பதிநான்காம் தாலமி
பதிநான்காம் தாலமி இறுதி தாலமிப் பேரரசர் | |||||
---|---|---|---|---|---|
கிரேக்க தாலமி வம்சத்து எகிப்திய பார்வோன் | |||||
ஆட்சிக்காலம் | கிமு 47–44 (ஏழாம் கிளியோபாற்றாவுடன்) | ||||
முன்னையவர் | பதிமூன்றாம் தாலமி | ||||
பின்னையவர் | சிசேரியன் | ||||
பிறப்பு | கிமு 59 | ||||
இறப்பு | 26 சூலை கிமு 44 (15 வயதில் மரணம்) | ||||
துணைவர் | ஏழாம் கிளியோபாற்றா (மூத்த சகோதரி) | ||||
| |||||
பண்டைய கிரேக்கம் | Πτολεμαίος Φιλοπάτωρ | ||||
அரசமரபு | தாலமி வம்சம் | ||||
தந்தை | பனிரெண்டாம் தாலமி |
பதிநான்காம் தாலமி (Ptolemy XIV Philopator[1] (பிறப்பு:கிமு 59 – இறப்பு: கிமு 44) பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதிப் பார்வோன் ஆவார். இவர் பனிரெண்டாம் தாலமியின் மகனும், பதிமூன்றாம் தாலமியின் இளைய சகோதரனும், ஏழாம் கிளியோபாற்றாவின் சகோதரன் மற்றும் கணவரும் ஆவார்.இவர் சிறுவயதில் ஏழாம் கிளியோபாற்றாவை[2] இணை ஆட்சியராகக் கொண்டு, கிமு 47 முதல் கிமு 44 முடிய 3 ஆண்டுகள் எகிப்தை ஆண்டார்.
13 சனவரி கிமு 47-இல் பதிமூன்றாம் தாலமியின் இறப்பிற்குப் பின்னர் பதிநான்காம் தாலமி ஏழாம் வயதில், தனது சகோதரியான ஏழாம் கிளியோபாற்றாவை மணந்து பண்டைய எகிப்தின் அரியணை ஏறினார். பதிநான்காம் தாலமி பெயரவில் மன்னராக இருப்பினும் ஆறாம் கிளியோபாட்ராவே எகிப்தின் ஆட்சியாளராக விளங்கினார்.[3][4] He was about 12 years old when he acceded to the throne.[5] இந்நிலையில் எகிப்தின் மீது படையெடுத்து வந்த ரோமானிய ஆட்சியாளர் சூலியஸ் சீசர் ஏழாம் கிளியோபாற்றாவின் அழகில் மயங்கி, அவருடன் சல்லாபித்து சிசேரியன் என்ற குழந்தையை பெற்றெடுத்தாள்.[6]
கிமு 15 மார்ச் 44 அன்று ஜூலியஸ் சீசர் ரோமில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கிமு 12 ஆகஸ்டு 30 அன்று உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ், சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, ஏழாம் கிளியோபாற்றா எகிப்தின் ஆட்சியாளராக இருந்தார்.[7][8]அகஸ்ட்டஸ் ஆனையின் படி, பதிநான்காம் தாலமி கிமு 26 சூலை 44 அன்று கொல்லப்பட்டார்.[9]
இந்நிலையில் கிளியோபாட்ரா தனது இளவயது மகன் சிசேரியனை பதினைந்தாம் தாலமி எனும் பட்டத்துடன் கிமு 2 செப்டம்பர் 44 அன்று எகிப்தின் அரியணையில் அமர்த்தி, தான் எகிப்தின் காப்பாட்சியாரக இருந்தார்.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வார்ப்புரு:Wikicite
- ↑ "பேரழகி கிளியோபாட்ரா". Archived from the original on 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
- ↑ Mahaffy, John Pentland (2014) [1895]. The Empire of the Ptolemies. Cambridge Library Collection (in ஆங்கிலம்). Cambridge, England and New York: Cambridge University Press. pp. xxiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108078658.
- ↑ Southern, Patricia (2012) [2010]. Antony & Cleopatra: The Doomed Love Affair That United Ancient Rome & Egypt (in ஆங்கிலம்). Stroud, England: Amberley Publishing Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781445608877.
- ↑ Blackaby, Susan (2009). Cleopatra: Egypt's Last and Greatest Queen. Sterling Biographies (in ஆங்கிலம்). New York and London: Sterling Publishing Company, Inc. pp. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781402765407.
- ↑ Holbl, Gunther; Hölbl, Günther (2003) [2001]. A History of the Ptolemaic Empire (in ஆங்கிலம்). Translated by Saavedra, Tina. London and New York: Routledge. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415201452.
- ↑ Caesarion, KING OF EGYPT
- ↑ Caesarion
- ↑ Burstein, Stanley Mayer (2007). The Reign of Cleopatra (in ஆங்கிலம்). Norman, OK: University of Oklahoma Press. pp. xiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780806138718.
- ↑ Bevan, Edwyn (2014) [1927]. A History of Egypt under the Ptolemaic Dynasty. Routledge Revivals (in ஆங்கிலம்). New York and London: Routledge. p. 369. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317682257.
- ↑ Rice, E. E. (2006). Wilson, Nigel Guy (ed.). Encyclopedia of Ancient Greece (in ஆங்கிலம்). New York and London: Routledge. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415973342.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ptolemy XIV Theos Philopator II entry in historical sourcebook by Mahlon H. Smith