மலையாள எழுத்துமுறை
மலையாள எழுத்துமுறை | |
---|---|
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | c. 1100–இன்றுவரை |
திசை | Left-to-right |
மொழிகள் | மலையாளம் கொங்கணி |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | |
நெருக்கமான முறைகள் | சிங்கள எழுத்துமுறை தமிழ் எழுத்துமுறை |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Mlym (347), Malayalam |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Malayalam |
U+0D00–U+0D7F | |
பிராமி |
---|
பிராமி எழுத்துமுறையும் அதன் வழித்தோன்றல்களும் |
மலையாள எழுத்துமுறை என்பது மலையாள மொழியினை எழுத பயன்படுத்தப்படும் அபுகிடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். மலையாள எழுத்து முறையினை கொங்கணி மொழியை எழுதவும் பயன்படுத்துகின்றனர். தற்கால மலையாள எழுத்துக்கள் கிரந்த எழுக்களில் இருந்து தோன்றின. எனினும் பழங்காலத்தில் மலையாளம் வட்டெழுத்து முறையிலும் எழுதப்பட்டு வந்தது. வடமொழிக் கலப்பு அதிகமானதால் சமசுகிருத ஒலிகளை துல்லியமாக குறிப்பிடுவதற்கு கிரந்தம் சார்ந்த எழுத்து முறைக்கு மாறியது. ஏனெனில் வட்டெழுத்து வடிவங்களில் சமசுகிருத ஒலிகளைக் குறிப்பதற்கான குறியீடுகள் இல்லை.
தோற்றம்
[தொகு]திராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். இந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமஸ்கிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுமுறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சமஸ்கிருதத்தின் பிரச்சாரத்தினால் சமஸ்கிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமஸ்கிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினையே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளைத் தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதைய மலையாள எழுத்துமுறையினை நிறுவினார்.
நெடுங்கணக்கு
[தொகு]உயிர் எழுத்துக்கள்
[தொகு]உயிர் எழுத்து | உயிரெழுத்து குறி | 'ப'கர உயிர்மெய் | ஒத்த தமிழ் எழுத்து | IPA | குறிப்பு | |
---|---|---|---|---|---|---|
അ | പ | (pa) | அ | a | short 'a' | |
ആ | ാ | പാ | (pā) | ஆ | aː | long 'a' |
ഇ | ി | പി | (pi) | இ | i | short 'i' |
ഈ | ീ | പീ | (pī) | ஈ | iː | long 'i' |
ഉ | ു | പു | (pu) | உ | u | short 'u' |
ഊ | ൂ | പൂ | (pu) | ஊ | uː | long 'u' |
ഋ | ൃ | പൃ | (pr) | 'ரு' | r< | தி'ரு'ப்தி என்பதில் ஒலிப்பது போல |
ൠ | (pr) | 'ரு'வின் நெடில் | பொதுவழக்கில் இல்லை | |||
ഌ | 'ரு'வின் லகர இணை | பொதுவழக்கில் இல்லை | ||||
ൡ | 'லு'வின் நெடில் | பொதுவழக்கில் இல்லை | ||||
എ | െ | പെ | (pe) | எ | e | |
ഏ | േ | പേ | (pē) | ஏ | eː | |
ഐ | ൈ | പൈ | (pai) | ஐ | ai | |
ഒ | ൊ | പൊ | (po) | ஒ | o | short 'o' |
ഓ | ോ | പോ | (pō) | ஓ | oː | long 'o' |
ഔ | ൌ | പൌ | (pau) | ஔ | au | |
അ. | ം | പം | (pau) | அம் | aṃ | அனுஸ்வரம், 'ம்' மற்றும் மூக்கொலிகளுக்கு |
അ: | ഃ | പഃ | (pau) | அஹ | aḥ | விஸார்க்கம், சம்கிருதம் சொற்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது |
மெய்யெழுத்துக்கள்
