உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் முப்பதாம் வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 380–கிமு 343
கொடி of எகிப்தின் முப்பதாம் வம்சம்
முதலாம் நெக்தனெபோவின் சிற்பம்
தலைநகரம்செபென்னிதோஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம்
• பார்வோன் இரண்டாம் நெபாருதை வெளியேற்றுதல்
கிமு 380
• பெலுசியம் போர்
கிமு 343
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்]]
[[எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்]]

எகிப்தின் முப்பதாம் வம்சம் (Thirtieth Dynasty of Egypt - Dynasty XXX) (ஆட்சிக் காலம்:கிமு 380 - கிமு 343) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சமும், எகிப்திய மக்களின் இறுதி வம்சமும் ஆகும். இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 380 முதல் 343 முடிய 43 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 380-இல் இருபத்தி ஒன்பதாம் வம்ச பார்வோன் இரண்டாம் நெபரிடீசை வீழ்த்தி எகிப்தில் முப்பதாம் வம்சத்தை நிறுவியவர் முதலாம் நெக்தனெபோ ஆவார். கிமு 343-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ், எகிப்தின் முப்பதாம் வம்சத்தினரை வென்று, பண்டைய எகிப்தை பாரசீகத்துடன் இணைத்து கொண்டார். அது முதல் எகிப்து பாரசீகத்தின் ஒரு மாகாணமாக விளங்கியது. எகிபதை ஆண்ட பார்சீகப் பேரரசர்களை எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சத்தவர்கள் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

வரலாறு

[தொகு]
முப்பதாம் வம்ச பார்வோன்களின் மம்மியின் முகமூடி

எகிப்தின் முப்பதாம் வம்ச பார்வோன்கள்

[தொகு]
  1. முதலாம் நெக்தனெபோ - கிமு 380-362 [1]
  2. தியோஸ் - கிமு 362 - 360
  3. இரண்டாம் நெக்தனெபோ - கிமு 360- 343[2]

பண்டைய எகிப்திய வம்சங்கள்

[தொகு]

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mark, Joshua J. (2016-10-12). "Late Period of Ancient Egypt - Ancient History Encyclopedia". ancient.eu. Ancient History Encyclopedia. Retrieved 2017-12-21.
  2. Emmanuel K. Akyeampong and Henry Louis Gates, Jr (2012). "Dictionary of African Biographies - Gooogle Books. Oxford University Press. ISBN 9780195382075. Retrieved 2017-12-17.