கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிதத்தில், தொடர் விரிவு (series expansion) என்பது அடிப்படை கணிதச் செயல்களால் (கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்) விவரிக்க முடியாத ஒரு சார்பினைக் கணக்கிடும் முறையாகும்.
அவ்வாறு கணக்கிடும்போது கிடைக்கும் தொடரை முடிவுறு உறுப்புகளைக் கொண்டதாக மட்டுப்படுத்திச் சார்பினை தோராயப்படுத்தலாம். தொடரில் எடுத்துக்கொள்ளப்படும் உறுப்புகளின் எண்ணிக்கை குறைந்தளவாக இருப்பதைப் பொறுத்து தோராயமாக்கப்படல் எளிதாகும்.