லோ யாட் பிளாசா
![]() லோ யாட் பிளாசா (2007) | |
இருப்பிடம்: | இம்பி, புக்கிட் பிந்தாங், கோலாலம்பூர், மலேசியா |
---|---|
அமைவிடம் | 3°8′38″N 101°42′35″E / 3.14389°N 101.70972°E |
திறப்பு நாள் | 1999[1] |
கடைகள் எண்ணிக்கை | ~400[1] |
கூரை எண்ணிக்கை | 2 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 28,800 m2 (310,000 sq ft)[1] |
தள எண்ணிக்கை | 7 |
வலைத்தளம் | plazalowyat |
லோ யாட் பிளாசா (ஆங்கிலம்: Plaza Low Yat; சீனம்:劉蝶廣場) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், புக்கிட் பிந்தாங் நகர மையம், இம்பி பகுதியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வணிக வளாகமாகும்.[2]
2009-ஆம் ஆண்டில், லோ யாட் பிளாசாவை, 'மலேசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப வாழ்க்கை முறை மையம்' என்று மலேசிய சாதனைக் களஞ்சியம் (Malaysian Book of Records) பதிவு செய்துள்ளது.[3]
லோ யாட் குழுமத்தின் கீழ் பிளாசா லோ யாட் நிர்வகிக்கப் படுகிறது. பெடரல் விடுதி Federal Hotel, கேபிட்டல் விடுதி, பெடரல் ஆர்கேட் Federal Arcade, மற்றும் பிபிபார்க் BBpark போன்ற வணிகச் சொத்துடைமைகளும் லோ யாட் குழுமத்தின் கீழ் வருகின்றன.[4]
பொது
[தொகு]கோலாலம்பூரின் பல்முனைத் தகவல் தொழில்நுட்ப மையமாக பிளாசா லோ யாட் பரவலாக அறியப்படுகிறது. இந்தத் தொழில்நுட்ப மைய பல்வேறு தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
பன்னாட்டு அலவிலான கைப்பேசிகள், திறன்பேசிகள்; நிலழ்பட காணொலி காணொளிச் சாதனங்கள், கணிணி விளையாட்டுத் தயாரிப்புகள் என அனைத்து வகையான தொழில்நுட்பக் கருவிகளும் இங்கு விற்கப்படுகின்றன. இங்கு கணினி பழுதுபார்ப்பது ஒரு முக்கியமான செயல்பாடாக உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள்
[தொகு]பொதுவாக இந்த மையத்தில் உள்ள ஒவ்வொரு தளமும், ஒரு குறிப்பிட்டத் தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது.[5]
மலிவான விலையில் மென்பொருள் வாங்குவதற்கும்; மற்றும் விளையாட்டுச் சாதனங்களை வாங்குவதற்கும்; விலை பேரம் பேசி விலை ஒப்பீடு செய்வதற்க்கும் இந்த மையம் பெயர் பெற்றது.
லோ யாட் கலவரம் 2015
[தொகு]2015-ஆம் ஆண்டு லோ யாட் பிளாசா பகுதியில் ஒரு கலவரம் நடந்தது.[6] கலவரத்தின் போது ஒரு செய்தியாளர் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர்.
சூலை 12, 2015 அன்று லோ யாட் பிளாசாவில் ஒரு திறன்பேசியை ஏழு ஆடவர், திருடியதாகக் கூறப்படும் ஒரு சண்டையைத் தொடர்ந்து இந்தக் கலவரம் ஏற்பட்டதாகக் மலேசிய காவல் துறையினர் அறிவித்தனர்.[7]
லோ யாட் பிளாசா காட்சியகம்
[தொகு]லோ யாட் பிளாசா லாட்சிப் படங்கள் (2011)
மேலும் காண்க
[தொகு]- புக்கிட் பிந்தாங்
- புக்கிட் பிந்தாங் நகர மையம்
- கோலாலம்பூர் பெவிலியன்
- கோலாலம்பூர் மாநகர மையம்
- கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கம்
- புக்கிட் பிந்தாங் மோனோரெயில் நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Celebrating two decades of revolutionised shopping". Star2.com. 4 August 2019. Retrieved 30 August 2019.
- ↑ Tshiung Han See (21 July 2015). "How to shop like a boss at Low Yat Plaza". Stuff Magazine. https://www.stuff.tv/my/features/how-shop-boss-low-yat-plaza.
- ↑ "PLAZA LOW YAT". Wonderful Malaysia. http://www.wonderfulmalaysia.com/plaza-low-yat-shopping-mall-kuala-lumpur.htm.
- ↑ "Lucky diners win big". New Straits Times. 8 February 2014 இம் மூலத்தில் இருந்து 2 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140302225418/http://www.nst.com.my/streets/central/lucky-diners-win-big-1.479045.
- ↑ "Plaza Low Yat, Kuala Lumpur". Travelfish.org. Retrieved 3 December 2017.
- ↑ Lopez, Greg. "Low Yat Riot In Malaysia -- Racial Or Something Else?". Forbes.com. Retrieved 3 December 2017.
- ↑ Suparmaniam, Suganthi (14 July 2015). "Low Yat brawl: How it all started". Astro Awani. Retrieved 21 September 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Plaza Low Yat தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Plaza Low Yat official website