உள்ளடக்கத்துக்குச் செல்

கேஎல்ஐஏ T1 நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KE2   KT5 
கேஎல்ஐஏ T1 நிலையம்
ERL_Logo

KLIA T1 ERL Station
கேஎல்ஐஏ T1 நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Terminal 1 KLIA
吉隆坡国际机场
அமைவிடம்கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், சிப்பாங், சிலாங்கூர், மலேசியா
உரிமம் விரைவுத் தொடருந்து இணைப்பு
நடைமேடை1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்2
வரலாறு
திறக்கப்பட்டது2002
சேவைகள்
முந்தைய நிலையம்   சிப்பாங்   அடுத்த நிலையம்
  விரைவுத் தொடருந்து இணைப்பு  
சாலாக் திங்கி
கோலாலம்பூர் சென்ட்ரல்
 
கேஎல்ஐஏ போக்குவரத்து
 
கேஎல்ஐஏ T2
முடிவு
கோலாலம்பூர் சென்ட்ரல்
  கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து  
கேஎல்ஐஏ T2
முடிவு

கேஎல்ஐஏ T1 நிலையம் அல்லது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலைய விரைவுத் தொடருந்து இணைப்பு நிலையம் 1 (ஆங்கிலம்: KLIA T1 ERL Station (KLIA); மலாய்: Stesen ERL KLIA; Stesen ERL Kuala Lumpur International Airport) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (இஆர்எல்) (Express Rail Link) (ERL) நிலையமாகும்.

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையக் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கேஎல்ஐஏ T1 நிலையத்திற்கு, விரைவுத் தொடருந்து இணைப்பின் இரண்டு வழித்தடங்களான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து (KLIA Ekspres); மற்றும் கேஎல்ஐஏ போக்குவரத்து (KLIA Transit) எனும் வழித்தடங்களின் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது.

பொது

[தொகு]

1998-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஒரு முதன்மை வானூர்தி முனையம் (Terminal) உள்ளது. அந்த வானூர்தி முனையத்தில் ஒரு தொடருந்து நிலையமும் உள்ளது. அதற்குப் பெயர்தான் 'கேஎல்ஐஏ T1 நிலையம்'.

சிப்பாங் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் தொடருந்து நிலையம் முன்பு கேஎல்ஐஏ நிலையம் என்று அழைக்கப்பட்டது. தற்போது 'கேஎல்ஐஏ T1 நிலையம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த வானூர்தி தொடருந்து நிலையம்தான் முதன்முதலில் கட்டப்பட்டது. தற்போது இந்த வானூர்தி முனையத்திற்கு வழங்கப்படும் சேவைக்கு இஆர்எல் சேவை (Express Rail Link) (ERL) எனப் பெயர் வழங்கப்பட்டு உள்ளது.

கேஎல்ஐஏ 1 நிலையம்

[தொகு]

கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தைக் கட்டும் போதே முதல் இஆர்எல் சேவை தொடருந்து நிலையத்தையும் கட்டிவிட்டார்கள். அதன் அப்போதைய பெயர் கேஎல்ஐஏ 1 நிலையம். தற்போது கேஎல்ஐஏ T1 நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2014 மே 2-ஆம் தேதி மலிவுவிலை வானூர்திச் சேவைகளுக்காக (Low Cost Carrier Terminal) (LCCT) ரிங்கிட் 4 பில்லியன் செலவில், அசல் வானூர்தி நிலையத்திற்கு 2 கிமீ அப்பால் இரண்டாவது வானூர்தி முனையம் கட்டப்பட்டது. அந்த முனையத்திற்காக மற்றும் ஒரு புதிய தொடருந்து நிலையமும் கட்டப்பட்டது. அந்த நிலையத்தின் தற்போதைய பெயர் கேஎல்ஐஏ T2 நிலையம் (KLIA T2) ஆகும்.

தடங்கள்

[தொகு]

கேஎல்ஐஏ T1 நிலையம்; மற்றும் கேஎல்ஐஏ T2 நிலையம் ஆகிய இரு நிலையங்களையும் இணைப்பதற்கு இரண்டு தொடருந்து தடங்கள் உள்ளன. தடம் (Platform A); மற்றும் தடம் பி (Platform B) என பெயர் வழங்கப்பட்டு உள்ளது. தடம் ஏ என்பதை கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து பயன்படுத்துகிறது. தடம் பி என்பதை கேஎல்ஐஏ போக்குவரத்து பயன்படுத்துகிறது.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேஎல்ஐஏ_T1_நிலையம்&oldid=4139192" இலிருந்து மீள்விக்கப்பட்டது