உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு தாவரவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாங்கு தாவரவியல் பூங்கா
Penang Botanic Gardens
Taman Kebun Bunga
槟城植物园
வகைதாவரவியல் பூங்கா
அமைவிடம்சார்சு நகரம், பினாங்கு, மலேசியா
உருவாக்கப்பட்டது1884 (1884)
நிலைவருடம் முழுவதும் திறந்திருக்கும்

பினாங்கு தாவரவியல் பூங்கா (Penang Botanic Gardens) என்பது மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் ஜார்ஜ் டவுன் நகரத்தில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.[1]

தொடக்கத்தில் இத்தாவரவியல் தோட்டம் 1884 ஆம் ஆண்டில் ஒரு பழைய கற்ச்சுரங்கத்தளத்தில் நிறுவப்பட்டது. பூங்காவின் முதல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சார்லஸ் கர்டிஸ் என்பவரின் மேற்பார்வையில் தொடங்கப்பட்ட இப்பூங்கா ஒரு காலனித்துவ குடியேற்ற காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாகும்.

பினாங்கு தாவரவியல் பூங்கா பினாங்கு மலை உயிர்க்கோள பாதுகாப்பு பகுதியாகும், இப்பூங்கா ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக உயிர்க்கோள பாதுகாப்பு வலையமைப்பில் (WNBR) பட்டியலிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது . மேலும் மலேசியாவின் மூன்றாவது உயிர்க்கோள பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இது உள்ளது .[2]

வரலாறு

[தொகு]
பினாங்கு தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் 1890

தற்போதைய தாவரவியல் தோட்டம் நிறுவப்படுவதற்கு முன்பு பினாங்கு தீவில் இரண்டு தாவரவியல் பூங்காக்கள் இருந்தன.

நறுமணப்பொருள் தோட்டம்(1794-1806)

[தொகு]

சார்சு நகரம் ஆகத்து 1786 இல் பினாங்கு தீவில் நிறுவப்பட்டது. மலாக்கா நீரிணை பகுதியில் டச்சு மேலாதிக்க மசாலா வணிகத்திற்கு போட்டியாக கிழக்கிந்திய கம்பெனியால் சார்சு நகரத்தில் குடியேற்றங்கள் தொடங்கப்பட்டன.

1794 ஆம் ஆண்டில், பினாங்கு தீவில் நறுமண மசாலா தோட்டங்களை நிறுவ கிழக்கிந்திய நிறுவனம் கிறிஸ்டோபர் ஸ்மித்தை பினாங்கிற்கு தாவரவியலாளராக நியமித்தது. முதலில் இலண்டன் கியூ தாவரவியல் பூங்காவில், பயிற்சி பெற்ற ஸ்மித் 1794 ஆம் ஆண்டின் மத்தியில் 10.5 ஹெக்டேர் பரப்பில் ஓர் சிறிய தோட்டத்தை ஆயர் ஈத்தாம் பள்ளத்தாக்கில் உருவாக்கினார். பின்னர் சுங்கை கெலுவாங் பகுதியில் 158 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு பெரிய தோட்டத்தை உருவாக்கினார்.[3] இருப்பினும் இரண்டு தோட்டங்களின் சரியான இடம் தெளிவாக இல்லை.

தற்போதைய தோட்டங்கள்

[தொகு]
பினாங்கு தாவரவியல் பூங்காவில் அழகான பூக்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dzulkifli Abdul Razak (April 2002). "Towards preserving the richness of Malaysia's green heritage". Universiti Sains Malaysia. Archived from the original on 5 March 2007. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.
  2. "Penang Hill Biosphere Reserve, Pulau Pinang – UNESCO". பார்க்கப்பட்ட நாள் 3 January 2022.
  3. David Jones (p.12) (April 2002). "Colonial Botanic Gardens and World Heritage: the significance of the Penang "Waterfall" Botanic Gardens". www.penangstory.net.my. Archived from the original on 22 July 2011. பார்க்கப்பட்ட நாள் 4 November 2008.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)