உள்ளடக்கத்துக்குச் செல்

அமராத்தியப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமராத்தியப் பண்பாடு / நக்காடா I
[[File:
அமராத்தியப் பண்பாடு is located in Egypt
அம்ரா
அம்ரா
|264px|alt=]]
காலம்ஏறத்தாழ் கிமு 4000 — கிமு 3600 [1]
முக்கிய களங்கள்அம்ரா, பதாரி அருகில், தெற்கு எகிப்து
முந்தியதுதஸ்சியப் பண்பாடு, பதாரியப் பண்பாடு, மெரிம்தி பண்பாடு
பிந்தியதுகெர்செக் பண்பாடு (நக்காடா II)

அமராத்தியப் பண்பாடு அல்லது நக்காடா I (Amratian culture, also called Naqada I), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் தொல்பொருள் பண்பாட்டுக் காலம் ஆகும். நக்காடா பண்பாட்டுக் காலத்தைச் சேர்ந்த இப்பண்பாடு, பண்டைய எகிப்தின் தெற்கு எகிப்தில் ஏறத்தாழ கிமு 4,000 முதல் கிமு 3,600 முடிய விளங்கியது.[2]இப்பண்பாட்டை தெற்கு எகிப்தில் பதாரி அருகே உள்ள அம்ரா எனும் தொல்லியல் களத்தின் பெயரால் வழங்கப்படுகிறது.

இப்பண்பாட்டுக் காலத்திற்கு முன்னர் தெற்கு எகிப்தில் தஸ்சியப் பண்பாடு, பதாரியப் பண்பாடு மற்றும் மெரிம்தி பண்பாடுகள் விளங்கியது. இதற்குப் பின் கெர்செக் பண்பாடு எனும் நக்காடா II விளங்கியது.

மேலோட்டப் பார்வை

[தொகு]

அமராத்தியப் பண்பாட்டைக் குறிக்கும் அம்ரா தொல்லியல் களம், தெற்கு எகிப்தில் உள்ள பதாரி தொல்லியல் களத்திற்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அம்ரா தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாடு அமராத்தியப் பண்பாடு எனப்பெயராயிற்று. நக்காடா தொல்லியல் களத்தில் அம்ராவை குறித்துள்ளதால் இப்பண்பாட்டினை முதல் நக்காடா பண்பாடு என்றும் கூறுவர்.[3]வெள்ளைக் கோடுகளுடன் மேற்புறம் கருப்பு வண்ணத்தில் மட்பாண்டங்கள் இக்காலத்தில் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டது. தொல்லியல் அறிஞர் பிளிண்டர்ஸ் பெட்ரீ (Flinders Petrie) வகுத்த கால வரிசைப்படுத்தல் (sequence dating) முறையில் அமராத்திய பண்பாடு எஸ். டி. 30 மற்றும் 39க்கும் இடைப்பட்டது என கருதப்படுகிறது.[4][5]

அமராத்தியப் பண்பாட்டுக் காலத்தில் அடிமைகளைக் கொண்டு பாபிரஸ் எனும் நாணல் புற்களால் செய்யப்பட்ட படகுகளைக் கொண்டு நைல் நதியில் படகுப் போக்குவரத்து மேற்கொண்டனர்.[6] தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்திற்கும் படகுகள் மூலம் நைல் நதி வழியாக வணிகம் மேற்கொண்டதை அறியமுடிகிறது. வடக்கு எகிப்தில் புழங்கிய கல் பாத்திரங்கள் அம்ரா தொல்லியல் களத்திலும் கண்டெடுக்கப்பட்டது.

அமராத்தியப் பண்பாட்டுக் காலத்தைப் போன்று, முன்னர் விளங்கிய பதாரியப் பண்பாட்டுக் காலத்திலும், காப்பர் ஹைராக்சைடு கனிமத்தை நெருப்பிலிட்டு உருக்கி செப்பு மணிகளை உற்பத்தி செய்தனர்.[a] அமராத்தியர்கள் எரிமலை கற்களில் செய்த கண்ணாடிகள் மற்றும் தங்கத்தை எகிப்தின் தெற்கே உள்ள நூபியாவிலிருந்து பெற்றனர்.[3][4]இக்கால மக்கள் பாலைவனச் சோலைகளில் வணிகம் மேற்கொண்டனர்.[3] இப்பண்பாட்டுக் கால மக்கள்தேவதாரு மரங்களை தற்கால லெபனான் நாட்டின் பைப்லோஸ் எனும் துறைமுகப் பகுதியிலிருந்தும், பளிங்குக் கற்களை ஏஜியன் கடற்கரையில் உள்ள பாரோஸ் பகுதியிலிருந்தும், பாறை உப்புகளை (Emery (rock) கிரேக்கத்தின் நக்சஸ் பகுதியிலிருந்தும் பெற்றனர்.[6]

