உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லம்

ஆள்கூறுகள்: 8°53′36″N 76°36′51″E / 8.8932°N 76.6141°E / 8.8932; 76.6141
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லம்
நகரம்
கொல்லம்
கொல்லம்
கொல்லம் பெருநகரப் பகுதிக்குள் நகரின் இருப்பிடம்
கொல்லம் பெருநகரப் பகுதிக்குள் நகரின் இருப்பிடம்
கொல்லம் is located in கேரளம்
கொல்லம்
கொல்லம்
கொல்லம் (கேரளம்)
கொல்லம் is located in இந்தியா
கொல்லம்
கொல்லம்
கொல்லம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°53′36″N 76°36′51″E / 8.8932°N 76.6141°E / 8.8932; 76.6141[1]
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம் கேரளம்
பகுதிதெற்கு கேரளா
மாவட்டம்கொல்லம்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கொல்லம் மாநகராட்சி
 • மேயர்பிரசன்னா எர்னஸ்ட்[1]
 • துணை மேயர்கொல்லம் மது[1]
ஏற்றம்
38.32 m (125.72 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
691xxx
தொலைபேசி+91474xxxxxxx
இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்KL-02
இணையதளம்kollamcorporation.gov.in/en

கொல்லம் (மலையாளம்: കൊല്ലം) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் ஒரே மாநகராட்சி ஆகும்.

இது இந்தியாவின் மலபார் கடற்கரையில் இலட்சத்தீவுக் கடல் எல்லையில் உள்ள ஒரு பண்டைய துறைமுகம் மற்றும் நகரமாகும். இது மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ளது.[2]  இந்த நகரம் அஷ்டமுடி ஏரி மற்றும் கல்லடா ஆற்றின் கரையில் உள்ளது .[3][4][5] இது கொல்லம் மாவட்டத்தின் தலைமையகமாகும். கேரளாவின் நான்காவது பெரிய நகரமான கொல்லம் முந்திரி பதப்படுத்துதல் மற்றும் தென்னை நார் உற்பத்திக்கு பெயர் பெற்றது. இது கேரளாவின் உப்பங்கழியின் தெற்கு நுழைவாயில் மற்றும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

புவியியல்

[தொகு]

கொல்லம் பகுதியானது, 8°53′36″N 76°36′51″E / 8.8932°N 76.6141°E / 8.8932; 76.6141 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 28.32 மீட்டர் (125.72 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 361,441 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கொல்லம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 84%; பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கொல்லம் மக்கள் தொகையில் 11%, ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 https://kollamcorporation.gov.in/en
  2. "Kollam on the itinerary". The Hindu. 14 September 2018. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
  3. Cities of Kerala
  4. "Kerala Cities". Archived from the original on 24 November 2014. பார்க்கப்பட்ட நாள் 19 August 2014.
  5. Alphabetical listing of Places in State of Kerala
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கொல்லம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லம்&oldid=3992995" இலிருந்து மீள்விக்கப்பட்டது