உள்ளடக்கத்துக்குச் செல்

கெலாபிட் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெலாபிட் மொழி
Kelabit Language
Bahasa Kelabit
நாடு(கள்) மலேசியா
பிராந்தியம்போர்னியோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
4640  (2000–2011)
ஆஸ்திரோனீசிய
  • மலாய-பொலினீசியம்
    • வடக்கு போர்னியோ மொழிகள்
      • வடக்கு சரவாக் மொழிகள்
        • அப்போ துவாட் மொழி
          • கெலாபிட் மொழி
            Kelabit Language
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kzi
மொழிக் குறிப்புkela1258[1]

கெலாபிட் மொழி, (மலாய்: Bahasa Kelabit; ஆங்கிலம்: Kelabit Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள கெலாபிட் மக்களின் (Kelabit People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும்.

இந்த மொழி போர்னியோவில் மிகச்சிறிய இனத்தவரால் பேசப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி கெலாபிட் மொழியை 4640 பேர் மட்டுமே பயன்படுத்துவதாக அறியப்படுகிறது.

கெலாபிட் மக்கள்

[தொகு]

கெலாபிட் மக்கள், போர்னியோ சரவாக்; வடக்கு கலிமந்தான் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடி தயாக்கு மக்கள் (Dayak People) ஆகும். லுன் பாவாங் (Lun Bawang), லுன் டாயே (Lun Dayeh), தெற்கு மூருட் (Southern Muruts) போன்ற பிற இனக்குழுவினர் பெரும்பாலும் கெலாபிட் மக்களுடன் தொடர்பு உடையவர்கள்.[2]

அண்டை நாடான புரூணையிலும் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களுக்கு லுன் பாவாங் (Lun Bawang) பழங்குடி மக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1920-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், கெலாபிட் மக்கள் தங்களின் சமூகத் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தலை வேட்டை (Headhunting) எனும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.[3]

கெலாபிட் மக்கள் வாழும் நிலப் பகுதி சரவாக் - கலிமந்தான் எல்லைக்கு அருகில் பாரியோ நிலப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. மிரி நகருக்கு கிழக்கே 178 கி.மீ. தொலைவில் உள்ளது.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Kelabit". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. Bala, Poline. "A Brief Profile: The Kelabit of the Kelabit Highlands". University Malaysia Sarawak. Archived from the original on 18 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
  3. Batu Bala, Sagau (2014). Kelabit's story of the great transition. PartridgeIndia. pp. 220–221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482897425. பார்க்கப்பட்ட நாள் 24 May 2017.
  4. Bala, Poline. "A Brief Profile: The Kelabit of the Kelabit Highlands". University Malaysia Sarawak. Archived from the original on 18 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.

சான்றுகள்

[தொகு]


மேலும் படிக்க

[தொகு]
  • Asmah Haji Omar (1983). The Malay Peoples of Malaysia and Their Languages. Kuala Lumpur: Art Printing Works.
  • Blust, Robert (2016). Kelabit-Lun Dayeh Phonology, with Special Reference to the Voiced Aspirates. Oceanic Linguistics 55 (1): 246-277.
  • Bolang, Alexander & Tom Harrisson (1949). ‘Murut and related vocabularies with special reference to North Borneo terminology’. Sarawak Museum Journal 5: 116-124
  • Douglas, R. S. (1911). ‘A comparative vocabulary of the Kayan, Kenyan and Kelabit dialects’. Sarawak Museum Journal 1 (1): 75-119.
  • Galih, Balang (1965). Kapah Ayo’ Tana’ Inih Pangah Penudut Guma Nepeled. How the World was Made by Guma Nepeled: A Kelabit-Murut Story. The Sarawak Gazette, May 31, 152.
  • Hemmings, Charlotte (2016). The Kelabit Language, Austronesian Voice and Syntactic Typology. PhD Dissertation, Department of Linguistics, SOAS, University of London. [1]
  • Martin, Peter W. & Eileen Yen (1994). Language use among the Kelabit living in urban centres. In Peter W. Martin (ed.), Shifting Patterns of Language Use in Borneo, 147 163. Williamsburg VA: Borneo Research Council.

வெளி இணைப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலாபிட்_மொழி&oldid=4085446" இலிருந்து மீள்விக்கப்பட்டது