உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெகாய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகாய் மொழி
Jahai Language
Bahasa Jahai
Jehai
Orang Asli
நாடு(கள்) மலேசியா  தாய்லாந்து
பிராந்தியம் பேராக், கிளாந்தான்
இனம்1,800 (2008)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,000 மலேசியா  (2006)[1]
அவுஸ்திரேலிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-3jhi
மொழிக் குறிப்புjeha1242[2]

ஜெகாய் மொழி (ஆங்கிலம்: Jahai Language; மலாய்: Bahasa Jahai) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின், அசிலியான் மொழிகள்; ஜெகாய மொழிகள் எனும் 2 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[3]

இந்த மொழி ஜெகாய மொழிகளின் (Jahaic Languages) வழித்தோன்றல் மொழிகளில் ஒன்றாகும். ஜெகாய் மொழி, மலேசியாவின் அசிலியான் மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. ஜெகாய் மக்களின் (Jahai people) முதனமை மொழியாகப் பேசப்படுகிறது.[4]

ஜெகாய் மக்கள்

[தொகு]

ஜெகாய் மக்கள் என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் பேராக், கிளாந்தான் மாநிலங்களில்; மற்றும் தாய்லாந்தின் சில பகுதிகளில் காணப்படும் செமாங் மக்கள் குழுவைச் சார்ந்த பழங்குடி மக்கள் ஆவார்கள்.[5]

இவர்கள் கருமை நிறத் தோல் கொண்டவர்கள்; பெரும்பாலும் சுருள் முடிகள்; மற்றும் ஆசிய முகப் பண்புகளைக் கொண்டுள்ளனர்.[6] வேட்டையாடுதல் இவர்களின் பாரம்பரியத் தொழில்; மற்றும் எப்போதாவது பயிரிடுதல் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள்.[7]

நாடோடி வாழ்க்கை

[தொகு]

பாரம்பரியமாக நாடோடிகளாக வாழும் ஜெகாய் மக்கள், பேராக் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒரு பகுதியாக விளங்கும் தெமாங்கூர் அரச பெலும் தேசியப் பூங்கா (Royal Belum State Park) பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் தனிமையில் வாழ்வதையே விரும்புகின்றனர். மேலும் இவர்களின் குடியிருப்புகளில் சாலைகள், பள்ளிகள், உடல்நலச் சேவைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் போன்றவை பெரும்பாலும் இல்லை.[8]

கெஜார் ஆற்றங்கரையில் (Kejar River) உள்ள கிராமங்களில் உள்ள ஜெகாய் மக்களின் இறப்பு விழுக்காடு குழந்தைகளில் 50% வரை அதிகமாக இருந்தது. இது ஒரு மர்ம நோயான செரவான் நோய் என அறியப்படுகிறது. இந்த நோயினால் அங்குள்ள மக்கள் தொகை 600-இல் இருந்து 400 ஆகக் குறைந்தது.[9][10]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஜெகாய் மொழி
    Jahai Language
    Bahasa Jahai
    at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Jehai". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Burenhult, Niclas (2005). A Grammar of Jahai (PDF). Pacific Linguistics 566. Canberra: Pacific Linguistics, The Australian National University. எண்ணிம ஆவணச் சுட்டி:10.15144/pl-566. hdl:1885/146729. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85883-554-1.
  4. "WALS Online - Language Jahai". wals.info. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  5. "Jahai: A world of smells | UnravellingMag.com". Unravel. 25 March 2023. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
  6. Helen Oon (2008). Malaysia. New Holland Publishers. pp. 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-18-453-7971-1.
  7. Douglas Richardson (2017). International Encyclopedia of Geography, 15 Volume Set: People, the Earth, Environment and Technology. John Wiley & Sons. p. 2240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-04-706-5963-2.
  8. "Proceedings of the 2nd International Conference on Human Capital and Knowledge Management" (PDF). ICHCKM. 2015. p. 168. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  9. Shanjeev Reddy (16 February 2016). "The Curse of Serawan". R.AGE. http://rage.com.my/dead-and-forgotten/. 
  10. "Situation of the right to health of indigenous peoples in Asia". Asia Indigenous Peoples Pact. 1 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.

மேலும் படிக்க

[தொகு]
  • Kruspe, N., N. Burenhult & E. Wnuk. (2014). "Northern Aslian". In: P. Sidwell & M. Jenny (eds.). The Handbook of Austroasiatic languages. Brill Publishers. pp. 419-474.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகாய்_மொழி&oldid=4088974" இலிருந்து மீள்விக்கப்பட்டது