எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
Appearance
கிமு 1292–கிமு 1189 | |||||||||
தலைநகரம் | தீபை, பின்னர் மெம்பிசு மற்றும் பை-ராமேசஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பார்வோன் | |||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1292 | ||||||||
• முடிவு | கிமு 1189 | ||||||||
|
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் (Nineteenth Dynasty of Egypt (Dynasty XIX) புது எகிப்து இராச்சியத்தை கிமு 1292 முதல் கிமு 1189 முடிய 103 ஆண்டுகள் ஆண்ட இரண்டாவது வம்சம் ஆகும்.[1] பத்தென்பாவது வம்சத்தினரும், இருபதாம் வம்சத்தினர், எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர். இவ்வம்சத்தின் புகழ் பெற்ற மன்னர் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆவார். இரண்டாம் ராமேசஸ் காலத்தின் அல்-உக்சுர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டார். மேலும் கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் பை-ராமேசஸ் எனும் புதிய தலைநகரைக் கட்டினார்.
பண்டைய அண்மை கிழக்கின் இட்டைட்டு பேரரசின் படைகளிடமிருந்து, இவ்வம்சத்தினர் புது எகிப்திய இராச்சியத்தை தற்காத்துக் கொண்டனர்
ஆட்சியாளர்கள்
[தொகு]- முதலாம் ராமேசஸ் - (கிமு 1292 – 1290)
- முதலாம் சேத்தி - (கிமு 1290 – 1279)
- இரண்டாம் ராமேசஸ் - (கிமு 1279 – 1213)
- மெர்நெப்தா - (கிமு 1213 – 1203)
- அமென்மெஸ்ஸி - (கிமு 1203 – 1199)
- இரண்டாம் சேத்தி - (கிமு 1203 – 1197
- சிப்டா - (கிமு 1197 - 1191)
- அரசி டூஸ்ரெத் - (கிமு 1191 - 1189)
படக்காட்சிகள்
[தொகு]பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
[தொகு]- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686) 1 & 2
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) 3 - 7
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055) 8 -
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
இதனையும் காண்க
[தொகு]- அபு சிம்பெல் கோயில்கள்
- எகிப்திய பார்வோன்கள்
- அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்
- துரின் மன்னர்கள் பட்டியல்
- கர்னாக் மன்னர்கள் பட்டியல்
- பலெர்மோ மன்னர்கள் பட்டியல்
- எகிப்தின் வரலாறு
- பண்டைய எகிப்திய அரசமரபுகள்