உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை
Malaysia Federal Highway
Lebuhraya Persekutuan Malaysia

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை
Kuala Lumpur–Klang Highway
Lebuhraya Persekutuan Kuala Lumpur–Klang

கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (2023)
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு மலேசிய பொதுப்பணித் துறை (சிலாங்கூர் பிரிவு)
கோலாலம்பூர் மாநகராட்சி, (கோலாலம்பூர் பிரிவு)
நீளம்:45 km (28 mi)
கட்டணப் பகுதி: 16 km (10 mi)
பயன்பாட்டு
காலம்:
1974 –
வரலாறு:கட்டுமானம்: 1977; சுங்கச் சாவடி விரைவுச்சாலை கட்டுமானம்: 1992–1993
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கிள்ளான், சிலாங்கூர்
 2 5 கோத்தா பாலச் சாலை

5 கூட்டரசு சாலை 5

E30 20 கிள்ளான் வடக்கு நீரிணை புறவழிச் சாலை

E32 மேற்கு கடற்கரை விரைவுச்சாலை
E13 கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை
3214 சுபாங்-பத்து தீகா சாலை
15 சுல்தான் அப்துல் அஜீஸ் சாலை
E11 டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
E10 பந்தாய் புதிய விரைவுச்சாலை
E23 இசுபிரிண்ட் விரைவுச்சாலை
E39 செத்தியா வங்சா-பந்தாய் விரைவுச்சாலை
பங்சார்–பெட்டாலிங் ஜெயா புறவாழிச்சாலை
2 சையத் புத்ரா சாலை
2 கிள்ளான் லாமா சாலை
E37 கிழக்கு-மெற்கு இணைப்பு விரைவுச்சாலை

கிழக்கு முடிவு:செபுத்தே, கோலாலம்பூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கிள்ளான் துறைமுகம், ஐ-சிட்டி, பாடாங் ஜாவா, சா ஆலாம், பத்து தீகா, சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா, கோலாலம்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை அல்லது கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Highway; (FH2) அல்லது Kuala Lumpur–Klang Highway); மலாய்: Lebuhraya Persekutuan Malaysia அல்லது Lebuhraya Persekutuan Kuala Lumpur–Klang) என்பது மலேசியா, கோலாலம்பூர்; சிலாங்கூர் மாநிலப் பகுதிகளில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை ஆகும்.[1]

கோலாலம்பூர், செபுத்தே பகுதியில் தொடங்கும் இந்த நெடுஞ்சாலை 45 கிமீ (28 மைல்) நீளம் கொண்டது; கோலாலம்பூர்; பெட்டாலிங் ஜெயா; சா ஆலாம்; கிள்ளான், கிள்ளான் துறைமுகம் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கின் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் இதுவே முதல்நிலை வகிக்கிறது. இந்தச் சாலை, மலேசிய கூட்டரசு சாலை (Malaysia Federal Route 2) அல்லது மலேசிய கூட்டரசு 2 என குறியிடப்பட்டுள்ளது.[2]

பொது

[தொகு]

1965-ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதி சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்த பிறகு, சிங்கப்பூர் துறைமுகத்திற்குப் பதிலாக மலேசியாவின் புதிய தேசியத் துறைமுகமாக போர்ட் சுவெட்டன்காம் (தற்போது கிள்ளான் துறைமுகம்) துறைமுகத்தை அமைக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்தது.

அதன் பின்னர் தான் இந்த நெடுஞ்சாலையின் வரலாறு தொடங்கியது. இதன் விளைவாக, முன்னாள் கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையை (Kuala Lumpur–Klang Highway) மேம்படுத்துவதன் மூலம் கிள்ளான் துறைமுகம் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் நெடுஞ்சாலையை உருவாக்கலாம் என அரசாங்கம் திட்டமிட்டது.

இந்த நெடுஞ்சாலை 14 சனவரி 1959 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது)[3] அப்போதுள்ள சாலைச் சந்திப்புகளை மாற்றுப் பாதைகளுடன் இணைத்தன் மூலம் ஒரு முழு நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. அந்த வகையில் பழைய கூட்டரசு சாலை புதிய நெடுஞ்சாலையாக மாறியது; அத்துடன் மலேசியாவின் முதல் அதிவேக நெடுஞ்சாலையாகவும் பெயர் பெற்றது.

அமைவு

[தொகு]

கோலாலம்பூர்-பெட்டாலிங் ஜெயா போக்குவரத்துப் பரவல் திட்டம், 1974-இல் மலேசிய பொதுப்பணித் துறையின் (JKR) கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் கோலாலம்பூர் உள்வட்டச் சாலை, கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1, சையத் புத்ரா சாலை மற்றும் மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை 2 (கோலாலம்பூர்-பெட்டாலிங் ஜெயா) ஆகியவை அடங்கும்.

கட்டுமானம்

[தொகு]

இந்த நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு உலக வங்கி வழங்கிய கடன் நிதி வழங்கியது. அதன் மூலமாக சுபாங் வானூர்தி நிலைய மாற்றுவழியில் இருந்து கோலாலம்பூர் வரையிலான கூட்டர்சு நெடுஞ்சாலைக்கான மேம்படுத்தல் பணிகள் 1974 முதல் 1977 வரை நீடித்தன

இந்த நெடுஞ்சாலை முதலில் 4 வழிச்சாலையாக இருந்தது. இருப்பினும், 1992 ஆம் ஆண்டு பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் (PLUS Expressways), பத்து தீகா மற்றும் சுங்கை ராசாவ் ஆகிய இரண்டு சுங்கச் சாவடிகளுடன் முழு நெடுஞ்சாலையையும் 6-வழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தியது.

6-வழி சுங்கச்சாவடி 11 மே 1993-இல் செயல்படத் தொடங்கியது. இந்த நெடுஞ்சாலை பெரிய அளவிலான போக்குவரத்தைக் கையாளுகிறது; மேலும் ஒரு நாளில் எந்த நேரத்திலும் குறிப்பிடத்தக்க நெரிசல் ஏற்படலாம் என்றும் அறியப்படுகிறது.[4]

சாலைத் தரம்

[தொகு]

இந்தக் கூட்டரசு நெடுஞ்சாசாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[5]

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Blog Jalan Raya Malaysia (Malaysian Highway Blog): Federal highways". Blog Jalan Raya Malaysia (Malaysian Highway Blog). பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  3. Adilah, By Azril Annuar and Anith (5 February 2018). "Who's in charge of the Federal Highway now?". Malay Mail (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  4. "Static Sites - Federal Highway – 1,607,143 vehicles per day". LAGUNA. பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  5. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]