உள்ளடக்கத்துக்குச் செல்

காயான் மூரிக் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயான் மூரிக் மொழிகள்
Kayan Murik Languages
Kayan
Bahasa-bahasa Kayan Murik
இனம் காயான் மக்கள்
புவியியல்
பரம்பல்:
போர்னியோ தீவு
 இந்தோனேசியா
 மலேசியா
மொழி வகைப்பாடு: அவுஸ்திரேலிய
 மலாய-பொலினீசியம்
  வடக்கு போர்னியோ மொழிகள்
   காயான் மூரிக் மொழிகள்
Kayan Murik Languages
Kayan
முதனிலை-மொழி: புரோட்டோ காயான் மொழி
துணைப்பிரிவு:

காயான் மூரிக் மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Kayan Murik; ஆங்கிலம்: Kayan Murik Languages; சீனம்: 卡扬-穆里克语言) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் ஒரு மொழிக்குழு ஆகும்.

காயான் மூரிக் மொழிக்குழுவைச் சார்ந்த மொழிகளை, போர்னியோவில் காயான் மக்கள், மோரேக் பாராம் மக்கள், பகாவ் மக்கள் பேசுகிறார்கள்.

அதே வேளையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாவ் மலையடிவாரத்தில் வாழும் பூர்வீகக் குடிமக்களும் காயான் மூரிக் மொழிக் குழுவைச் சார்ந்த மொழிகளைப் பேசுகிறார்கள்.

காயான் மொழி

[தொகு]

மலாய-பொலினீசிய மொழிகளில் காயான்-மூரிக் மொழி துணைப் பிரிவுகளில் ஒன்றான காயான் மொழி, மலேசியா, சரவாக் மாநிலத்தின் காயான் இன மக்களின் முதன்மை மொழியாக உள்ளது.

காயான் மொழி உள்ளூர் வணிக மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பகாவ் மொழி பேச்சுவழக்கு மொழிகளின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

காயான் மக்கள்

[தொகு]

காயான் மக்கள் (Kayan People) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் வாழும் பழங்குடிகள் மக்களாகும். காயான் மக்கள் தங்களின் அண்டைய பகுதி மக்களான கென்னியா பழங்குடியினரை (Kenyah Tribe) போன்று, ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.[1]

காயான் மக்கள்; அப்போ காயான் மக்கள் (Apo Kayan People) குழுவின் கீழ், மற்றொரு குழு மக்களான பகாவ் மக்கள் (Bahau People) எனும் இனக் குழுவினருடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kayan in the Encyclopædia Britannica பரணிடப்பட்டது 14 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம், retrieved on 12 August 2006, from Encyclopædia Britannica Premium Service.

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Kaipuleohone archived materials of Kayan from the Robert Blust collection (RB2-003-A, RB2-003-C).
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயான்_மூரிக்_மொழிகள்&oldid=4090355" இலிருந்து மீள்விக்கப்பட்டது