இப்பண்பாட்டுக் கால மக்கள் புதிய கோணத்தில் சூரிய வெளிச்சத்தில் வேக வைத்த செங்கற்களைக் கொன்டு கட்டிடங்கள் கட்டினர்.[7]கூடுதலாக வட்ட வடிவ அழகிய தட்டுகள் இக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டது.[8]

அமராத்திய பண்பாட்டுக் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் விலங்கு தேவதைகளுடன் விளங்கியது. இக்கால மனிதர்கள் பறவைகள் மற்றும் மீன் வடிவ தாயத்துகள் கட்டிக் கொண்டனர். இப்பண்பாட்டுக் கால்த்தில் இறந்த மனிதர்களின் உடலுடன் உணவு, படைக்கலன்கள் மற்றும் செப்பு அணிகலன்களை சேர்த்து கல்லறைகளில் புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.[6]

துவக்க கால அழகிய தட்டுகள்

[தொகு]

வண்டல் கற்களால் அழகிய தட்டுக்கள் முதன்முதலில் பதாரியப் பண்பாட்டுக் காலத்திலும், அமராத்தியப் பண்பாட்டுக் காலத்திலும் செய்யப்பட்டது.

தாடியுடன் கூடிய உருவங்கள்

[தொகு]

அமராத்தியப் பண்பாடு அல்லது நக்காடா I காலத்தில் பல விலங்குகளில் உருவங்கள் தந்ததால் செதுக்கப்பட்டது. சில மனிதர்களின் உருவங்கள் தலைமுடிகளுடன் மற்றும் நீண்ட தாடியுடன் காணப்பட்டது[10] மேலும் மனித உருவங்கள் நீண்ட அங்கியுடன் உள்ளது.[10][11]

பிற தொல்பொருட்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naqada I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

குறிப்புகள்

[தொகு]
  1. சினாய் தீபகற்பம் அல்லது நூபியாவிலிருந்து செப்பு இறக்குமதி செய்திருக்கலாம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hendrickx, Stan (in en). The relative chronology of the Naqada culture: Problems and possibilities [in: Spencer, A.J. (ed.), Aspects of Early Egypt. London: British Museum Press, 1996: 36-69.]. p. 64. https://www.academia.edu/526195. 
  2. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-815034-2.
  3. 3.0 3.1 3.2 Grimal, Nicolas (1992). A History of Ancient Egypt. Blackwell. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-17472-9.
  4. 4.0 4.1 Gardiner, Alan (1964). Egypt of the Pharaohs. Oxford: University Press. p. 390.
  5. Newell, G.D. (2012). The relative chronology of PNC I. A new chronological synthesis for the Egyptian Predynastic. ex.cathedra Press.
  6. 6.0 6.1 6.2 Smith, Homer W. (2015) [1952]. Man and His Gods. Lulu Press. pp. 16–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781329584952.
  7. Redford, Donald B. (1992). Egypt, Canaan, and Israel in Ancient Times. Princeton: University Press. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-03606-3.
  8. Gardiner, Alan (1964). Egypt of the Pharaohs. Oxford: University Press. p. 393.
  9. Isler, Martin (2001). Sticks, Stones, and Shadows: Building the Egyptian Pyramids (in ஆங்கிலம்). University of Oklahoma Press. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8061-3342-3.
  10. 10.0 10.1 Hendrickx, Stan; Adams, Barbara; Friedman, R. F. (2004). Egypt at Its Origins: Studies in Memory of Barbara Adams: Proceedings of the International Conference "Origin of the State, Predynastic and Early Dynastic Egypt", Krakow, 28 August – 1 September 2002 (in ஆங்கிலம்). Peeters Publishers. p. 892. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-1469-8.
  11. Hendrickx, Stan; Adams, Barbara; Friedman, R. F. (2004). Egypt at Its Origins: Studies in Memory of Barbara Adams : Proceedings of the International Conference "Origin of the State, Predynastic and Early Dynastic Egypt", Krakow, 28 August – 1st September 2002 (in ஆங்கிலம்). Peeters Publishers. p. 894. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-1469-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராத்தியப்_பண்பாடு&oldid=3780193" இலிருந்து மீள்விக்கப்பட்டது