ரெமான் இராச்சியம்
ரெமான் இராச்சியம் Reman Kingdom Kerajaan Reman كراجأن رمان รามัน | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1810–1902 | |||||||||||
நிலை | பட்டாணி இராச்சிய சுயாட்சி சயாமிய பாதுகாப்பு | ||||||||||
தலைநகரம் | கோத்தா பாரு | ||||||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் மொழி, ரெமான் மலாய் மொழி | ||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
அரசர் | |||||||||||
• 1810–1836 | துவான் தோக் நிக் தோக் லே/துவான் மன்சூர் | ||||||||||
• 1849–1867 | துவான் நிக் உலு/துவான் குன்டூர் | ||||||||||
• 1867–1875 | துவான் தீமோர் | ||||||||||
• 1875–1901 | துவான் ஜாகோங்/துங்கு அப்துல் கன்டீஸ் | ||||||||||
வரலாறு | |||||||||||
• முன்னாள் பட்டாணி இராச்சியம் மறுசீரமைப்பு | 1810 | ||||||||||
1902 | |||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | தாய்லாந்து மலேசியா |
ரெமான் இராச்சியம் (மலாய் மொழி: Kerajaan Reman; ஆங்கிலம்: Kingdom of Reman; Kingdom of Rahman ஜாவி: كراجأن رمان ; தாய் மொழி: รามัน) என்பது வடக்கு மலாய் தீபகற்பத்தில் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட முன்னாள் மலாய் இராச்சியம் ஆகும்.
இந்த இராச்சியம் 1810-ஆம் ஆண்டில் இருந்து 1902-ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்தது. சயாம் நாட்டின் பட்டாணி இராச்சியத்தின் ஏழு ஆளுமைப் பகுதிகளில் ரெமான் இராச்சியமும் ஒன்றாகும்.
பட்டாணி இராச்சியத்தின் பிரபுக்களில் ஒருவரான துவான் தோக் நிக் தோக் லே எனும் துவான் மன்சூர் (Tuan Mansur) என்பவர், 1810 இல் ரெமான் இராச்சியத்தில் அரியணை ஏறினார்.
பொது
[தொகு]சயாம் என்பது தாய்லாந்து நாட்டின் பழைய பெயராகும். 1939-ஆம் ஆண்டு வரை தாய்லாந்து நாடு, சயாம் என்று அழைக்கப்பட்டது.[1]
1939 சூன் 24-ஆம் தேதி தாய்லாந்து என்பது சான்றுரிமை பெயராக மாற்றம் கண்டது. இருப்பினும் மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்து எனும் சொல்லுக்கு மாற்றப்பட்டது.[2]
தற்போது ரெமான் இராச்சியம், மலேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு இடையில் பிரிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தாய்லாந்து நாட்டின் மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் யாலா மாநிலத்தின் ராமான் மாவட்டம்; மலேசியா நாட்டின் உலு பேராக் மாவட்டம், ஜெலி மாவட்டம், குவா மூசாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பிரிந்துள்ளது.
வரலாறு
[தொகு]ரெமான் இராச்சியத்தின் பெயர் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி சொல்லான ராமா என்பதில் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம். மலாய் மொழியில் ராமாய் எனும் சொல், அதிக மக்கள் என்பதைக் குறிப்பதாகும்.
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அப்பகுதியில் பெருகி வந்த குடியேற்றத்தின் பெயரால் அவ்வாறு பெயரிடப்பட்டு இருக்கலாம். 1826-இல், சயாமியர்களுக்கு வரி செலுத்திய பதினான்கு அரசியல் அமைப்புகளில் ரெமான் இராச்சியம் ஓர் அமைப்பு எனவும் அறியப்படுகிறது.[3][4]
துவான் தோக் நிக் தோக் லே
[தொகு]19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பட்டாணி இராச்சியத்தின் புஜுட் (Pujut), ஜாலோர் (Jalor), லெகே (Legeh) ஆகிய நிலப்பகுதிகளில் இருந்து ஒதுக்கப்பட்ட பிரதேசத்தில் ரெமான் இராச்சியம் நிறுவப்பட்டது.[5]
இது 1810-ஆம் ஆண்டில், துவான் தோக் நிக் தோக் லே (Tuan Tok Nik Tok Leh) என்பவரின் கீழ் ஒரு தனிஅரசாக உருவானது. துவான் தோக் நிக் தோக் லே என்பவர் துவான் டோக் நிக், துவான் மன்சோர் (Tuan Mansor) என்றும் அழைக்கப்படுகிறார். அவர் ஒரு பட்டாணி இராச்சியத்தின் பிரபு ஆகும்.
