பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி
அரசு விக்டோரியா கல்லூரி (ஆங்கிலம்-Government Victoria College) 1887 ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் உருவாக்கப் பட்டது. இது கேரளத்தின் ஆறு மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, மலபார் பகுதியில் உள்ள மிகப் பழைமையான கல்லூரி ஆகும்.
தோற்றமும், வளர்ச்சியும்
[தொகு]இது 1866 ஆம் ஆண்டு, தரப்பள்ளியாக(rate school) உருவாக்கப்பட்டது. பின் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, 1888ஆம் ஆண்டு இரண்டாம் நிலைகல்லூரியாக உயர்த்தப்பட்டு, தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. மொழிவாரியான மாநிலங்கள் இந்தியாவில் உருவானதால், 1957ஆம் ஆண்டு, இக்கல்லூரி கேரளப் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது. தற்பொழுது இக்கல்லூரி கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி
[தொகு]- இக்கல்லூரியின் குறிக்கோளுரை, இலத்தீனில் 'Labunter et imputatur' உள்ளது.
- இதன் ஆங்கிலப்பெயர்ப்பு, the moments slip away and are laid to your accountஆகும்.
- தமிழில், 'உங்கள் வாழ்நாளில் கண்டறியாத நேரங்கள் குறிக்கப்படுகின்றன' என்று பொருளாகிறது.
- இக்கல்லூரியில் கலை,வணிகம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக விலங்கியல் துறையில், முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வசதி உள்ளது.
பயின்றோர்
[தொகு]வ. எண் | பெயர் | பயின்ற பாடமும் பயின்ற காலமும் | சிறந்து விளங்கிய துறை |
---|---|---|---|
1 | எம். கிருஷ்ணன் நாயர்
(b.1870 - d.1938) |
உயர்நிலைப் பள்ளி
1885 - 1886 |
மேனாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் (1914–1920).
( 1932-இல் இவர் நினவாக கல்லூரிநுழைவாயில் கட்டப்பட்டது.) |
2 | கே. மாதவன் நாயர்
(b.1882 - d.1933) |
உயர்நிலைப் பள்ளி
1900 - 1901 |
சுதந்திரப்போராட்ட வீரர், கேரள காங்கிரசின் முதல் தலைவர்.(1925) |
3 | பேராசிரியர் பி.ஆர்.பிசாரோத்தி
(b.1909 - d.2002) |
கல்லூரி முன்பருவப் படிப்பு
1923 - 1925 |
இந்திய வானிலை ஆய்வியல் நிறுவனத்தை நிறுவியவர் (1962) |
4 | இ.எம்.எஸ். நம்பூதரி பட்
(b.1909 - d.1998) |
உயர்நிலைப் பள்ளி
1928 - 1929 |
கேரளாவின் முதல் முதலமைச்சர்
(1957–1959) |
5 | நீதியரசர்.வி.ஆர் கிருட்டிண ஐயர்
(b.1915 - ) |
கல்லூரி முன்பருவப் படிப்பு
1931 - 1933 |
உச்சநீதி மன்ற நீதிபதி
(1973–1980) |
Sri எம்.டி. இராமனாதன்
(b.1923 - d.1984) |
கல்லூரி முன்பருவப் படிப்பு, இளம்அறிவியல் பட்டம்(இயற்பியல்)
1939 - 1943 |
கர்நாடக இசை யின் வாய்ப்பாட்டாளர் & அமைப்பாளர் | |
7 | ஓ.வி. விசயன்
(b.1930 - d.2005) |
கல்லூரி முன்பருவப் படிப்பு, இளங்கலை பொருளாதாரப் பட்டம்.
1949 - 1953 |
கேலிச்சித்திரப்பட வல்லுனர். |
8 | டி.என். சேசன்
(b.1932 - ) |
கல்லூரி முன்பருவப் படிப்பு
1947 - 1949 |
தலைமைத் தேர்தல்அதிகாரி
(1990–1996) |
9 | இ. சிறீதரன்
(b.1932 - ) |
கல்லூரி முன்பருவப் படிப்பு
1947 - 1949 |
கொங்கன் இரயில்வேயின் வடிவமைப்பாளர்,அவைத்தலைவர், தில்லி இரயில்வே. |
10 | எம்.டி. வாசுதேவன் நாயர்
(b.1933 - ) |
கல்லூரி முன்பருவப் படிப்பு,இளம்அறிவியல்பட்டம்(வேதியியல்)
1949 - 1953 |
தேசிய விருது பெற்ற திரைப்பட உருவாக்குனர். (Jnanpeeth Award Winner-1995), |
11 | முனைவர்.கே.என். பணிக்கர்
(B.1936- ) |
இளம்அறிவியல்பட்டம்(வேதியியல்)
1953 - 1956 |
உலகப் புகழ் வரலாற்று ஆய்வாளர். |
புற இணைப்புகள்
[தொகு]இக்கல்லூரியின் ஆங்கில இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்