செய்ய முன்வந்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களை வான்வழியாக முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஆய்வு செய்தார்.[11][12] முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்றார். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் உதவி செய்ய முன்வந்தன, வெள்ள நிவாரணத்திற்காக முறையே 5 கோடி மற்றும் 10 கோடி ரூபாயை நன்கொடையாக இந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் வழங்கினர். மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்டத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தது. மலப்புரம் மாவட்டத்தில் பல நிலச்சரிவுகள் பதிவாகின. இம்மாவட்டத்தில் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மற்றும் கனரக வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்பட்டது.[13]
தாக்கம்
[தொகு]மாநிலம் முழுவதும் 17,000க்கும் அதிகமான மக்கள் 48 மணி நேரத்திற்கு குறைவான காலப்பகுதியில் இடம்பெயர்ந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க பல்வேறு இடங்களில் 350 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. 24x7 கட்டுப்பாட்டு அறை அலுவாவில் செயல்பட்டது. இது பெரியாறில் உயரும் நீரின் அளவுகள் மற்றும் கலங்கள் ஆகியவற்றை சமாளிக்க கேரள நீர் ஆணையத்தின் நடவடிக்கைகளை ஒன்றிணைத்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி ஆகஸ்ட் 12, 2018 வரை மாநிலம் முழுவதும் கடுமையான பருவமழை, நிலச்சரிவு மற்றும் நீர்த்தேக்கங்களை நிரம்பி வழிதல் ஆகிய காரணங்களால் 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36,000 பேர் இடம்பெயர்ந்தனர்.[14] அடுத்த நான்கு நாட்களுக்கு எட்டு மாவட்டங்களில் அதிகமானது முதல் மிக அதிகமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்தது. முன்னதாக மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து வெள்ளம் வடிந்து ஒரு பகுதி மக்கள் வீடு திரும்பியதால் நிவாரண முகாம்களில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை 53,500ல் இருந்து 35,874 ஆகக் குறைந்தது. பின்னர் வெளியான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்கள் உட்பட 60,000க்கும் அதிகமான மக்கள், 14 மாவட்டங்களில் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்கியிருந்தனர்.[11]
மழைப்பொழிவு தரவுகள்
[தொகு]மாவட்டம் | பெய்துள்ள மழையளவு (மில்லிமீட்டர்) |
வழக்கமான மழையளவு (மில்லிமீட்டர்) |
% |
---|---|---|---|
ஆலப்புழா | 1648.1 | 1309.5 | 29% |
எர்ணாக்குளம் | 2305.9 | 1606.0 | 48% |
இடுக்கி | 3211.1 | 1749.1 | 89% |
கன்னூர் | 2450.9 | 2234.9 | 10% |
காசர்கோடு | 2174.3 | 2489.1 | -12% |
கொல்லம் | 1427.3 | 985.4 | 51% |
கோட்டயம் | 2137.6 | 1452.6 | 50% |
கோழிக்கோடு | 2796.4 | 2156.5 | 30% |
மலப்புரம் | 2529.8 | 1687.3 | 52% |
பாலக்காடு | 2135.0 | 1254.2 | 75% |
பத்தனம்திட்டா | 1762.7 | 1287.5 | 44% |
திருவனந்தபுரம் | 920.8 | 643.0 | 45% |
திருச்சூர் | 1894.5 | 1738.2 | 16% |
வயநாடு | 2676.8 | 2167.2 | 26% |
மொத்தம் | 2226.4 | 1620.0 | 41% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Flood-Hit Kerala Suffers Rs 8,000 Cr Losses; Rajnath Gives Rs 100 Crore Aid, Says Situation 'Very Serious'" (in en-GB). News18 (Kochi). 2018-08-13. https://www.news18.com/news/india/rajnath-announces-rs-100-crore-relief-for-flood-ravaged-kerala-says-situation-very-serious-1842041.html.
- ↑ Baynes, Chris (15 August 2018). "Worst floods in nearly a century kill 44 in India's Kerala state amid torrential monsoon rains". The Independent. https://www.independent.co.uk/news/world/asia/india-worst-floods-flooding-death-monsoon-rain-dead-kerala-kochi-a8493011.html.
- ↑ Babu, Gireesh (17 ஆகத்து 2018). "Monsoon havoc in Kerala: 324 lives lost since May 29, says CM Vijayan". Business Standard India. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2018.
- ↑ "Kerala floods live updates: Death toll rises to 79; Kochi airport to remain closed till August 26". Times of India. https://timesofindia.indiatimes.com/city/kochi/kerala-floods-live-updates-more-ndrf-teams-rushed-to-kerala-as-flood-situation-worsens/liveblog/65403405.cms.
- ↑ "Death toll soars in India monsoon floods" (in en-GB). BBC News. 2018-08-16. https://www.bbc.com/news/world-asia-india-45216671.
- ↑ "All 5 Idukki Dam gates opened for 1st time in history as Kerala battles unending rains". India Today.
- ↑ "Landslides hit several places in Malabar; Munnar, Wayanad isolated". Mathrubhumi. https://english.mathrubhumi.com/news/kerala/landslides-hit-several-places-in-malabar-munnar-wayanad-isolated-1.3060948.
- ↑ Fawkes, Chris (10 August 2018). "Active monsoon brings more flooding". BBC News. https://www.bbc.co.uk/weather/features/45147341.
- ↑ Gupta, Swati (16 August 2018). "Kerala floods: Red alert issued as death toll rises in Indian state". CNN. https://edition.cnn.com/2018/08/16/asia/india-kerala-floods-intl/index.html.
- ↑ "Kerala floods LIVE updates: Death toll touches 75, Cochin airport to remain closed till August 26 afternoon". இந்தியன் எக்சுபிரசு. 16 August 2018. https://indianexpress.com/article/india/kerala-rains-live-updates-tamil-nadu-weather-kochi-airport-idukki-dam-mullaperiyar-5307286/.
- ↑ 11.0 11.1 "Kerala rains LIVE Updates: Centre announces relief of additional Rs 100 crores, toll stands at 37" (in en-US). The Indian Express. 2018-08-12. https://indianexpress.com/article/india/kerala-rains-live-landslide-idukki-dam-periyar-river-pinarayi-vijayan-floods-5302745/?#liveblogstart.
- ↑ "Kerala Floods LIVE: Army Evacuates Tourists Stranded in Munnar, Red Alert Issued in 11 Districts". news18.com. 10 ஆகத்து 2018.
- ↑ Livemint (2018-08-12). "Kerala floods: Rains return to Idukki, other affected areas, hamper relief work". livemint.com/. https://www.livemint.com/Politics/jeUCIlGoOGOttTDhbO5ikM/Kerala-floods-Rains-return-to-Idukki-other-affected-areas.html.
- ↑ France-Presse, Agence (12 ஆகத்து 2018). "Kerala floods kill dozens with 36,000 evacuated". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2018.
- ↑ "Customized Rainfall Information System (CRIS)". hydro.imd.gov.in. Archived from the original on 9 சனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2018.
- ↑ "Customized Rainfall Information System (CRIS)" (PDF). Hydromet Division, India Meteorological Department, Ministry Of Earth Sciences. Archived from the original (PDF) on 22 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2021.