உள்ளடக்கத்துக்குச் செல்

புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம்

ஆள்கூறுகள்: 3°02′10″N 101°28′13″E / 3.0362°N 101.47036°E / 3.0362; 101.47036
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் பாடாக்
Bukit Badak
 KD13  மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்
புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்சீன மொழி: 武吉巴达
அமைவிடம்புக்கிட் பாடாக் சாலை, 41000 கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°02′10″N 101°28′13″E / 3.0362°N 101.47036°E / 3.0362; 101.47036
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள் KD13  தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை2 நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்4
தொடருந்து இயக்குபவர்கள் மலாயா தொடருந்து
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking கட்டணம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD13 
வரலாறு
திறக்கப்பட்டதுஆகத்து 14, 1995 (1995-08-14)
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்25 kV AC மின்மயமாக்கல்
சேவைகள்
முந்தைய நிலையம்   கிள்ளான்   அடுத்த நிலையம்
சா ஆலாம்
தஞ்சோங் மாலிம்
 
தஞ்சோங் மாலிம் கிள்ளான்
 
கிள்ளான்
கிள்ளான் துறைமுகம்
அமைவிடம்
Map
பாடாங் ஜாவா நிலையம்

புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Bukit Badak Komuter Station; மலாய்: Stesen Komuter Bukit Badak); சீனம்: 武吉巴达) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் கிள்ளான் பகுதியில் உள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1][2]

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம் சா ஆலாம் - கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தை நிறைவு செய்வதற்காகக் கட்டப்பட்டது.[3]

பொது

[தொகு]

புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையத்திற்கு புக்கிட் பாடாக் கிராமத்தின் பெயரில் பெயரிடப்பட்டது. புக்கிட் பாடாக் என்பது பாடாங் ஜாவா மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களுக்கு இடையில் தனிமைப் படுத்தப்பட்ட கிராமப் பகுதி ஆகும்.[4][5]

இங்கு மிகக் குறைவான கடைகள்; மற்றும் பொது வசதிள் மட்டுமே உள்ளன. புக்கிட் பாடாக் பகுதியில் தெனாகா நேசனல் நிறுவனத்தின் மின்சாரம் தயாரிக்கும் ஆலை உள்ளது.

கிள்ளான்

[தொகு]

கிள்ளான் நகரம் சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கே உள்ளது.

சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது.

கிள்ளான் லிட்டில் இந்தியா

[தொகு]

ஈய வளங்கள் நிறைந்த கிள்ளான்; கிள்ளான் பள்ளத்தாக்கு; ஆகிய இடங்கள் சிலாங்கூர் வரலாற்றிலும், மலாயா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 14-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் நகரகிரேதாகமம் எனும் இலக்கியப் படைப்பிலும் கிள்ளான் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கிள்ளானில் சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் என்றால் “ஆலாம் சா” மாளிகை, “சுல்தான் சுலைமான்” பள்ளிவாசல், தெங்கு சாலை லிட்டில் இந்தியா, கேரித் தீவு மற்றும் ஸ்ரீ சுந்தராஜா பெருமாள் ஆலயம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bukit Badak KTM Station". klia2.info. 30 October 2017. பார்க்கப்பட்ட நாள் 29 October 2024.
  2. "KTM Komuter - Bukit Badak Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 19 December 2010. பார்க்கப்பட்ட நாள் 29 October 2024.
  3. "Bukit Badak KTM Komuter Station | mrt.com.my". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 October 2024.
  4. "KTM Bukit Badak Schedule 2024 (Jadual) Komuter Train to KL Sentral". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 29 October 2024.
  5. "Bukit Badak Railway Station • RailTravel Station". RailTravel Station.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]