உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு மேரியட் அடுக்ககம்

ஆள்கூறுகள்: 5°25′53″N 100°19′03″E / 5.431511°N 100.317491°E / 5.431511; 100.317491
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாங்கு மேரியட் அடுக்ககம்
Marriott Residences Penang
Map
பொதுவான தகவல்கள்
வகைஅடுக்குமாடி வீட்டுத் தொகுதி விடுதி
முகவரிகெர்னி டிரைவ், 10250 ஜார்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா
நகரம்ஜார்ஜ் டவுன், பினாங்கு
நாடுமலேசியா
ஆள்கூற்று5°25′53″N 100°19′03″E / 5.431511°N 100.317491°E / 5.431511; 100.317491
நிறைவுற்றது2023
திறக்கப்பட்டது2024
உரிமையாளர்பிஎஸ்ஜி சொத்து (BSG Property)
உயரம்
கூரை223 m (732 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை55
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எஸ்ஏஏ கட்டிடக்கலைஞர்கள் (SAA Architects)
மேம்பாட்டாளர்தாமான் செரி பூங்கா எஸ்டிஎன். பி.எச்.டி.

பினாங்கு மேரியட் அடுக்ககம் (ஆங்கிலம்: Marriott Residences Penang) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரின் கடற்கரைக்கரையில் உள்ள அடுக்ககம் ஆகும்.[1]

இந்த ஜார்ஜ் டவுன் மாநகரத்தின் முக்கிய சாலையான கெர்னி டிரைவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி வீட்டுத்தொகுதி 223 மீட்டர் (732 அடி) உயரம் கொண்டது.

இந்த அடுக்குமாடி மனைகள், 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர், ஜார்ஜ் டவுனில் கட்டப்பட்ட இரண்டாவது உயரமான அடுக்ககம் ஆகும்.

பொது

[தொகு]

உள்ளூர் மேம்பாட்டு நிறுவனமான பிஎஸ்ஜி நிறுவனம் கட்டிய இந்த |அடுக்ககம் 55 மாடிகளைக் கொண்டது. 2023-இல் முழுமையாக உருவாக்கப்பட்டு 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[2]

தென்கிழக்கு ஆசியாவில் மேரியட் இன்டர்நேசனல் நிறுவனத்தின் அடுக்குமாடி மனைக் குடியிருப்புகளில் இந்தக் குடியிருப்பே முதல் இடம் வகிக்கிறது. பினாங்கின் விலையுயர்ந்த அடுக்குமாடி மனைக் குடியிருப்புகள் பிரிவில் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது.

இந்த வானளாவிய கட்டிடத்தில் 223 அடுக்குமாடி மனைகள், 90 தங்கும் விடுதி அறைகள் மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட 302 அடுக்குமாடி மனைகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Choo, Jennifer. "The most expensive condominiums and penthouses in Penang". Tatler Asia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 October 2024.
  2. 2.0 2.1 "Marriott Residences". Penang Property Talk. 24 Jun 2016. பார்க்கப்பட்ட நாள் 6 Nov 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]