உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெத்
வாட்ஜ், உனத்ஜி
மன்னர் ஜெத்தின் பெயர் பொறித்த சிற்பம்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்10 ஆண்டுகள், கிமு 2980, எகிப்தின் முதல் வம்சம்
முன்னவர்ஜெர்
பின்னவர்மெர்நெய்த், டென்
துணைவி(யர்)மெர்நெய்த், அஹென்நெய்த்
பிள்ளைகள் டென்
தந்தைஜெர்
அடக்கம்கல்லறை எண் Z, உம் எல்-காப், நடு எகிப்து
அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் ஜெத் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு

ஜெத் (Djet), பண்டைய எகிப்தை கிமு 2980-இல் பத்தாண்டுகள் ஆண்ட முதல் வம்சத்தின் நான்காம் மன்னர் ஆவார். ஜெத்தின் ஓரசு பெயர் பாம்பு என்பதாகும். எனவே இம்மன்னரின் பெயர் குறித்த இடங்களில் பருந்துடன் கூடிய பாம்புச் சின்னம் இருக்கும்.

மன்னர் ஜெர்ரின் மகனான ஜெத் தனது சகோதரிகளான மெர்நெய்த், அஹென்நெய்த் ஆகியோர்களை மணந்தவர். மன்னர் ஜெத்திற்கும்-அரசி மெர்நெய்த்திற்கும் பிறந்தவரே இளவரசன் டென். டென் சிறுவனாக இருக்கும் போதே மன்னர் ஜெத் இறந்து விடுகிறான். எனவே தனது இளம் மகன் டென்னை அரியணையில் அமர்த்திய மெர்நெய்த், டென்னின் காப்பாட்சியாராக எகிப்தை ஆட்சி செய்கிறார்.

கல்லறை

[தொகு]
மன்னர் ஜெத் மற்றும் அரசவை பிரபுவின் பெயர் பொறித்த பீங்கான் பாத்திரத்தின் உடைந்த பகுதி
மன்னர் ஜெத்தின் கல்லறை எண் Zஇல் கிடைத்த கல்வெட்டு, உம் எல்-காப், நடு எகிப்து

நாடு எகிப்தின் உம் எல்-காப் எனுமிடத்தில் கல்லறை எண் Z-இல் மன்னர் ஜெத் மற்றும் அரசி மெர்நெய்த் கல்லறைகள் உள்ளது. இக்கல்லறையில் மன்னர் ஜெத் உருவ சிறபம், பருந்தை சுற்றி வளைத்த பாம்பின் சிற்பம் கண்டுபிடிககப்பட்டது. மேலும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. [2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alan H. Gardiner: The royal canon of Turin
  2. Baker, Darrell D. (2008). Encyclopedia of the Pharaohs Volume 1: Predynastic to the Twentieth Dynasty 3300-1069 BC. Egypt: The American University in Cairo Press. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-416-221-3.

உசாத்துணை

[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெத்&oldid=3448992" இலிருந்து மீள்விக்கப்பட்டது