ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 38 Malaysia Federal Route 38 Laluan Persekutuan Malaysia 38 | |
---|---|
ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை Johor Bahru Eastern Dispersal Link Expressway Lebuhraya Penyebaran Timur Johor Bahru | |
வழித்தட தகவல்கள் | |
AH2- இன் பகுதி | |
பராமரிப்பு மலேசிய பொதுப்பணித் துறை | |
நீளம்: | 8.1 km (5.0 mi) |
பயன்பாட்டு காலம்: | 2007 – |
வரலாறு: | கட்டுமானம் 2012 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | மலேசிய தெற்கு வழித்தடம்; பாண்டான் ஜெயா, ஜொகூர் |
தெப்ராவ் நெடுஞ்சாலை ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை J5 ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை | |
தெற்கு முடிவு: | புக்கிட் தீமா விரைவுச்சாலை மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பெர்மாஸ் ஜெயா, கம்போங் பாக்கார் பத்து, பாசிர் பெலாங்கி, இசுதுலாங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 38 (ஆங்கிலம்: Malaysia Federal Route 38; அல்லது Johor Bahru Eastern Dispersal Link Expressway); மலாய்: Laluan Persekutuan Malaysia 38 அல்லது Lebuhraya Penyebaran Timur Johor Bahru) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாநகரத்தில் உருவாக்கப்பட்ட மிக நவீன நெடுஞ்சாலை ஆகும்.[1]
ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலை என்பது 8.1 கிலோமீட்டர் (5.0-மைல்) நீளம் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை என அறியப்படுகிறது.
இந்தச் சாலை, மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்தின் இறுதிக் கட்டத்தில் பாண்டான் நகர மையத்தில் உள்ள மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்துடன் இணைகிறது.
பொது
[தொகு]சிங்கப்பூருக்குள் எல்லை தாண்டிச் செல்லும் வாகனப் போக்குவரத்துகள், ஜொகூர் பாரு நகர மையத்தை எளிதாகக் கடந்து செல்லவும்; தெப்ராவ் நெடுஞ்சாலையில் (Johor Bahru–Kota Tinggi Highway) நெரிசலைக் குறைக்கவும் இந்த அதிவேக நெடுஞ்சாலை கட்டப்பட்டது.[2]
இந்த அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவு ரிங்கிட் RM 1 பில்லியன் ஆகும்.[3]
ஒன்பதாவது மலேசியா திட்டம்
[தொகு]இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் சுல்தான் இசுகந்தர் கட்டிடத்திற்கு முன்; ஜொகூர் பாரு சுங்கம், குடியேற்றம் மற்றும் தனிமைப் படுத்துதல் (Customs, Immigration and Quarantine (CIQ) Complex) வளாகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
2004-ஆம் ஆண்டில், ஒன்பதாவது மலேசியா திட்டத்தின் (Ninth Malaysia Plan) (2006-2010) கீழ், ஜொகூர் பாரு கிழக்குப் பரவல் இணைப்பின் (Johor Bahru Eastern Dispersal Link) கட்டுமானம் முன்மொழியப்பட்டது.
ஜொகூர் பாரு கிழக்கு இணைப்பு நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1 அக்டோபர் 2007-இல் தொடங்கி; 20 மார்ச் 2012-இல் நிறைவடைந்தது. 1 ஏப்ரல் 2012 அன்று, நெடுஞ்சாலை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[4]
விளக்கம்
[தொகு]- மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia)
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
மேலும் காண்க
[தொகு]- ஜொகூர் பாரு
- பாசிர் பெலாங்கி
- மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்
- பாசிர் கூடாங்-பெர்மாஸ் ஜெயா நெடுஞ்சாலை
- மலேசிய தெற்கு வழித்தடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
- ↑ "Govt takes over highway". thestar.com.my. 31 August 2012. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012.
- ↑ 12 projects in IDR this year பரணிடப்பட்டது 9 பெப்பிரவரி 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "EDL OPENS WITH NO TOLL FOR NOW". Today. 2 April 2012. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/today20120402-1.2.24.4?qt=malaysian,%20highway,%20authority&q=malaysian%20highway%20authority.