உள்ளடக்கத்துக்குச் செல்

செரி செத்தியா கொமுட்டர் நிலையம்

ஆள்கூறுகள்: 3°05′04″N 101°37′19″E / 3.0845°N 101.6219°E / 3.0845; 101.6219
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரி செத்தியா
Seri Setia
 KD07  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
செரி செத்தியா கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 斯里斯迪亚
அமைவிடம்செரி செத்தியா, 47000, பெட்டாலிங் ஜெயா
சிலாங்கூர்
மலேசியா
ஆள்கூறுகள்3°05′04″N 101°37′19″E / 3.0845°N 101.6219°E / 3.0845; 101.6219
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் KD07  தஞ்சோங் மாலிம்
கிள்ளான்
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
இணைப்புக்கள்பேருந்து போக்குவரத்து ரேபிட் கேஎல்: 641
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைநிலை
தரிப்பிடம்Parking கட்டணம்
KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD07 
வரலாறு
திறக்கப்பட்டது14 ஆகஸ்டு 1995
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
முந்தைய பெயர்கள்கின்னஸ் நிலையம்
சேவைகள்
முந்தைய நிலையம்   பெட்டாலிங் ஜெயா   அடுத்த நிலையம்
டத்தோ அருண்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
செத்தியா ஜெயா
கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
செரி செத்தியா நிலையம்

செரி செத்தியா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Seri Setia Komuter Station; மலாய்: Stesen Komuter Seri Setia); சீனம்: 斯里斯迪亚) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

செரி செத்தியா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 51 இல் அமைந்துள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது.[2]

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் பெட்டாலிங் ஜெயா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குச் சேவை செய்கிறது. இந்த நிலையம் பந்தாய் புதிய நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

செரி செத்தியா நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களில் பரபரப்பாக இருக்கும். ஏனெனில் இந்த நிலையம், சுங்கைவே பகுதியில் வாழும் பயணிகள், தாங்கள் தொழில் செய்யும் இடங்களுக்குச் செல்ல பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

இப்பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளதால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

கின்னஸ் நிலையம்

[தொகு]

இந்த நிலையம் முன்பு 1980-களில் கின்னஸ் நிலையம் (Guinness Station) என்று பெயரிடப்பட்ட ஒரு சரக்கு நிலையமாக இருந்தது.[3] இந்த நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கின்னஸ் மதுபான ஆலையின் (Guinness Brewery) பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது,

தற்போதைய செரி செத்தியா கிராமம் என்பது அருகிலுள்ள சுங்கைவே கிராமத்திலிருந்து உருவானது. சுங்கைவேயின் தற்போதைய பெயர் செரி செத்தியா புதுக்கிராமம் (Seri Setia New Village). இந்த நிலையத்திலிருந்து மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலையின் (Federal Highway Malaysia) குறுக்கே சுங்கைவே கிராமத்திற்கு இணைப்புப் பாலம் உள்ளது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Seri Setia KTM Komuter Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  2. "Seri Setia KTM Station served by the Port Klang Route of the KTM Komuter service". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  3. "KTM Klang Valley Network, 1985". பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]