உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′40″N 101°42′5″E / 3.14444°N 101.70139°E / 3.14444; 101.70139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 AG8   SP8 
பிளாசா ராக்யாட்

Plaza Rakyat LRT Station
பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம் (2024)
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Stesen LRT Plaza Rakyat
人民广场站
அமைவிடம்புடு சாலை, 56000 கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°8′40″N 101°42′5″E / 3.14444°N 101.70139°E / 3.14444; 101.70139
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள் அம்பாங் வழித்தடம்

செரி பெட்டாலிங் வழித்தடம்

காஜாங் வழித்தடம்
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள் KG17  மெர்டேகா எம்ஆர்டி நிலையம்
கட்டமைப்பு
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு AG8   SP8 
வரலாறு
திறக்கப்பட்டது16 திசம்பர் 1996; 27 ஆண்டுகள் முன்னர் (1996-12-16)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
மஸ்ஜித் ஜமெயிக்
செந்தூல் தீமோர்
 
அம்பாங் வழித்தடம்
 
அங் துவா நிலையம்
அம்பாங் நிலையம்
மஸ்ஜித் ஜமெயிக்
செந்தூல் தீமோர்
 
செரி பெட்டாலிங் வழித்தடம்
 
அங் துவா நிலையம்
புத்ரா அயிட்ஸ்

பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம் அல்லது பிளாசா ராக்யாட் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Plaza Rakyat LRT Station; மலாய்: Stesen LRT Plaza Rakyat; சீனம்: 人民广场站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் அமைந்துள்ள நிலத்தடி; மற்றும் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.

இலகுரக விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.

பொது

[தொகு]

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த பிளாசா ராக்யாட் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.

கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள பிளாசா ராக்யாட் வணிகப் பேரங்காடியின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்ப்ட்டது. பழைய சுல்தான் சாலை (Sultan Street) தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது.

அருகிலுள்ள புடு சென்ட்ரல் (Pudu Sentral) பேருந்து நிலையத்தையும், பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையத்தையும் இணைக்க 150 மீட்டர் நீளமுள்ள பாதசாரி பாலமும் நடைபாதையும் அமைக்கப்பட்டன.

அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்

[தொகு]

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.

இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.

பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ABOUT RAPID RAIL". பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]