[தொகு]மலையாளம் | யூனிகோட் பெயர் | ஒத்த தமிழ் எழுத்து | IPA |
ക | KA | க | k |
ഖ | KHA | க்+ஹ | kh |
ഗ | GA | க - ம'க'ன் | g |
ഘ | GHA | 'க்' + ஹ | gɦ |
ങ | NGA | ங | ŋ |
ച | CHA | ச | tʃ |
ഛ | CHHA | ச்+ஹ | tʃh |
ജ | JA | ஜ | dʒ |
ഝ | JHA | ஜ்+ஹ | dʒɦ |
ഞ | NJA | ஞ | ɲ |
ട | TTA | ட | ʈ |
ഠ | TTHA | ட்+ஹ | ʈh |
ഡ | DDA | ட - ம'ட'ம் | ɖ |
ഢ | DDHA | 'ட்'+ஹ | ɖɦ |
ണ | NNA | ண | ɳ |
ത | THA | த | t |
ഥ | THHA | த்+ஹ | th |
ദ | DA | த - ம'த'ம் | d |
ധ | DHA | 'த்'+ஹ | dh |
ന | NA | ந | n |
പ | PA | ப | p |
ഫ | PHA | ப்+ஹ | ph |
ബ | BA | ப- க'ப'ம் | b |
ഭ | BHA | 'ப்'+ஹ | bɦ |
മ | MA | ம | m |
യ | YA | ய | j |
ര | RA | ர | ɾ |
ല | LA | ல | l |
വ | VA | வ | ʋ |
ശ | SHA | ஶ | ɕ |
ഷ | SSA | ஷ | ʃ |
സ | SA | ஸ | s |
ഹ | HA | ஹ | ɦ |
ള | LLA | ள | ɭ |
ഴ | ZHA | ழ | ɻ |
റ | RRA | ற | r |
பிற குறியீடுகள்
[தொகு]குறியீடு | பெயர் | Function |
---|---|---|
് | சந்திரக்கலை | தமிழ் 'புள்ளி' போல, உயிர்மெய் வடிவங்களில் அகரத்தை நீக்குகிறது |
ം | அனுஸ்வரம் | மூக்கொலிக்கு |
ഃ | விசார்க்கம் | எழுத்தின் இறுதியில் 'ஹ'கரத்தை சேர்ர்கும். |
எண்கள்
[தொகு]மலையாள எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் மலையாள எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. மலையாளம் இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது
மலையாளம் | இந்தோ-அரேபியம் |
---|---|
൦ | 0 |
൧ | 1 |
൨ | 2 |
൩ | 3 |
൪ | 4 |
൫ | 5 |
൬ | 6 |
൭ | 7 |
൮ | 8 |
൯ | 9 |
மலையாள எழுத்துக்களின் பயன்பாடும் தமிழும்
[தொகு]மிடற்றொலிகள்
[தொகு]மலையாளம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்ட வட்டெழுத்திலேயே எழுதப்பட்டதால், மலையாளத்தின் சொற்சேர்க்கை தமிழின் சொற்சேர்க்கையோடு ஒத்து உள்ளது.
மலையாளத்தில், திராவிட சொற்களை எழுதும் போதும் ദ(da),ഗ(ga),ബ(ba),ഡ(Da) போன்ற எழுத்துக்களை மலையாளம் பயன்படுத்துவதில்லை. அவற்றுக்கு ஈடாக மிடற்றொலிகளை குறிக்க ത(த),ക(க),പ(ப),ട(ட) போன்றவற்றையே பயன்படுத்துகின்றனர். தமிழில் எவ்வாறு க,த,ப,ட போன்றவற்றை மிடற்றொலிகளாக ஒலிக்கப்படுவதற்கு என்னென்ன விதிகள் உள்ளனவோ, அவை அனைத்தும் மலையாள எழுத்துகளுக்கும் பொருந்தும்.
உதாரணமாக, 'புதிய' என்னும் சொல்லை പുതിയ(putiya) என்றே எழுதுகின்றனர். இந்தச்சொல் pudiya என உச்சரிக்கப்பட்டாலும் அதை പുദിയ என எழுதுவதில்லை. இதைப்போலவே கள் என்ற பன்மை விகுதி gaḷ என உச்சரிக்கப்பட்டாலும் அதை കള്(கள்) என்றே எழுதுகின்றனர். ഡ,ത வின் பயன்பாடும் இவ்வாறே உள்ளன.
தமிழைப்போலவே ങ്ക-ṅk(ங்க) என்பது ṅk என எழுதப்படாலும் ṅg எனவே உச்சரிக்கப்படுகிறது. இது ഞ്ച -ñc(ஞ்ச-ñj)ற்கும், ന്ത-nt(ந்த-ndha)ற்கும் பொருந்தும்.
வடமொழிச் சொற்களின் உச்சரிப்பு
[தொகு]மலையாளத்தில் எழுதப்படும் வடமொழி சொற்கள் திராவிட முறைக்கு ஏற்றவாறு உச்சரிக்கப்படுகின்றன.
உதாரணமாக സ്വാഗതം(svāgatam) என்ற எழுதினாலும் அதை svāgadam என்றே உச்சரிக்கின்றனர். இதைபோல் பெரும்பாலான வடமொழி சொற்கள் வடமொழியின் சொற்சேர்க்கையை பின் பற்றினாலும் திராவிட முறைக்கு ஏற்பவே உச்சரிக்கப்படுகின்றன.
