உள்ளடக்கத்துக்குச் செல்

இம்பி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′34″N 101°42′33″E / 3.14278°N 101.70917°E / 3.14278; 101.70917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 MR5  இம்பி நிலையம்
Rapid_KL_Logo | KL Monorail_Logo ஒற்றைத் தண்டூர்தி
Imbi Station
இம்பி நிலையத்தின் தோற்றம் (2020)
பொது தகவல்கள்
அமைவிடம்இம்பி சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°8′34″N 101°42′33″E / 3.14278°N 101.70917°E / 3.14278; 101.70917
உரிமம்கேஎல் இன்பிராசிரக்சர் கூட்டு நிறுவனம்
(KL Infrastructure Group Limited}
தடங்கள்8 கோலாலம்பூர் மோனோரெயில்
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்திய நிலையம்
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு MR5 
வரலாறு
திறக்கப்பட்டது31 ஆகத்து 2003; 21 ஆண்டுகள் முன்னர் (2003-08-31)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
ஆங் துவா
கேஎல் சென்ட்ரல்
 
 கோலாலம்பூர் மோனோ 
 
புக்கிட் பிந்தாங்
தித்திவங்சா
அமைவிடம்
Map

இம்பி நிலையம் (ஆங்கிலம்: Imbi Station; மலாய்: Stesen Imbi; சீனம்: 燕美站) என்பது மலேசியா, கோலாலம்பூர், இம்பி சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.[1]

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2]

பொது

[தொகு]

இம்பி சாலையின் பெயரால் இம்பி நிலையம் பெயரிடப்பட்டது. கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலையங்களில் இம்பி நிலையமும் ஒன்றாகும்.

கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள இம்பி சாலையின் மீது நேரடியாகவும், பிளாசா பெர்ஜெயா கோபுரத்திற்கு கிழக்கு திசையிலும் அமைந்துள்ளது. இந்த நிலையம் செயல்படத் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கோலாலம்பூர் பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம் திறக்கப்பட்டது.[3]

புக்கிட் பிந்தாங் நகர மையம்

[தொகு]

இந்த நிலையத்தில் மொத்தம் ஐந்து வெளியேறு வழிகள் உள்ளன. நிலையத்தின் மேற்குப் புறத்தில் இரண்டு வெளியேறு வழிகள் உள்ளன. அவை பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம்; மற்றும் சாலையின் எதிர்ப் பக்கத்தில் உள்ள பெர்ஜெயா கோபுரத்திற்கும் செல்கின்றன; மீதமுள்ள இரண்டு வெளியேறு வழிகளும் கிழக்குப் பகுதியை நோக்கி இம்பி சாலையின் இருபுறமும் செல்கின்றன.[4]

இம்பி நிலையம், புக்கிட் பிந்தாங் நகர மையம் கடைவல மையங்களுக்கு அருகிலேயே உள்ளது. அந்த வகையில், லோ யாட் பிளாசா (Plaza Low Yat), இம்பி பிளாசா, சுங்கை வாங் பிளாசா (Sungei Wang Plaza); மற்றும் கோலாலம்பூர் பெவிலியன் ஆகியவை புக்கிட் பிந்தாங் நகர மையத்திற்குள் உள்ளன.

பல வணிகக் கட்டிடங்கள் இம்பி நிலையத்திற்கு அருகில் அமைந்து இருப்பதின் காரணமாக, வேலை நாட்களிலும் சரி; வேலை இல்லாத நாட்களிலும் சரி; இந்த நிலையம் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் பெறுகிறது. அத்துடன் இந்த நிலையத்தில் மட்டும் பேருந்து இணைப்புகள் எதுவும் இல்லை என்பது ஒரு முக்கியமான செய்தி ஆகும்.

நிலைய தள அமைப்பு

[தொகு]
L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B
G தெரு நிலை மகாராஜாலேலா சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C

காட்சியகம்

[தொகு]

இம்பி நிலையக் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Imbi Monorail station is an elevated monorail train of the Kuala Lumpur Monorail (KL Monorail) line located in Kuala Lumpur and opened on August 31, 2003". mrt.com.my. Retrieved 8 February 2025.
  2. "Maharajalela Monorail station is a Malaysian elevated monorail train station that forms a part of KL Monorail line located in Kuala Lumpur and opened alongside the rest of the train service on August 31, 2003". klia2.info. 9 October 2017. Retrieved 6 February 2025.
  3. "Berjaya Times Square to KLCC LRT Station from Imbi Monorail". Train36.com. Retrieved 8 February 2025.
  4. "Imbi Monorail station near Berjaya Times Square & Plaza Berjaya". klia2.info. 9 October 2017. Retrieved 8 February 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பி_நிலையம்&oldid=4205283" இலிருந்து மீள்விக்கப்பட்டது