செந்தூல்
செந்தூல் Sentul | |
---|---|
ஆள்கூறுகள்: 3°11′2″N 101°41′31″E / 3.18389°N 101.69194°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
நகரம் | செந்தூல் |
தொகுதி | பத்து |
அரசு | |
• மேயர் | நோர் இசாம் டாலான் |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 51000 |
மலேசியத் தொலைபேசி எண் | +603-9 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
இணையதளம் | www.dbkl.gov.my |
செந்தூல், (மலாய்: Sentul; ஆங்கிலம்: Sentul; சீனம்: 冼都); என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி கூட்டமைப்பில், அமைந்து உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான நகரப் பகுதியாகும்.
இந்த நகரப் பகுதி இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மேற்கு செந்தூல் (Sentul Barat), கிழக்கு செந்தூல் (Sentul Timur) என இரு பிரிவுகள். மலாயா இரயில்சேவை நிறுவனத்தின் தலையாயப் பயிற்சி மையம் இங்கே தான் உள்ளது.
வரலாறு
[தொகு]மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் செந்தூலும் ஒரு பகுதியாகும். செந்தூலில் அதிகமான அளவில் இந்து கோயில்களையும், மாதா கோயில்களையும் காண முடியும்.[1]
1896-ஆம் ஆண்டு பிரித்தானியர்களால் மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, இங்கு தமிழர்கள் அதிகமாக வந்து குடியேறினர். அதனால் தான் இங்கு தமிழர்களை அதிகமாகக் காண முடிகின்றது.[2]
செந்தூல் மீது விமானத் தாக்குதல்
[தொகு]இரண்டாம் உலகப் போரின் போது, 1945 பிப்ரவரி 19-ஆம் தேதி பிரித்தானிய பி-29 ரக விமானங்களால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் செந்தூல் நகரத்தின் மீது குண்டுகள் வீசித் தாக்கப்பட்டது.
அப்படி தாக்கப்பட்ட நகரங்களில் கோலாலம்பூரின் கடைசி நகரங்களில் செந்தூலும் ஒன்றாகும். ஜப்பானியர்களால் செந்தூலில் நிர்வகிக்கப்பட்டு வந்த இரண்டு இரயில் வளாகங்கள்தான் வெடிகுண்டுத் தாக்குதல்களின் இலக்குகள். இதைத் தொடர்ந்து மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.
செந்தூலின் தொடக்கக் கால குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். 1896-ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட இரயில் கிடங்குகள் மற்றும் சேவைப் பணிமனைகளில் பணிபுரிந்தனர்.[3]
செந்தூல் நகர்ப் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]செந்தூல் நகர்ப் பகுதியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 666 மாணவர்கள் பயில்கிறார்கள். 72 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
WBD0175 | செந்தூல் | SJK(T) Sentul[4][5] | செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி | 51000 | கோலாலம்பூர் | 280 | 30 |
WBD0176 | செந்தூல் சாலை | SJK(T) St. Joseph[6][7] | செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி | 51000 | கோலாலம்பூர் | 151 | 17 |
WBD0177 | செந்தூல் | SJK(T) Thamboosamy Pillai[8][9] | தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி | 51000 | கோலாலம்பூர் | 235 | 25 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sentul's history is reflected in its old-world charm". TheStar. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
- ↑ "Sentul - a historic railway town". TheStar. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
- ↑ "Sentul - a historic railway town". TheStar. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
- ↑ "செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி - SJK T Sentul". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி - SJKT SENTUL- BLOGSOPT PENGAWAS". pengawassjktsentul.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி - St Joseph's – a technologically-advanced school". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி - SJKT - Thamboosamy Pillai, Sentul". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ www.rimbun.com.my, Rimbun Capital-. "தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி - SJKT THAMBOOSAMY PILLAI | Rimbun Capital". பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: செந்தூல்