உள்ளடக்கத்துக்குச் செல்

புடு சென்ட்ரல்

ஆள்கூறுகள்: 3°08′44″N 101°42′03″E / 3.14556°N 101.70083°E / 3.14556; 101.70083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புடு சென்ட்ரல்
Pudu Sentral
பொது தகவல்கள்
அமைவிடம்புடு சாலை கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°08′44″N 101°42′03″E / 3.14556°N 101.70083°E / 3.14556; 101.70083
உரிமம்உடா ஓல்டிங்ஸ்
(Urban Development Authority of Malaysia)
இயக்குபவர்கோஸ்வே லிங்; ஜொகாரா; இஸ்டார் சட்டல்
நடைமேடை23
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஅடித்தள பேருந்து முனையம்
மற்ற தகவல்கள்
வலைத்தளம்UDA Mall
வரலாறு
திறக்கப்பட்டது1976

புடு சென்ட்ரல் அல்லது புடுராயா (ஆங்கிலம்; மலாய்: Pudu Sentral; என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையம், புடு, புடு சாலையில் உள்ள பேருந்து நிலையம் ஆகும். கோலாலம்பூரின் பழமையான பேருந்து நிலையங்களில் புடு சென்ட்ரல் நிலையமும் ஒரு நிலையம் என அறியப்படுகிறது.

முன்பு இந்த நிலையம், புடுராயா முனையம் (ஆங்கிலம்: Puduraya Terminal; மலாய்: Hentian Puduraya) என அழைக்கப்பட்டது. 1976-இல் திறக்கப்பட்ட இந்த நிலையத்திற்கு, தற்போது நீண்ட தூரப் பேருந்துகள் வந்து செல்வதில்லை. அதற்கு மாறாக அவை பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் (Bandar Tasik Selatan Integrated Transport Terminal) எனும் பல்வகை போக்குவரத்து முனையத்திற்குச் செல்கின்றன.

வரலாறு

[தொகு]
புடுராயாவின் உட்பாகம்

புடு சென்ட்ரல் (புடுராயா) 1976-இல் செயல்படத் தொடங்கியது. 2006-ஆம் ஆண்டில், ஏறக்குறைய RM 3 ரிங்கிட் மில்லியன் (அமெரிக்க டாலர் $ 817,000) செலவில் புதுப்பிக்கப்பட்டது. மே 2009-இல் பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் திறக்கப் பட்டதன் மூலம், புடு சென்ட்ரல் நிலையம், கோலாலம்பூர் நகரப் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்களுக்கு மட்டுமே சேவை செய்கிறது.

இன்றைய காலக் கட்டத்தில், மேற்கு மலேசியாவின் தொலைதூர நகரங்களுக்குச் செல்லும் விரைவுப் பேருந்துகள் புடுராயாவிற்கு வருவது இல்லை.[1]

சனவரி 1, 2011 அன்று பண்டார் தாசேக் செலாத்தான் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் (ITT BTS) திறக்கப்பட்ட பிறகு, புடுராயா பேருந்து நிலையத்திற்கு அருகே போக்குவரத்து நெரிசல்கள் குறைந்தன.

கோலாலம்பூர் நகர்ப்புற மாற்ற மையம்

[தொகு]

முன்பு காலத்தில், புடு சென்ட்ரலைப் பயன்படுத்தி வந்த கோலாலம்பூரின் பெரும்பாலான நீண்ட தூரப் பேருந்துகளுக்கு, பண்டார் தாசேக் செலாத்தான் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் சேவைகளை வழங்கி வருகிறது.

RM 52.7 மில்லியன் ரிங்கிட் செலவில் பாரிய சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 16 ஏப்ரல் 2011 அன்று புடுராயா மீண்டும் திறக்கப்பட்டது. 27 ஆகஸ்டு 2011 அன்று, புடுராயா பேருந்து முனையம் அதன் நவீனத் தோற்றத்திற்கு ஏற்ப புடு சென்ட்ரல் என மறுபெயரிடப்பட்டது. அதன் பின்னர், 23 செப்டம்பர் 2012 அன்று, இந்த நிலையம், கோலாலம்பூரின் நகர்ப்புற மாற்ற மையமாக (Urban Transformation Centre) மாற்றம் கண்டது.[2][3][4][5]

பல்வகை போக்குவரத்து முனையம்

[தொகு]
பண்டார் தாசேக் செலாத்தான் பல்வகை போக்குவரத்து முனையத்தின் நுழைவாயில்

9-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ்,  KB04   SP15   KT2  பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம், தீபகற்ப மலேசியாவில் தெற்கு நோக்கிச் செல்லும் விரைவுப் பேருந்து; தொடருந்துகளுக்கான போக்குவரத்து மையமாக மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோலாலம்பூர் சென்ட்ரல்; புடு சென்ட்ரல் ஆகிய நிலையங்களுக்குச் சென்ற பேருந்துகள் 2011-ஆம் ஆண்டில் இருந்து பண்டார் தாசேக் செலாத்தான் நிலையத்திற்கு மாற்றப்பட்டன.

RM 570 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட பல்வகை போக்குவரத்து முனையம், 1 சனவரி 2011 முதல் இயங்குகிறது.

பண்டார் தாசேக் செலாத்தான் முனையம், ஒரே ஓர் ஒருங்கிணைந்த மையமாக இல்லாமல், மூன்று வெவ்வேறு நிலையங்களாக அருகருகே அமைக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

புடு சென்ட்ரல் பேருந்து முனையத்தை  AG8  பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்;  KG17  மெர்டேகா எம்ஆர்டி நிலையம் ஆகிய நிலயங்களில் இருந்து அணுகலாம்.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puduraya Traffic Jam To Be Reduced With New Transport Hub". Bernama. 19 May 2009. பார்க்கப்பட்ட நாள் 21 May 2009.
  2. "RM30.3 Mln To Rejuvenate Puduraya Bus Terminal". Bernama. 19 May 2009. பார்க்கப்பட்ட நாள் 21 May 2009.
  3. "Puduraya Terminal to begin operations tomorrow". The Star (Malaysia)]. 15 April 2011. http://thestar.com.my/metro/story.asp?file=/2011/4/15/central/8484750&sec=central. 
  4. "New look Puduraya is now Pudu Sentral". The Star (Malaysia). 27 August 2011. http://thestar.com.my/news/story.asp?file=/2011/8/27/nation/20110827123801&sec=nation. 
  5. Lee, Regina (23 September 2012). "From Puduraya to UTC". thestar.com.my. http://thestar.com.my/news/story.asp?file=/2012/9/23/nation/20120923071748&sec=nation. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடு_சென்ட்ரல்&oldid=4143706" இலிருந்து மீள்விக்கப்பட்டது