சினாய் மலை
Appearance
சினாய் மலை (Ṭūr Sīnāʼ) | |
---|---|
சினாய் மலையின் கொடுமுடிகள் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,285 m (7,497 அடி) |
புடைப்பு | 334 m (1,096 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | சினாய் தீபகற்பம், எகிப்து |
சினாய் மலை (அரபு: جبل موسى), அல்லது கெபல் மூசா அல்லது ஜபல் மூசா (மோசேயின் மலை) எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் தெற்கில் உள்ள ஒருவர் மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 மீற்றர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது.
மலைஅடிவாரத்தில் சுமார் 1200 மீற்றர் உயரத்தில் புனித கதரினா கிறிஸ்தவ மடம் கானப்படுகிறது. மலை உச்சியில் மசூதி ஒன்றும் கிரேக்க மரபுவழி திருச்சபயின் தேவாலயம் ஒன்றும் காணப்படுகிறது. மலை உச்சியில் மோசே கடவுளின் பத்துக் கட்டளைகளை பெற காத்திருந்ததாக கருதப்படும் மோசேயின் குகையும் காணப்படுகிறது. சில ஆய்வாளரின் கருத்துப்படி இது விவிலிய சீனாய் மலையாகும் ஆனால் இது நிருபிக்கப்படவில்லை.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிபயணம்: சினாய் மலை
- படத்தொகுப்பு பரணிடப்பட்டது 2005-11-20 at the வந்தவழி இயந்திரம்