உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்கா

ஆள்கூறுகள்: 3°08′45″N 101°41′20″E / 3.145733°N 101.688906°E / 3.145733; 101.688906
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்கா
Kuala Lumpur Butterfly Park
Taman Rama Rama Kuala Lumpur
Map
அமைவிடம்கோலாலம்பூர், மலேசியா
பொது போக்குவரத்து அணுகல்பசார் செனி தொடருந்து நிலையம்
வலைத்தளம்klbutterflypark.com
கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்காவில் பெரிய அழகான மலேசியாவின் தேசிய பட்டாம் பூச்சி

கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்கா (Kuala Lumpur Butterfly Park) மலேசிய நாட்டின் கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள ஒரு பெரிய பட்டாம்பூச்சி உயிரியல் பூங்காவாகும். மலாய் மொழியில் தாமான் ராமா ராமா கோலாலம்பூர் என்று குறிப்பிடுகிறார்கள். இப்பூங்கா மலேசியாவின் பிரபலமான சுற்றுலா அம்சமாகும்.

பெர்டானா தாவரவியல் பூங்காவிற்கும் கோலாலம்பூர் பறவை பூங்காவிற்கும் அருகில் இந்த கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. பட்டாம்பூச்சி பூங்காவில் மலேசிய நாட்டை தாயகமாகக் கொண்ட உள்ளூர் பட்டாம்பூச்சிகள் பல உள்ளன.

பொது

[தொகு]

5,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள், தாயகம் சாராத தாவரங்கள், பட்டாம்பூச்சி-விருந்தோம்பித் தாவரங்கள் மற்றும் பெரணிச்செடிகள் போன்ற அம்சங்களுடன் 80,000 சதுர அடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தோட்டத்தில் பட்டாம்பூச்சி பூங்கா பரந்து விரிந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகள் பற்றிய தகவல்களுடன் ஒரு கண்காட்சி பகுதியும் இங்கு உள்ளது. பூங்காவின் சுற்றுப்பயணத்தின் முடிவில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு நினைவு பரிசு களஞ்சியமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பூச்சிகள் அருங்காட்சியகம்

[தொகு]

பெருத்த வண்டுகள், விவேரியம் எனப்படும் செயற்கை வளர்ப்பகங்களில் வளர்க்கப்படும் எறும்பு, சிலந்தி போன்ற நீண்ட கால்களும் மெல்லிய உடலமைப்பும் கொண்ட பூச்சிகள், பழமையான ஊர்வன இன்ங்கள் போன்றவற்றின் சேகரிப்பு அருங்காட்சியகம் ஒன்றும் பட்டாம்பூசி பூங்காவில் உள்ளது.[2]

போக்குவரத்து வசதி

[தொகு]

கோலாலம்பூரின் கெலானா செயா தடத்தில் அமைந்துள்ள பசார் செனி இரயில் நிலையத்திற்கு மேற்கில் நடந்தே சில நிமிடங்களில் கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்காவுக்குச் செல்ல முடியும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kuala Lumpur Butterfly Park Malaysia - About Us". klbutterflypark.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2015.
  2. "Photographs of Kuala Lumpur Butterfly Park and its insect museum". Independent Travellers. independent-travellers.com. பார்க்கப்பட்ட நாள் 28 March 2014.

மேலும் காண்க

[தொகு]

மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்

புற இணைப்புகள்

[தொகு]