உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை ஆரா

ஆள்கூறுகள்: 5°19′26.634″N 100°16′18.66″E / 5.32406500°N 100.2718500°E / 5.32406500; 100.2718500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கை ஆரா
Sungai Ara
பினாங்கு
சுங்கை ஆரா அடுக்குமாடி வீடுகள்
சுங்கை ஆரா அடுக்குமாடி வீடுகள்
Map
சுங்கை ஆரா is located in மலேசியா
சுங்கை ஆரா
      சுங்கை ஆரா
ஆள்கூறுகள்: 5°19′26.634″N 100°16′18.66″E / 5.32406500°N 100.2718500°E / 5.32406500; 100.2718500
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்தென்மேற்கு பினாங்கு தீவு
மாநகரம் ஜார்ஜ் டவுன்
நாடாளுமன்றம்பாயான் பாரு
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
11900
மலேசிய தொலைபேசி எண்+6-04-646XXX
மலேசிய போக்குவரத்து பதிவெண்P
இணையதளம்mbpp.gov.my

சுங்கை ஆரா (மலாய்: Sungai Ara; ஆங்கிலம்: Sungai Ara; சீனம்: 新港; சாவி: سوڠاي ارا) என்பது மலேசியா, பினாங்கு, தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Southwest Penang Island District), பாயான் பாரு மக்களவை தொகுதியில் (Bayan Baru Federal Constituency), ஜார்ஜ் டவுன் மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி ஆகும்.

சுங்கை ஆரா புறநகர்ப் பகுதி பாயான் லெப்பாஸ் (Bayan Lepas) நகருக்கு மிக அருகில் உள்ளது. அத்துடன் வடக்கில் ரேலாவ் (Relau) புறநகர்ப் பகுதி; கிழக்கில் பாயான் பாரு (Bayan Baru) புறநகர்ப் பகுதி; ஆகிய புறநகர்ப் பகுதிகள் எல்லைகளாக உள்ளன.[1]

பொது

[தொகு]

சுங்கை (Sungai) என்றால் மலாய் மொழியில் ஆறு; ஆரா (Ara) என்றால் அத்தி மரம் (Ficus Sycomorus) என்று பொருள் படும்.[2][3]

சுங்கை ஆரா முன்பு வேளாண் பகுதியாக இருந்தது. சுங்கை ஆரா அசல் கிராமம் இன்றும் டத்தோ இசுமாயில் அசீம் சாலை (Jalan Dato Ismail Hashim) மற்றும் தெங்கா சாலை (Jalan Tengah) சந்திப்பில் உள்ளது.[2][3]

அண்மைய காலம் வரை, சுங்கை ஆரா ஒரு கிராமப்புறச் சமூக வளாகமாக இருந்தது. அங்குள்ள மக்கள் காய்கறி பயிரிதலில் ஈடுபட்டு இருந்தனர்.[4]

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்

[தொகு]

பாயான் லெப்பாஸ் தீர்வையற்ற தொழில்துறை மண்டலம் (Bayan Lepas Free Industrial Zone) 1970-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டுகளில் சுங்கை ஆரா ஒரு குடியிருப்பு நகரமாக வளரத் தொடங்கியது.[4]

சுங்கை ஆரா பகுதி, பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு (Penang International Airport) அருகில் உள்ளது. அத்துடன் இந்த நகர்ப்பகுதி, ஜார்ஜ் டவுன் மாநகர்ப் பகுதிக்கு மிக அண்மையில் இருப்பதால் வீடு மனைச் சொத்து விலைகளும் அதிகரித்து வருகின்றன. சுங்கை ஆரா நகரம் பல தொழில் வல்லுநர்களையும் இளம் குடும்பங்களையும் கொண்டுள்ளது.[2][3]

சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி

[தொகு]

சுங்கை ஆரா நகர்ப்புறத்தில் சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி எனும் பெயரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 111 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD3032 சுங்கை ஆரா SJK(T) Sungai Ara[6] சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி 11900 பாயான் லெப்பாஸ் 111 14

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Joint effort to upkeep parks – Metro News The Star Online". www.thestar.com.my. Retrieved 2018-02-17.
  2. 2.0 2.1 2.2 "Double Storey Terrace at Sg. Ara" (in en). https://www.propertyguru.com.my/property-listing/double-storey-terrace-at-sg-ara-for-rent-by-correen-lee-4662578. 
  3. 3.0 3.1 3.2 "Review for Sungai Ara, Penang". PropSocial (in ஆங்கிலம்). Retrieved 2018-02-17.
  4. 4.0 4.1 "Sungai Ara was a rural community where the inhabitants were vegetable farmers". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 12 June 2023.
  5. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. Retrieved 2021-05-30.
  6. "BAYAN LEPAS: SJKT Sungai Ara's efforts to instill United Nations Sustainable Development Goals in its various school activities has earned it a recognition from the Education Ministry". Retrieved 15 April 2022.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_ஆரா&oldid=3735672" இலிருந்து மீள்விக்கப்பட்டது