சுல்தான் முகம்மது ராஜா பாக்கார்
[தொகு]அப்போது சுல்தான் முகம்மது ராஜா பாக்கார் (Muhammad Raja Bakar) என்பவர் பட்டாணி இராச்சியத்தின் அரசராக இருந்தார். இவரின் ஆட்சியின் போது, ரெமான் இராச்சியப் பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை நிர்வகிக்க துவான் மன்சோர் நியமிக்கப்பட்டார். [3]
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அவரும் அவரின் குடிமக்களும் குரோ பீடபூமியில் குடியேறினர். 1785-ஆம் ஆண்டில், சயாமியர்கள் பட்டாணி இராச்சியத்தை மீண்டும் கைப்பற்றினர். அதன் விளைவாக, வடக்கே உள்ள பட்டாணி சமவெளியில் உள்நாட்டு அமைதியின்மை நிலவியது. அங்கு இருந்த மக்கள் பெருமளவில் வெளியேறினர்.[4]
சயாம் படையெடுப்பு
[தொகு]1808-ஆம் ஆன்டில், துவான் மன்சோர், ரெமான் இராச்சியப் பகுதிக்கு அதிக அரசியல் சுயாட்சி கிடைப்பதற்கு ஆர்வம் கொண்டார். பட்டாணி மேலாதிக்கத்தில் இருந்து விடுபட ரெமான் இராச்சியத்தின் விடுதலைக்கான தன் நடவடிக்கைகளைத் தொடங்கினார். அந்த விடுதலைப் பிரசாரம் ஓர் உள்நாட்டுப் போராக மாறியது.
இதன் தொடர்ச்சியாக, சயாமியர்கள், பட்டாணி இராச்சியத்தைத் தாக்குவதற்குத் தம் படைகளை அனுப்பினர். அந்தத் தாக்குதலில் சயாமியர்கள், வெற்றிபெற்றனர். மேலும் அந்தத் தாக்குதலினால் பட்டாணி இராச்சியம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.[5] சயாமியர்கள் பின்னர் 1810-இல் பட்டாணியை 7 பிரிவுகளாகப் பிரித்து ஒரு கூட்டமைப்பாக மறுசீரமைப்புச் செய்தனர்.
மன்னராட்சிக்கு விசுவாசம்
[தொகு]புதிய கூட்டமைப்பில் லெகே (Amphoe Legeh), நோங்சிக் (Amphoe Nong Chik), பட்டாணி (Patani Kingdom), ரெமான், சைபுரி (Amphoe Sai Buri), யாலா (Yala province) மற்றும் யாரிங் (Amphoe Yaring) ஆகிய 7 பகுதிகள் இருந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் உயர்நிலைச் சுயாட்சி வழங்கப்பட்டது; மற்றும் நிர்வாக அதிகாரங்கள் மலாய் மன்னர்களுக்கு வழங்கப்பட்டன.
