துன் சம்பந்தன் நிலையம்
MR2 துன் சம்பந்தன் நிலையம் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() ![]() Tun Sambanthan Station | ||||||||||||||||
![]() துன் சம்பந்தன் நிலையத்தின் வெளிப்புறத் தோற்றம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | துன் சம்பந்தன் சாலை - தெபிங் சாலை சந்திப்பு, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் | |||||||||||||||
ஆள்கூறுகள் | 3°7′53″N 101°41′26″E / 3.13139°N 101.69056°E | |||||||||||||||
உரிமம் | கேஎல் இன்பிராசிரக்சர் கூட்டு நிறுவனம் | |||||||||||||||
தடங்கள் | ![]() | |||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்திய நிலையம் | |||||||||||||||
தரிப்பிடம் | ![]() | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ![]() | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | MR2 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 31 ஆகத்து 2003 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
|
துன் சம்பந்தன் நிலையம் (ஆங்கிலம்: Tun Sambanthan Station; மலாய்: Stesen Tun Sambanthan; சீனம்: 敦善班丹站) என்பது மலேசியா, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.
இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[1]
இந்த நிலையம் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் மாவட்டத்தில் உள்ள துன் சம்பந்தன் சாலை 4-இன் தெபிங் சாலைச் சந்திப்பின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த நிலையம் கிள்ளான் ஆற்றின் மேற்குப் பகுதியில், கோலாலம்பூர் மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மலேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு (Malaysian Association of the Blind) அருகிலும் உள்ளது.[2]
இந்த நிலையம் கிள்ளான் ஆற்றைக் கடக்கும் ஒரு பாதசாரி பாலத்திற்கு அருகில் உள்ளதால், அந்தப் பாதசாரி பாலத்தின் வழியாக சையத் புத்ரா சாலையையும் இணைக்கிறது. அந்த வகையில், சையத் புத்ரா சாலை, கிள்ளான் ஆற்றின் எதிரே உள்ள கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது.
பொது
[தொகு]மலேசிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் வீ. தி. சம்பந்தன் அவர்களின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு முக்கிய சாலையான துன் சம்பந்தன் சாலைக்கும், துன் வீ. தி. சம்பந்தனின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை கோலாலம்பூர் சென்ட்ரல் மோனோரெயில் முனையத்தின் அமைவிடமாகவும் திகழ்கிறது.[3]
துன் சம்பந்தன்
[தொகு]துன் சம்பந்தன் அவர்களின் இயற்பெயர் வீராசாமி திருஞான சம்பந்தன் (பிறப்பு: ஜூன் 16, 1919 - இறப்பு: மே 18, 1979). மலேசிய இந்தியர்ச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவிகளை வகித்த இவர், மலேசியாவின் மிக உயரிய விருதான, துன் விருதைப் பெற்ற முதல் தமிழரும் ஆவார்.
அன்றைய மலேசியா (மலாயா) பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு, மலாயா இந்திய மக்களின் சார்பாளராக இலண்டன் சென்று மலாயா விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட்டு வந்த மலாயா நாட்டின் தலைவர்களில், துன் சம்பந்தன் அவர்களும் ஒருவர் ஆவார்.[4]
நிலைய தள அமைப்பு
[தொகு]L2 | தள நிலை | பக்க மேடை |
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR11 தித்திவங்சா நிலையம் (→) | ||
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR1 கோலாலம்பூர் சென்ட்ரல் (←) | ||
பக்க மேடை | ||
L1 | இணைப்புவழி | படிக்கட்டு |
G | அலுவலகம்/தெரு நிலை | கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, மோனோரெயில் நிலையக் கட்டுப்பாடு, கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A |
நுழைவாயில்கள்
[தொகு]இந்த நிலையத்தில் ஒரே ஒரு வெளியேறு வழி மட்டுமே உள்ளது.
துன் சம்பந்தன் கோலாலம்பூர் மோனோரெயில் நிலையம் | ||
நுழைவாயில் | இலக்கு | தோற்றம் |
---|---|---|
A | தெரு நிலை பயணச் சீட்டு அணுகல். தெபிங் சாலை/துன் சம்பந்தன் சாலை |
![]() |
காட்சியகம்
[தொகு]துன் சம்பந்தன் நிலையக் காட்சிப் படங்கள்:
-
நுழைவாயில் 1 (2021)
-
முகப்பு
(2007) -
மின்படிக்கட்டுகள் (2021)
-
நுழைவாயில் 2 (2021)
-
துன் சம்பந்தன் சாலை (2014)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ MR 2 - TUN SAMBANTHAN
- ↑ Campus Location - Methodist College Kuala Lumpur பரணிடப்பட்டது 13 மே 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Monorail Line | MyRapid". www.myrapid.com.my. Archived from the original on 25 September 2012.
- ↑ "No reason to change Jalan Tun Sambanthan's name".
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Tun Sambanthan Monorail Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.