மலாயா வங்கிக் கோபுரம்
மே பேங்க் கோபுரம் Maybank Tower Menara Maybank | |
---|---|
மாற்றுப் பெயர்கள் | மெனாரா மே பேங்க், மே பேங்க் தலைமை அலுவலகம் |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவடைந்தது |
வகை | வணிக அலுவலகங்கள் |
இடம் | 100 துன் பேராக் சாலை, புடு, கோலாலம்பூர், மலேசியா |
கட்டுமான ஆரம்பம் | 1984 |
நிறைவுற்றது | 1987 |
உயரம் | |
கூரை | 243.54 m (799.0 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 50 |
தளப்பரப்பு | 167,300 m2 (1,801,000 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | இசாசு கசுத்தூரி அசோசியேட்சு தாய்செய் கட்டுமான நிறுவனம். |
மே பேங்க் கோபுரம் அல்லது மலாயா வங்கிக் கோபுரம் (ஆங்கிலம்: Maybank Tower; மலாய்: Menara Maybank) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள முதன்மையான வானளாவியும்; அடையாள இடமும் ஆகும்.[1][2]
பழைய கோலாலம்பூர் மாநகர மையத்தின் கிழக்கு எல்லையில் புடுராயா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
இந்தக் கட்டிடம் மலாயா வங்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக உள்ளது. இந்தக் கட்டிடத்தில் மே பேங்க் நாணயவியல் அருங்காட்சியகமும் இடம் பெற்றுள்ளது.
வரலாறு
[தொகு]அறமன்றக் குன்றில் குடியேற்றக் காலத்து அமர்வு நீதிமன்றங்கள் இருந்த இடத்தில் 1984-இல். மே பேங்க் கோபுரம் கட்டத் தொடங்கப்பட்டது; 1987-இல் கட்டுமானம் நிறைவுற்றது.
1995-இல் பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்படும்வரை, இதுவே கோலாலம்பூரிலும் மலேசியாவிலும் மிக உயரமானக் கட்டிடமாக இருந்தது. இதன் உயரம் பெட்ரோனாஸ் கோபுரங்களின் பாதியாக, 244 m (801 அடி) உள்ளது.
கோலாலம்பூர் மாநகரத்தின் வான் பகுதியில் குறிப்பிடத்தக்கதாக இந்தக் கோபுரம் விளங்குகின்றது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Kramer, Greg (2000). SimCity 3000 Prima Official Strategy Guide (in ஆங்கிலம்). Roseville, CA: Prima Games. p. 532. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761529845.
- ↑ "Jadyn's Tower". The Buildings of SIMCITY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-21.
மேலும் காண்க
[தொகு]- பொதுவகத்தில் Maybank Tower (Kuala Lumpur) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Dupré, Judith (1996). Skyscrapers. New York: Black Dog & Loventhal. pp. 96–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-884822-45-2.
- Dupré, Judith (2008). Skyscrapers (2nd ed.). New York: Black Dog & Leventhal. pp. 100–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57912-787-8.