உள்ளூர் வருவாயில் ஒரு பகுதி சயாமுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. மன்னராட்சிக்கு விசுவாசம் வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது; மற்றும் சயாமியர்களுக்கு எதிரான எந்தவொரு கிளர்ச்சியிலும் ஈடுபடக் கூடாது எனவும் வரையறுக்கப்பட்டது. துவான் மன்சோர், ரெமான் இராச்சியத்தின் ஆட்சியாளராக உறுதிப்படுத்தப்பட்டார்.[4]
பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை 1909
[தொகு]1909 மார்ச் 10-ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திற்கும் சயாம் இராச்சியத்திற்கும் இடையே பாங்காக்கில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு பிரித்தானிய-சயாமிய உடன்படிக்கை (1909) அல்லது பாங்காக் ஒப்பந்தம் (1909) (Anglo-Siamese Treaty of 1909 அல்லது Bangkok Treaty of 1909) என்று பெயர்.[6][7]
இந்த ஒப்பந்தத்தின் மூலமாகப் புதிய மலேசியா-தாய்லாந்து எல்லை நிறுவப்பட்டது. இப்போதைய பட்டாணி, நாரதிவாட், சொங்காலா, சத்துன், யாலா ஆகிய பகுதிகள் தாய்லாந்து நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் நிலை நிறுத்தப் படுத்தப்பட்டன.[8] கெடா மாநிலம், பெர்லிஸ் மாநிலம், கிளாந்தான் மாநிலம், திராங்கானு மாநிலம் எனும் மலாய் மாநிலங்களைத் தாய்லாந்து அரசாங்கம் பிரித்தானிய மலாயா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.[9]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "After the short-lived kingdom of Sukhothai founded in 1238, a unified Thai kingdom (Ayutthaya) was established in the mid-14th century; it was known as Siam until 1939. Thailand is the only southeast Asian country never have been taken over by a European power". www.nationsonline.org. பார்க்கப்பட்ட நாள் 26 September 2022.
- ↑ history.htm Thailand (Siam) History, CSMngt-Thai.
- ↑ Tiki Mambang 2016
- ↑ 4.0 4.1 4.2 Boon 2010
- ↑ 5.0 5.1 Orang Kelantan 2017
- ↑ U.S. Department of State, Bureau of Intelligence and Research, Office of the Geographer, "International Boundary Study: Malaysia - Thailand Boundary," No. 57 பரணிடப்பட்டது 2006-09-16 at the வந்தவழி இயந்திரம், 15 November 1965.
- ↑ Siam. Treaty with Great Britain பரணிடப்பட்டது 2024-04-02 at the வந்தவழி இயந்திரம் Hamilton King. 13 May 1909.
- ↑ Great Britain, Treaty Series, No. 19 (1909)
- ↑ Annexed territories
நூல்கள்
[தொகு]- Amal Espraza (2017), Sejarah Dan Asal Usul Gerik, Perak
- Boon, Raymond (2010), The Raja States (Muang), Ma-lai-sia lah
- Dewan Bahasa dan Pustaka, Legeh
- Dolasoh, DJ (2017), Istana kayu lebih 100 tahun, Harian Metro
- Hazuki. R (2017), Loghat Patani Batu Kurau Dimartabatkan Dalam Buku Keresing Kerenyeh
- Khairul (2017), Chapter 3: The Government of Pattani in the period of Decline, History of Pattani
- Khairul (2016), Tokoh-tokoh pejuang Melayu Pattani, Sejarah Kerajaan Melayu Pattani
- Muhd Nur Iman Ramli (1980), Raja Bersiung, Publishing House Sdn. Bhd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-411-909-6
- Orang Kelantan (2017), Legeh Dan Reman, Terpahat Dalam Sejarah Kelantan, archived from the original on 2019-02-16, பார்க்கப்பட்ட நாள் 2024-09-09
- Rahul (2 January 2019), Pengkalan Hulu Dahulunya Ada Negeri Reman Yang Berdaulat
- Ruxton, Ian (2016), The Diaries of Sir Ernest Mason Satow, 1883-1888: A Diplomat In Siam, Japan, Britain and Elsewhere, Lulu.com, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-136-546-2429
- Sembangkuala (2010), The state of Reman in Hulu Perak
- Thailand.org, Siam FLag - Reman
- Tiki Mambang (2016), Sejarah Itu Teladan: Asal Usul Reman
- Thamsook Numnoncla (1971), The First American Advisers in Thai History (PDF)