மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் Malaysian Houses of Parliament Bangunan Parlimen Malaysia | |
---|---|
2006-இல் மலேசிய நாடாளுமன்றம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | நடுவண் அரசு சட்டவாக்கக் கட்டடம் |
கட்டிடக்கலை பாணி | நவீனவியம் |
இடம் | கோலாலம்பூர், மலேசியா |
அடிக்கல் நாட்டுதல் | திசம்பர் 1959 |
கட்டுமான ஆரம்பம் | செப்டம்பர் 1962 |
நிறைவுற்றது | செப்டம்பர் 1963 |
துவக்கம் | 21 நவம்பர் 1963 |
புதுப்பித்தல் | பெப்ரவரி 2004 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 12 (கோபுரக் கட்டங்கள்) 3 (கட்டடங்கள்) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சர் வில்லியம் ஐவர் சிப்லி (மலேசிய பொதுப்பணித் துறை)[1] |
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் (ஆங்கிலம்: Malaysian Houses of Parliament; மலாய்: Bangunan Parlimen Malaysia) என்பது மலேசிய நாடாளுமன்றம் கூடும் கட்டிட வளாகமாகும். இந்தக் கட்டிடம் கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவில், மலேசியத் தேசிய நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
பொது
[தொகு]கட்டிட வளாகம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு பகுதி 3-அடுக்கு பிரதான கட்டிடம்; மற்றும் ஒரு பகுதி 17-அடுக்கு 77-மீட்டர் உயரமான கோபுரம். பிரதான கட்டிடம் மக்களவை; மற்றும் மேலவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மக்களவையினரின் அலுவலகங்கள் கட்டிடக் கோபுரத்தில் அமைந்துள்ளன.
மத்திய அரசு கோலாலம்பூரில் இருந்த காலத்தில் இந்த வளாகம் கட்டப்பட்டது. 1990-களின் பிற்பகுதியிலிருந்து அரசாங்கத்தின் பெரும்பான்மையான நடவடிக்கைகள் புத்ராஜெயாவிற்கு நகர்ந்தாலும், கோலாலம்பூரின் நாடாளுமன்ற மாளிகையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
கட்டுமானம்
[தொகு]மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், 1959 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட பரிந்துரைத்தார். கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. செப்டம்பர் 1962-இல் கட்டுமானம் தொடங்கியது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா; மலேசியாவின் மூன்றாவது மலேசியப் பேரரசர் துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்கூம் சையத் அசன் ஜமாலுல்லைல் அவர்களால், 21 நவம்பர் 1963 அன்று நடைபெற்றது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jennifer Choo (3 July 2021). "Architectural Icon: Bangunan Parlimen Malaysia". Tatler Asia. பார்க்கப்பட்ட நாள் 13 July 2023.
- ↑ The Straits Times: Architect who has evolved own style over the years, 2 November 1963, page 1; accessed 23 February 2014
- ↑ The Straits Times: The big step forward, 2 November 1963, page 1; accessed 23 February 2014