மலையாள குற்றியலுகரம்
[தொகு]தமிழைப் போலவே மலையாளத்திலும் குற்றியலுகரம் உள்ளது. தமிழில் 'உ'கரத்தை குற்றியலுகரத்தையும் எழுத பயன்படுத்துவது போல் மலையாளத்தில் 'சந்திரக்கலையை' குற்றியலுகரத்தை குறிக்க பயன்படுத்துகின்றனர். மலையாளத்தில் குற்றியலுகரத்தை அதன் வடமொழிப்பெயரை வைத்து 'சம்விருத உகாரம்' என அழைக்கின்றனர்.
உதாரணமாக அது - അത്(அத்) தேக்கு - തേക്ക്(தேக்க்) கூடு - കൂട്(கூட்)
குற்றியலுகரத்தை குறிக்க 'உ'கர குறியின் மீது 'சந்திரக்கலையை' வைத்தும் குறிப்பதுண்டு
அது - അതു്(அது) தேக்கு - തേക്കു്(தேக்கு) கூடு - കൂടു്(கூடு)
எனவே ன், ண், ல், ள், ர் போன்றவற்றை சந்திரக்கலை கொண்டு எழுதும்போது அதை னு, ணு, லு, ளு, ரு ஆகியவற்றின் குற்றியலுகரமாக ஒலிப்படும். இதைப்போக்கி மேற்கூறிய ஒற்று ஒலிகளை குறிக்க சில்லெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ்க்கண்டவைகளையே சில்லெழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை சில்லுகள் எனவும் கூறுவர்.
ண் - ണ് ன் - ന് ர் - ര് ல் - ല് ள்- ള്
ஈழத்தமிழும் மலையாள எழுத்துமுறையும்
[தொகு]மலையாளத்தில் ஈழத்தமிழில் பயன்படுத்துவது போலவே சில எழுத்துப்பயன்பாடுகள் காணப்படுகின்றன. റ്റ(ற்ற) 'ட(t)'வாக ஒலிக்கப்படுகிறது. ന്റ(ன்ற) என்பதை nt,nd என்பது போல ஒலிக்கப்படுகிறது. Comedy, October என்பவை കോമഡി (கோமடி), ഒക്ടോബര്(ஒக்டோபர்) என மலையாளத்தில் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக:
Font - ഫോന്റ്(ஃபோன்ற்) Internet - ഇന്റെര്നെറ്റ്(இன்றெர்னெற்ற்) Pilot - പൈലറ്റ്(பைலற்ற்)
Antony - ആന്റണി(ஆன்றனி) போன்றவைகளை குறிப்பிடலாம்.
கூட்டெழுத்துக்கள்
[தொகு]கிரந்தத்தில் இருந்து உருவான எழுத்துமுறையாதலால் மலையாளத்தில் பல்வேறு கூட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.
உதாரணமாக கீழ்க்கண்ட கூட்டெழுத்துக்களை காணவும்
ക്ല - க்ல ക്ര - க்ர ക്വ - க்வ ക്യ - க்ய
ത്ത - த்த പ്പ - ப்ப ന്ന - ன்ன ണ്ണ - ண்ண
யூனிகோடில் மலையாளம்
[தொகு]0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | A | B | C | D | E | F | ||
D00 | ഀ | ഁ | ം | ഃ | ഄ | അ | ആ | ഇ | ഈ | ഉ | ഊ | ഋ | ഌ | | എ | ഏ | |
D10 | ഐ | | ഒ | ഓ | ഔ | ക | ഖ | ഗ | ഘ | ങ | ച | ഛ | ജ | ഝ | ഞ | ട | |
D20 | ഠ | ഡ | ഢ | ണ | ത | ഥ | ദ | ധ | ന | ഩ | പ | ഫ | ബ | ഭ | മ | യ | |
D30 | ര | റ | ല | ള | ഴ | വ | ശ | ഷ | സ | ഹ | ഺ | ഻ | ഼ | ഽ | ാ | ി | |
D40 | ീ | ു | ൂ | ൃ | ൄ | | െ | േ | ൈ | | ൊ | ോ | ൌ | ് | ൎ | ൏ | |
D50 | | | | | ൔ | ൕ | ൖ | ൗ | ൘ | ൙ | ൚ | ൛ | ൜ | ൝ | ൞ | ൟ | |
D60 | ൠ | ൡ | ൢ | ൣ | | | ൦ | ൧ | ൨ | ൩ | ൪ | ൫ | ൬ | ൭ | ൮ | ൯ | |
D70 | ൰ | ൱ | ൲ | ൳ | ൴ | ൵ | ൶ | ൷ | ൸ | ൹ | ൺ | ൻ | ർ | ൽ | ൾ | ൿ |