உள்ளடக்கத்துக்குச் செல்

நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய கூட்டரசு சாலை 32
Malaysia Federal Route 32
Laluan Persekutuan Malaysia 32

நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை
Nilai–KLIA Highway
Lebuhraya Nilai–KLIA
வழித்தட தகவல்கள்
நீளம்:26.0 km (16.2 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:தஞ்சோங் டுவா பெலாஸ்
சிலாங்கூர்
 31 பந்திங்–டெங்கில்

248 புக்கிட் சங்காங் சாலை
26 கேஎல்ஐஏ விரைவுச்சாலை
29 புத்ரா ஜெயா-சைபர் ஜெயா
182 கேஎல்ஐஏ 1 சாலை
B48 பெசார் சாலாக் சாலை

E2 AH2 தெற்கு வழித்தடம்

3265 நீலாய் பாஜம் சாலை
கிழக்கு முடிவு:நீலாய் நெகிரி செம்பிலான்
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:பந்திங், டெங்கில், புத்ராஜெயா, சைபர்ஜெயா, சாலாக் திங்கி, பண்டார் பாரு நீலாய்
நெடுஞ்சாலை அமைப்பு

நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 32 (ஆங்கிலம்: Malaysia Federal Route 32; அல்லது Nilai–KLIA Highway); மலாய்: Laluan Persekutuan Malaysia 32 அல்லது Lebuhraya Nilai–KLIA) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1]

முன்பு இந்தச் சாலை சிலாங்கூர் மாநிலச் சாலை B20 என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலச் சாலை N20 என்றும் அறியப்பட்டது. எனினும் தற்போது, மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள மலேசிய பல்லூடகப் பெருவழி பகுதிக்கு ஒரு முக்கிய நெடுஞ்சாலையாகவும் அமைகிறது.[2]

பொது

[தொகு]

நீலாய்-கேஎல்ஐஏ நெடுஞ்சாலை 26.0 கிமீ (16.2 மைல்) நீளம் கொண்டது. இந்தச் சாலை மேற்கில் சிலாங்கூர் மாநிலத்தின் தஞ்சோங் டுவா பெலாஸ் (Tanjung Dua Belas) நகரத்தையும்; கிழக்கில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தையும் இணைக்கிறது.

இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரத்தில் தொடங்குகிறது. 2010-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை மலேசிய கூட்டரசு சாலை 32 என மலேசிய பொதுப்பணித் துறையினால் உறுதி செய்யப்பட்டு மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.

மலேசிய பொதுப்பணித் துறை

[தொகு]

இந்தச் சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[3]

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Jalan Labohan Dagang-Nilai FT32" (in மலாய்). Blog Jalan Raya Malaysia. 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2014-06-13.
  3. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]