உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை ஊடாங்–பாயா ரும்புட்–ஆயர் குரோ நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய கூட்டரசு சாலை 33
Malaysia Federal Route 33
Laluan Persekutuan Malaysia 33
SPA Highway

சுங்கை ஊடாங்–பாயா ரும்புட்–ஆயர் குரோ
Sungai Udang–Paya Rumput–Ayer Keroh Highway
Lebuhraya Sungai Udang–Paya Rumput–Ayer Keroh

வழித்தட தகவல்கள்
நீளம்:23.1 km (14.4 mi)
பயன்பாட்டு
காலம்:
2002 –
வரலாறு:கட்டுமானம் 2005
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:சுங்கை ஊடாங்
 5 கூட்டரசு சாலை 5

19 அலோர் காஜா–மலாக்கா தெங்கா–ஜாசின் நெடுஞ்சாலை
M2 மலாக்கா சின் சின் சாலை

143 ஆயர் குரோ நெடுஞ்சாலை
கிழக்கு முடிவு:ஆயர் குரோ
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
தஞ்சோங் மின்யாக், புக்கிட் ரம்பாய், பெர்த்தாம் உலு, பாயா ரும்புட், அலோர் காஜா, குருபோங், செங், பத்து பிரண்டாம், டுரியான் துங்கல், சிம்பாங் காடிங்
நெடுஞ்சாலை அமைப்பு

சுங்கை ஊடாங்–பாயா ரும்புட்–ஆயர் குரோ நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 33 (ஆங்கிலம்: Malaysia Federal Route 33; அல்லது Sungai Udang–Paya Rumput–Ayer Keroh Highway), (SPA Highway); மலாய்: Laluan Persekutuan Malaysia 33 அல்லது Lebuhraya Sungai Udang–Paya Rumput–Ayer Keroh) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு கூட்டரசு சாலை ஆகும்.[1]

முன்பு இந்தச் சாலை மலாக்கா மாநிலச் சாலை M17 என்றும் அறியப்பட்டது. எனினும் தற்போது, மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையாக அறியப்படுகிறது.

பொது

[தொகு]

சுங்கை ஊடாங்–பாயா ரும்புட்–ஆயர் குரோ நெடுஞ்சாலை 23.1 கிமீ (14.4 மைல்) நீளம் கொண்டது. இந்தச் சாலை மேற்கில் மலாக்கா மாநிலத்தின் சுங்கை ஊடாங் (Sungai Udang) நகரத்தையும்; கிழக்கில் ஆயர் குரோ நகரத்தையும் இணைக்கிறது.

இந்தச் சாலையின் கிலோமீட்டர் 0; மலாக்கா மாநிலத்தின் சுங்கை ஊடாங் நகரத்தில் தொடங்குகிறது. 2010-ஆம் ஆண்டில், இந்த நெடுஞ்சாலை மலேசிய கூட்டரசு சாலை 33 என மலேசிய பொதுப்பணித் துறையினால் உறுதி செய்யப்பட்டு மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.

மலேசிய பொதுப்பணித் துறை

[தொகு]

இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]

வரலாறு

[தொகு]

இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானம் 2002-இல் தொடங்கப்பட்டு 2005-இல் நிறைவடைந்தது. 2010-ஆம் ஆண்டில், மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது.

விளக்கம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]