மலேசிய கூட்டரசு சாலை 23
மலேசிய கூட்டரசு சாலை 23 Malaysia Federal Route 23 Laluan Persekutuan Malaysia 23 | |
---|---|
மூவார்–தங்காக்–சிகாமட் சாலை Muar–Tangkak–Segamat Road Jalan Muar–Tangkak–Segamat | |
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 76.27 km (47.39 mi) |
பயன்பாட்டு காலம்: | 1914 – |
வரலாறு: | கட்டுமானம் 1939 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | சிகாமட் |
மூவார் புறவழிச்சாலை கூட்டரசு சாலை 5 J21 சியாலாங் சாலை | |
தெற்கு முடிவு: | பாரிட் பூங்கா |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | சுங்கை மத்தி; புக்கிட் கம்பிர்; புக்கிட் கங்கார்; தங்காக்; சாகில்; ஜெமிந்தா; கெமெரே |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 23 அல்லது மூவார்–தங்காக்–சிகாமட் சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 23; அல்லது Muar–Tangkak–Segamat Road; மலாய்: Laluan Persekutuan Malaysia 23 அல்லது Jalan Muar–Tangkak–Segamat) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான சாலை ஆகும்.[1]
வடக்கில் சிகாமட் நகரத்தையும்; தெற்கில் பாரிட் பூங்கா நகரத்தையும் இணைக்கும் இந்தச் சாலை, தங்காக் வழியாக, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்திற்கான ஒரு முக்கியச் சாலையாகவும் அமைகிறது.[2]
பொது
[தொகு]இந்தச் சாலை 76.27 கிமீ (47.39 மைல்) நீளம் கொண்டது; மற்றும் ஜொகூர் சிகாமட் மாவட்டத்தில் ஒரு முக்கியச் சாலையாகவும்; தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கியச் கூட்டரசு சாலையாகவும் விளங்குகிறது.
மலேசிய கூட்டரசு சாலை 23-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]
சிறப்புக் கூறுகள்
[தொகு]இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்:
- புக்கிட் கங்கார் மற்றும் தங்காக் நகரஙகளுக்கு இடையிலான சாலையில் பல சீனர் கல்லறைகள் உள்ளன
- லெடாங் மலைக்கு ஒரு முக்கிய பாதையாக உள்ளது
- தங்காக் நகரம்; ஜொகூர் மாநிலத்தின் நெசவுப் பொருட்களின் நகரம்
சாலைகள் மேம்பாடு
[தொகு]டிசம்பர் 7, 2007 அன்று, சிகாமட்டில் இருந்து தங்காக் வரையிலான 40 கி.மீ தூரத்தை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக மேம்படுத்த மலேசிய மத்திய அரசு முடிவு செய்தது. இந்தச் சாலையின் கட்டுமானம் 2015-இல் நிறைவடைந்தது.
இதற்கிடையில், மலேசிய கூட்டரசு சாலை 23-இன் இரண்டாவது பகுதி ஜெமிந்தா நகரில் இருந்து லேடாங் மலை தேசியப் பூங்கா வரையிலான சாலையின் கட்டுமானம் நிறைவடைந்தது.
கட்டுமானம்
[தொகு]63-கிமீ நீளம் கொண்ட சிகாமட்-தங்காக்-மூவார் நெடுஞ்சாலையின் கட்டுமானம், 2011 இல் தொடங்கியது. கட்டமானத்திற்கு ரிங்கிட் RM 750 மில்லியன் முதல் ரிங்கிட் RM 770 மில்லியன் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
மலேசிய கூட்டரசு சாலை 23-இல் உள்ள 14 பாலங்களை மேம்படுத்துவது; மற்றும் ஐந்து தொகுப்புகளாகச் சாலைகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மலேசிய கூட்டரசு சாலை 23-இன் கட்டுமானம் 2015 இல் நிறைவடைந்தது.
விளக்கம்
[தொகு]- மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia)
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lembaga Lebuhraya Malaysia". www.llm.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ "Public Works Department (JKR) Malaysia" (PDF). JKR Malaysia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.
- ↑ "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.