உள்ளடக்கத்துக்குச் செல்

புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′45″N 101°42′40″E / 3.14583°N 101.71111°E / 3.14583; 101.71111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 MR6  புக்கிட் பிந்தாங்
Rapid_KL_Logo | KL Monorail_Logo ஒற்றைத் தண்டூர்தி
Bukit Bintang Monorail Station
புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் (2021)
பொது தகவல்கள்
அமைவிடம்சுல்தான் இசுமாயில் சாலை, புக்கிட் பிந்தாங் சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°8′45″N 101°42′40″E / 3.14583°N 101.71111°E / 3.14583; 101.71111
உரிமம் பிரசரானா மலேசியா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்8  கோலாலம்பூர் மோனோ 
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள் KG18A  புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை MR6  உயர்த்திய நிலையம்
தரிப்பிடம் இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு MR5  கோலாலம்பூர் மோனோ
வரலாறு
திறக்கப்பட்டது31 ஆகத்து 2003; 21 ஆண்டுகள் முன்னர் (2003-08-31)
முந்தைய பெயர்கள்ஏர் ஆசியா–புக்கிட் பிந்தாங் (2015–2019)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
இம்பி
கேஎல் சென்ட்ரல்
 
கோலாலம்பூர் மோனோ
 
ராஜா சூலான்
தித்திவங்சா
அமைவிடம்
Map

புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம் (ஆங்கிலம்: Bukit Bintang Monorail Station; மலாய்: Stesen Bukit Bintang Monorail; சீனம்: 武吉免登单轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், சுல்தான் இசுமாயில் சாலை, புக்கிட் பிந்தாங் சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.

இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2]

இந்த மோனோரயில் நிலையம் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையம் அல்ல (Integrated); இதே நிலையத்தில் மற்றும் ஒரு எம்ஆர்டி நிலையம் உள்ளது. அந்த நிலையம் காஜாங் வழித்தடத்தின் மூலமாக புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் எனும் பெயரில் தனியாக இயங்குகிறது.

பொது

[தொகு]

கேஎல் மோனோரெயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ், இந்த நிலையம், 13 செப்டம்பர் 2015 அன்று விரிவுபடுத்தப்பட்டது. இஸ்கோமி (Scomi) நிறுவனத்தின் தயாரிப்பான இஸ்கோமி சூத்ரா (Scomi SUTRA) 4 பெட்டி மோனோரெயில்களை நிறுத்துவதற்காக அந்த விரிவாக்கம் நடைபெற்றது. மேலும் அண்டை வணிக வளாகங்ககளுக்கு நேரடியாகச் செல்லும் 3 புதிய நுழைவாயில்களும் அந்தப் புதிய நிலையத்தில் இணைக்கப்பட்டன.

புக்கிட் பிந்தாங் சாலையின் பெயரால் புக்கிட் பிந்தாங் நிலையம் பெயரிடப்பட்டது. கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலையங்களில் புக்கிட் பிந்தாங் நிலையமும் ஒன்றாகும்.

பெயரிடும் உரிமைகள் திட்டம்

[தொகு]

2003-ஆம் ஆண்டு திறக்கப்பட்டதில் இருந்து இந்த நிலையம், புக்கிட் பிந்தாங் நிலையம் என்று அழைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டில், மலேசிய குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர்ஏசியாவிற்கு, இந்த நிலையத்தின் உரிமையாளர் பிரசரானா மலேசியா, நிலையப் பெயரிடும் உரிமைகள் திட்டத்தின் கீழ் பெயரிடும் உரிமையை வழங்கியது.

பின்னர், அக்டோபர் 9, 2015 அன்று இந்த நிலையம் ஏர் ஆசியா - புக்கிட் பிந்தாங் என மறுபெயரிடப்பட்டது.[3][4] இருப்பினும், அந்த ஒப்பந்தம் 2019-இல் நிறுத்தப்பட்டது; மற்றும் ஏர்ஏசியா முன்னொட்டைக் கொண்ட அனைத்து அடையாளங்களும் நிலையத்திலிருந்து அகற்றப்பட்டன.

நிலைய தள அமைப்பு

[தொகு]
L2 தள நிலை பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR11  தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில்  MR1  கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1 இணைப்புவழி கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, இணைப்புவழி, கட்டணமில்லாத பகுதி, நகரும் பாதை ⇌ தெரு நிலை. நுழைவாயில் B
G தெரு நிலை சுல்தான் இசுமாயில் சாலை; கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A & C

இந்த நிலையத்தில் ஐந்து வெளியேறும் வழிகள் உள்ளன. அருகிலுள்ள இம்பி நிலையத்தைப் போலவே, இந்த புக்கிட் பிந்தாங் நிலையமும், பல்வேறு கடைவல மையங்களில் இருந்து (இஸ்டார்கில் காட்சியகம், லோ யாட் பிளாசா, கோலாலம்பூர் பெவிலியன், பாரன்கீட் 88, லாட் 10, இம்பி பிளாசா மற்றும் சுங்கை வாங் பிளாசா உட்பட) நேரடியாக நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.

நுழைவாயில்கள்

[தொகு]
புக்கிட் பிந்தாங் கோலாலம்பூர் மோனோரெயில் நிலையம்
நுழைவாயில் இலக்கு தோற்றம்
A தெரு மட்ட அணுகல். சுல்தான் இசுமாயில் சாலை மேற்குப் பக்கம்
லோ யாட் பிளாசா, ஐன் அரேபியா, புக்கிட் பிந்தாங் தெரு, புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் (நுழைவாயில் C)
மேலே செல்லும் மின்படிக்கட்டுகள் மட்டும்
B சுங்கே வாங் - லாட் 10 பாதசாரி இணைப்புப் பாதைக்கான அணுகல் சுங்கே வாங் பிளாசா, லாட் 10
C தெரு மட்ட அணுகல். சுல்தான் இசுமாயில் சாலை கிழக்குகுப் பக்கம்
தெரு மட்ட அணுகல். சுல்தான் இசுமாயில் சாலை மேற்குப் பக்கம் புக்கிட் பிந்தாங் எம்ஆர்டி நிலையம் (நுழைவாயில் D)
மேலே செல்லும் மின்படிக்கட்டுகள் மட்டும்
D லாட் 10-க்கு நேரடி அணுகல்
E சுங்கே வாங்க் - லாட் 10 பாதசாரி இணைப்புப் பாதைக்கான அணுகல் சுங்கே வாங் பிளாசா

அருகாமை இடங்கள்

[தொகு]

காட்சியகம்

[தொகு]

புக்கிட் பிந்தாங் நிலையக் காட்சிப் படங்கள்:

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ABOUT RAPID RAIL". Retrieved May 8, 2020.
  2. "Maharajalela Monorail station is a Malaysian elevated monorail train station that forms a part of KL Monorail line located in Kuala Lumpur and opened alongside the rest of the train service on August 31, 2003". klia2.info. 9 October 2017. Retrieved 6 February 2025.
  3. Boo, Su-Lyn (9 October 2015). "Bukit Bintang monorail station now called ‘AirAsia-Bukit Bintang’". Malay Mail (Petaling Jaya). http://www.themalaymailonline.com/malaysia/article/bukit-bintang-monorail-station-now-called-airasia-bukit-bintang. 
  4. Meng, Yew Choong (12 October 2015). "Name train station after yourself". The Star (Petaling Jaya). http://www.thestar.com.my/News/Nation/2015/10/12/Name-train-station-after-yourself/. 

வெளி இணைப்புகள்

[தொகு]